ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயில், பொம்மானோ | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயில், பொம்மானோ

ஜூன் 02,2017 

Comments

 அமெரிக்காவில் நியூயார்க் நகரத்திலிருந்து பாஸ்டன் நகர் வரும் சாலையில் சுமார் 24 மைல் தூரம் சென்றதும், வருகின்ற விலக்குப் பாதையில் சென்றால் பொம்மானா என்றதொரு கிராமத்தை அடையலாம். இங்கு எண் 8,லேடன் டவுன் சாடியில் இரங்கநாதப் பெருமாளுக்கு திருத்தலம் அமைந்துள்ளது. இந்த கிராமம் பீர் மவுண்டன் என்ற கூறப்படுகின்ற மலையடிவாரத்தில், ஹட்சன் என்று கூறப்படுகின்ற பள்ளத்தாக்கின் அருகில் அமைந்துள்ளது. அமைதி தவழும் இந்த கிராமத்தில் சயனக் கோலத்தில் இருக்கும் ஸ்ரீரங்கநாதப் பெருமாளை தரிசிப்பதற்கு பக்தர்கள் வரும் காட்சி திருச்சியில் ரங்கநாதப் பெருமாளைக் காண்பது போல் இருக்கும் ஒரு அருமையான காட்சியாகும். இத்திருத்தலத்தில் பரந்த விசாலமான பகுதியில் நூற்றுக்கணக்கான நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு இடவசதிகள் உள்ளன. வாகனத்தை நிறுத்திவிட்டு.செல்லும் போது, அங்குள்ள கொடிமரத்தினை கண்டு வணங்குகிறோம்.

பிரமாண்டமான கட்டிட அமைப்பினைக் கொண்ட இத்தலத்தினுள்; நுழைந்ததும், காலணிகள் வைப்பதற்குரிய பிரத்தியோகமான அடுக்குடன் கூடிய காலணி வைப்பு கூடங்கள் கண்டு வியந்தேன். சுகாதாரமான முறைபடி, ஒரு ஒழுங்கின் அடிப்படையில் அடுக்கடுக்காக அமைந்துள்ள இருப்பிடத்தில் காலணிகள் வைக்கப்படும் விதத்தைப் பார்க்கும் போது மிகவும் வியப்பாக இருந்தது. இது போன்று, இந்த நாட்டின் பனியின் தாக்கத்தை தவிர்க்கும் பொருட்டு, அணிந்து வரும் குளிர் தடுக்கும் மேல் அங்கியினை வைப்பதற்கும் தனி இடவசதிகள் இருப்பது கண்டு வியக்கலாம்.

இதன் பின் பெருமாளைத் தரிசிக்கும் ஆவலில் சன்னதி இருக்கும் வளாகத்திற்குள் நுழைகிறோம். மூலஸ்தானத்தில் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் சயனகோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்;. மூலஸ்தானத்திற்;கு முன்பு அமைந்துள்ள மண்டபம் மிக பெரியதாக அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் திருத்தலத்தின் குருக்கள் உபன்யாசம் பாகவதம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். இந்த மண்டபத்தில் ஸ்ரீரங்கநாதப் பெருமாளை சேவித்து விட்டு வலம் வரும் போது அருள்மிகு தெய்வங்களின் விக்ரகங்களைக் கண்டு வணங்கிச் செல்லலாம்.

திருத்தலத்தின் மண்டபத்தின் இடப்புறத்தில் முதன் முதலில் நமக்கு தரிசனம் அளிப்பது இராதே கிருஷ்ணர் ஆகும். இராதே கிருஷ்ணர் சன்னதிக்கும் இராமர் சீதா இலட்சுமணர் அமைந்துள்ள சன்னதிக்கும்; முன்பாக, மண்டப வளாகத்தில் பக்தர்கள் அமர்ந்து பகவானின் இராமநாதத்தை பாடிக்கொண்டிருந்தனர். இக் காட்சியினைக் கண்ட போது, தமிழ்நாட்டில் முரளிதர சுவாமிகளின் ஆசிரமத்தில் நடைபெற்ற நாம கீர்த்தனை பற்றிய நினைவுகள் எனக்கு வந்து போயின. ஆம் சென்னைக்கு அருகில், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சுமார் 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள மலைப்பட்டு என்ற மலையடிவாரப் பகுதியில் அமைந்த ஊரில், முரளிதரசுவாமிகளின் முன்னிலையில் நாமகீர்த்தனை நடைபெற்ற சம்பவம் எனது நினைவுக்கு வந்து போயின. அவர்கள் பாடிய நாம கீர்த்தனையை நாமும் இப்போது பாடி மகிழ்வோம் என்று முடிவு எடுத்து அக்கீர்த்தனையில் எங்களையும் இணைத்துக் கொண்டோம். சஞ்சலம் மிகுந்த இவ்வுலகியல் வாழ்விற்கு இந்த கீர்த்தனை ஒரு மாற்று மருந்து என்பதனை அனுபவத்தால் நன்கு உணரலாம்.

‘ஹரே இராம ஹரே இராம இராம இராம ஹரே ஹரே


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே’..

