ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

அக்டோபர் 24,2016  IST

Comments

ஆலய இருப்பிடம் : மலேசியாவின் பெனாங் பகுதியில் அமைந்துள்ள அழகிய ஆலயம் ஸ்ரீ காமாட்சி அம்மன் தேவஸ்தானம். இக்கோயில், ஜலன் டத்தோ கிரமாட் மற்றும் ஜலன் கம்புங் ஜவா பாரு ஆகிய பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளது. ஆலய வரலாறு : இப்பகுதியில் வாழ்ந்த தங்க நகைகள் செய்யும் பத்தர் சமூக மக்களால் இந்த ஆலயம் அமைக்கப்பட்டது. பத்தர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் 1914 ம் ஆண்டு சிறிய சன்னதியாக இந்த ஆலயம் உருவாக்கப்பட்டது. பின்னர் 1923ம் ஆண்டு, டத்தோ கிரமாத் சாலையில் முறையாக இடம் வாங்கி முறையாக ஆலயம் எழுப்பப்பட்டது. இக்கோயிலின் முக்கிய தெய்வமாக காமாட்சி அம்மன் எழுந்தருளி உள்ளார். பத்தர் சமூக மக்கள் அதிகமாக வணிகம் செய்யும் பகுதி என்பதால் ஆலயம் அமைக்க டத்தோ கிரமாத் சாலை தேர்வு செய்யப்பட்டது. பல்வேறு காரணங்களால் 1940ம் ஆண்டு வரை கோயில் திருப்பணிகள் தாமதமாகின. அதுன் பிறகு, ஜப்பானியர்கள் போரெடுத்து வந்து ஆக்கிரமித்த போதிலும் எந்த இடையூறு இன்றி திருப்பணிகள் நடந்தது. இக்கோயிலின் முதல் கும்பாபிஷேகம் 1944ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஜப்பானிய அதிகாரிகள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அதன் பிறகு, 1975ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 2வது முறையும், 1989ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3வது முறையும் கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோயில் பத்தர் சமூக மக்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஆலய முகவரி : Sri Kamatchi Amman Temple33A Dato Kramat Road, 10150 Penang, Malaysia.

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஹூஸ்டனில் பரதநாட்டிய அரங்கேற்றம்

ஹூஸ்டனில் பரதநாட்டிய அரங்கேற்றம்...

இந்தோனேசியாவில் குறள் உரையாடல்

இந்தோனேசியாவில் குறள் உரையாடல்...

சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா

சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா ...

அமீரகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

அமீரகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)