ஸ்ரீ குருஸ்தான் - ஸ்ரீரடி சாய் திருத்தலம், நார்த்போரோ, மசாசூட் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ குருஸ்தான் - ஸ்ரீரடி சாய் திருத்தலம், நார்த்போரோ, மசாசூட்

ஜூன் 10,2017 

Comments

அமெரிக்காவில் மசாசூட் மாநிலத்தில் ‘நார்த்போரோ’ என்ற இடத்தில், சாலை எண் 9 லிருந்து விலகி செல்லும், எண்.107,ஓடிஸ் தெருவில் ஸ்ரீ குருஸ்தான் என்று அழைக்கப்படுகின்ற ஸ்ரீரடி சாய் பாபாவின் திருத்தலம் அமைந்துள்ளது.

இத்திருத்தலத்தில் சாய்பாபாவின் திரு உருவச் சிலை பிரதிஷ்ஸ்டை செய்யப்பட்டு, 27.12.2012 அன்று திருத்தலத்தின் மகா கும்பாபிசேகமும் நடைபெற்று உள்ளது. இத்திருத்தலம் வாரத்தின் அனைத்து நாட்களும் காலை 08.30 முதல்12.30 மணி வரையும், மாலை 15.00 முதல் 21.00 மணி வரையும் திறந்திருக்கும். வியாழக்கிழமை அன்று நேரம் மாறுதலுக்குட்பட்டது.இத்திருத்தலம் ஸ்ரீரடி சாய் பாபாவின் பெயர் கொண்டு திகழ்ந்தாலும்; வினாயகர், இராதே கிருஷ்ணன், சிவன், துர்கை ஆகிய அருள்மிகு தெய்வங்களை வணங்கிச் செல்வதற்கு மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீசாய் அபிசேகம், ருத்திர அபிசேகம், கணேச அபிசேகம், சத்ய நாராயண பூஜை, லலிதா குங்கும அர்ச்சனை, போன்றவைகள் இங்கு நடத்தப்படுகின்றன.

மேலும் இப்பகுதியில் வாழும் பக்தர்களின் வீட்டு சீமந்தம், திருமணம், உபநயனம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இங்குள்ள குருக்கள் கலந்து கொண்டு விழாக்களை சிறப்பான முறையில் நமது கலாச்சார முறைப்படி நடத்தி வைக்கின்றனர். இது போன்று சிறப்பு ஹோமங்களுக்கும் நாம் ஏற்பாடு செய்து கொள்ளலாம். இதற்கென கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இத்திருத்தலத்தில் இலவச மனப்பான்மையுடன் பலர் திருத்தல சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திருத்தலம் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள அணுக வேண்டிய கையகப்பேசி எண் 774 276 9724.


- ச.பொன்ராஜ்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மலேசியாவில் அவத்தார் அவார்ட்ஸ்

மலேசியாவில் அவத்தார் அவார்ட்ஸ்...

அமீரக கல்வியாளர் பங்கேற்ற இணைய வழி உரை

அமீரக கல்வியாளர் பங்கேற்ற இணைய வழி உரை ...

சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் புதிய செயற்குழு பொறுப்பேற்பு

சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் புதிய செயற்குழு பொறுப்பேற்பு...

ரியாத்தில் அவசர ரத்த தான முகாம்

ரியாத்தில் அவசர ரத்த தான முகாம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us