இந்த நாம கீர்த்தனத்தை தொடர்ந்து உச்சரித்து, வாழ்க்கையில் பலன் அடைந்தவர்கள் பலர் என்பதனை பிறர் கூறி அறிந்து கொள்வதை விட,அதனை நம் வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் கடைபிடித்து அதன் அருமையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அடியேனின் வேட்கையாகும். இராதே கிருஷ்ணரை வழிபட்ட பின்பு அதற்கு அடுத்தாற் போல் சீனிவாசப் பெருமாளைத் தரிசிக்கலாம். கடல்கடந்து அமெரிக்கா வந்த இந்திய வாழ் பிரஜைகளுக்கு, அடிக்கடி இந்தியா சென்று, திருப்பதியில் சீனிவாசப் பெருமாளைத் தரிசிப்பதற்கு நடைமுறையில் இயலாத காரியம். திருப்பதியில் தரிசிப்பது போன்று மிக பிரமாண்டமான அமைப்பில் சீனிவாசப் பெருமாள் காட்சியளிப்பது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும். கோவிந்தா கோவிந்தா என்று பக்தர்கள் கோவிந்தனின் நாமத்தை முழு உணர்வுடன் பரவசத்துடன் கோவிந்தனின் நாமத்தை உச்சரித்தனர். சீனிவாசப் பெருமாள் அருகில் சென்றதும் என்னையும் அறியாமல் கீழ்காணும் பெருமாளின் பாடல்களின் அடிகளை யான் மெய்மறந்து பாடினேன்.

சீனிவாச கோவிந்தா! ஸ்ரீவெங்கடேசா கோவிந்தா!


பக்தவச்சல கோவிந்தா! பாகவதப் பிரியா கோவிந்தா!


நந்தன நந்தன கோவிந்தா! நவநீத ஜோரா கோவிந்தா!..

பெருமாளின் தரிசனம் கிடைக்கப்பெற்றதும், நாங்கள் தரிசித்த விக்ரகங்கள் பின் வருமாறு:

1. அகோபில மடத்தின் ஸ்தாபகர் ஆதிவன் சடகோபன்


2. ‘முழு சரணகதி’ பற்றிய விளங்கங்களை விளக்கிக் கூறிய சுவாமி வேதாந்த தேசிகன்


3. அருள்மிகு தெய்வம் மகா லட்சுமி


4. அருள் மிகு தெய்வம் பூதேவி என்று அழைக்கப்படுகின்ற ஆண்டாள்


5. வைஷ்ணவித்திற்கு வித்தாக விளங்கிய பகவத் இராமானுஜர்


6. அருள்மிகு தெய்வம் இலட்சுமி நரசிம்மர்


7. கருட பகவான்

இத்தலத்தில் சீனிவாச கல்யாண உற்சவம்,ஆண்டாள் கல்யாண உற்சவம்,சந்தான கோபால கிருஷ்ண பூஜை போன்றவைகள் மிக சிறப்பாக நடத்தப்படுகின்றன. 35 பவுண்டு எடைக்கு குறைவான குழந்தைகளை தராசில் ஒரு பக்கம் உட்கார வைத்து அதன் எடைக்கு ஈடாக, தங்களது வேண்டுதலின் படி அரிசி,சர்க்கரை,பழங்கள் போன்றவற்றை இறைவனுக்கு சமர்பிக்கும் பிரார்த்தனை நிகழ்வுகளும் இங்கு நடைபெறுகின்றன. அன்னதானம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றது. பக்தர்கள் பிரசாதம் சாப்பிட்டுச் செல்வதற்கு தனியாக கூடம் அமைத்து பக்தர்கள் உண்பதற்கு ஏற்ற வசதிகள் செய்துள்ளனர். இத்திருத்தலம் திறந்திருக்கும் நேரம் காலை 08.00 மணி முதல் 12.00 மணி வரை. மாலை 1600 மணி முதல் 20.00 மணி வரை. விசேச நாட்களில் நேரம் மாறுதலுக்குட்டபட்டதாகும். தலம் பற்றி மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள தொலை பேசி எண் 845-364-9790. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதேசி நடைபெறுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு குடும்ப சகிதம் ஸ்ரீரங்கநாதப் பெருமாளைத் தரிசிக்க வாய்ப்பளித்த இறைவனை நன்றிப் பெருக்குடன் ஏறெடுத்துப் பார்க்கின்றேன். என்னைப் போன்று தினமலர் நாளிதழ் வாசகர்களுக்கும் ஸ்ரீரங்கநாதப்பெருமாளைத் தரிசிக்க இறைவனின் அருள் நிச்சயம் கிடைக்க வேண்டுகிறேன்.

- ச.பொன்ராஜ்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மலேசியாவில் அவத்தார் அவார்ட்ஸ்

மலேசியாவில் அவத்தார் அவார்ட்ஸ்...

அமீரக கல்வியாளர் பங்கேற்ற இணைய வழி உரை

அமீரக கல்வியாளர் பங்கேற்ற இணைய வழி உரை ...

சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் புதிய செயற்குழு பொறுப்பேற்பு

சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் புதிய செயற்குழு பொறுப்பேற்பு...

ரியாத்தில் அவசர ரத்த தான முகாம்

ரியாத்தில் அவசர ரத்த தான முகாம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us