சிங்கப்பூர் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ சதசண்டி மஹா யாகம் நடைபெற்றது. ஸ்ரீ சண்டிகா தேவியின் தேவி மகாத்மியப் பாராயணத்தை100 முறை பாராயணம் செய்து பத்து முறை ஹோமம் செய்தால் அது சதசண்டி மஹா யாகம்.

பிரிஸ்பேனைச் சேர்ந்த சுப்பராமன்- ஜெயஶ்ரீ தம்பதிகளின் புதல்வியும், மயூராலயா நாட்டியப்பள்ளியின் மாணவியுமான செல்வி மேகாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆறாவது ஆண்டாக நடத்திய கம்பன் விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த வாசுகி மனோகரன், வழக்காடு மன்றத்தை நீதிபதியாக நடத்தி, பின் “ தருமம் அண்ணான் தனை உற்றான் “ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

ஆக்லாந்தில் குருமகராஜ் ஸ்ரீ ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் சீடரும், பக்தி கலாச்சாரத்தை தன் நாமசங்கீர்த்தனத்தால் பரப்பி வருகின்ற வெங்கடாச்சலத்தின் புதல்வருமான தீரஜ் வெங்கடாச்சலத்தின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் நடைபெற்றது.

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ சீதா ராமர் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. தலைமை அர்ச்சகர் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்ர் திருமாங்கல்யதாரணம் செய்து தெய்வீகத் திருமணத்தை நடத்தி வைத்தார்

சான் ஆண்டோனியோ தமிழ் சமூக மக்கள் நவராத்திரி விழாவினை மிகச் சிறப்பாக கொண்டாடினர். முதல் முதலாக கொலு பொம்மைகளை வரிசையாக படிகளிலும், விதவிதமான தீம்களிலும் பார்த்த குழந்தைகள் அசந்துவிட்டனர்

ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி கொலுவில், இவ்வருடம் உலகறிந்த அத்திவரதர் வருடம் என்பதால் 3 டி முறையில் தெப்பக்குளம் போல அமைத்து, அதில் அத்திவரதர் இருப்பதுபோல அமைக்கப்பட்டுள்ளது.

மலேசிய, பேரா மாநில நிலை இணைப்பாட விருதளிப்பு விழாவில் பூலோ ஆக்கார் தோட்டத்தமிழ்ப்பள்ளிக்கு முதல் நிலை விருதுக்கான கேடயம், சான்றிதழ், 500 ரிக்கட் ஆகியவற்றை தெபிங் திங்கி சட்ட மன்ற உறுப்பினர் அஜிஸ் பின் பாரி வழங்கினார்.

கோலாலம்பூரில் வெளிநாடுவாழ் தமிழர்கள் (இந்திய குடியுரிமை) சங்கம் சார்ர்பாக நடைபெற்ற தீபாவளி சந்தையில் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு, கலாச்சார உடைகள், கைவினை பொருட்கள், வீட்டு அலங்கார பொருள் அரங்கங்களை இல்லத்தரசிகள் அமைத்திருந்தனர்.

தொபாயோ ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலயத்தில் வெள்ளைத் தாமரையில் வீணை ஏந்தி கலைமகள் எழுந்தருள, சிவாச்சார்யார்கள் மழலையர்க்கு திருமந்திரம் ஓதி வித்யாரம்பம் செய்து வைக்க, நடனமணிகள் நாட்டியாஞ்சலி சமர்ப்பித்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10

ஆஸ்திரேலியத் தலைநகரில்

கான்பெர்ரா: ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெர்ராவில் உள்ள காமன்வெல்த் பூங்காவில் ஆஸ்திரேலிய வசந்த கால பெரிய கொண்டாட்டமான மலர்த் திருவிழா நடைபெற்றது.இந்த பூங்காவில் 10 ...

அக்டோபர் 17,2019  IST

Comments

  • துபாயில் தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனத்துக்கு விருது
  • ஆஸ்திரேலியத் தலைநகரில் மலர்த் திருவிழா

  • கல்வியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டி
  • சான் ஆண்டோனியோவில் மஹாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழா
  • சிங்கப்பூரில் ஸ்ரீ சதசண்டி மஹா யாகம்
  • பிரிஸ்பேனில் அரங்கேற்றம்
  • சிங்கப்பூரில் கம்பன் விழா
  • பிரிஸ்பேனில் ஈஸ்வராலயாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி

ஶ்ரீ செல்வ விநாயகர் கோயில்,

 ஶ்ரீ செல்வ விநாயகர் கோயில், பிரிஸ்பேன்HISTORY

Advertisement
Advertisement
Advertisement

Follow Us

ஹிந்து மகாசபை தலைவர் சுட்டுக்கொலை

லக்னோ: உ.பி., மாநிலம் லக்னோவில், ஹிந்து மகா சபை தலைவர் கமலேஷ் திவாரியின் அலுவலகம் உள்ளது. nsmimg724820nsmimgஇங்கு வந்த சில மர்ம நபர்கள் ...

அக்டோபர் 18,2019  IST

Comments