இலட்சுமி திருத்தலம், ஆஸ்லேண்ட், அமெரிக்கா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

இலட்சுமி திருத்தலம், ஆஸ்லேண்ட், அமெரிக்கா

ஜூன் 19,2017 

Comments

 நமது இந்து கலாச்சாரத்தை வெளிநாட்டில் வாழும் நமது சந்ததியினர் விடாமல் கடைப்பிடித்து வரவேண்டும் என்ற நல்ல எண்ணத்திலும், இந்து மதம் மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கத்திலும், அமெரிக்காவில் பாஸ்டனிலிருந்து சுமார் 25 மைல் தூரத்தில் அமைந்துள்ள ஆஷ்லேண்ட் என்னும் இடத்தில் இலட்சுமி திருக்கோவிலைக் கட்டியுள்ளனர்.
ஆஸ்லேண்டு திருக்கோவில் இரண்டு அடுக்கு நிலையில் கட்டபட்ட ஒரு அழகிய திருக்கோவிலாக திகழ்கின்றது. மேல்நிலையில் உள்ள மண்டபம் மகா மண்டபம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த மண்டபத்தில் தெய்வீக பணிகள் நடைபெறுகின்றன. அருள்மிகு இலட்சுமி இத்திருதலத்தில் நடுநாயகமாக கொலு வீற்றிருந்து பக்தர்களை அருள்பாலிக்கின்றாள். அருள்மிகு தெய்வம் இலட்சுமிக்கு இருபுறமும் பக்தர்கள் வழிபடுவதற்காக விஷ்ணு அவதாரமாகிய வெங்கடேசப் பெருமாளும், வினாயகரும் தனித்தனி சன்னதிகளில் இருந்து அருள்பாலிக்கின்றனர்.

இத்தலத்தில் எம்பெருமான் சிவபெருமான் அன்னை சிவகாமி அம்பாளுடன் அருள்பாலிக்கும் காட்சி ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும். இத்திருத்தலத்தின் அதே மகாமண்டபத்து வலதுபுறத்தில் சக்தி சொருப நிலையுடன் கூடிய அம்மனும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிகளும் அருள்பாலித்து இருக்கின்றனர். மூலவரைக் கடந்தவுடன் நாம் வணங்கக் கூடிய தெய்வீக சன்னதிகள்; நவகிரகம், அய்யப்ப சுவாமி, ஆஞ்சநேயர் மற்றும் கருடாழ்வார் ஆகும்.


இத்தகு அருள்மிகு தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட இத்தலத்தில் வாரத்தில் 7 நாட்களும் பக்தர்கள் வந்து தெய்வதரிசனம் பார்க்கலாம். சிறப்பு பூஜைகளிலும் கலந்து கொள்ளலாம். கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்துவதுடன், இங்குள்ள பக்தர்கள் தமது வீட்டில் நடக்கவிருக்கின்ற பூஜைகளையும் மிக சிறப்பான முறையில் நடத்துவதற்கு இங்குள்ள குருக்கள் உதவிகரமாக இருக்கின்றார்கள்.

இத்திருத்தலத்தின் கீழ் வளாகம் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட விழாக்கள் நடத்துவதற்கு பயன்படுத்துகின்றனர். வாடகை அடிப்படையில் இந்த வளாகத்தை பக்தர்கள் அனைவரும் பயன்படுத்தலாம். திருக்கோவிலில் தரிசனம் பார்த்த பின் பிரசாதங்கள் பெற்றுக் கொள்ள தேவையான வசதிகள் உள்ளன. திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தாங்கள் வரும் போது இறைவனுக்கு படைப்பதற்காக தங்கள் இல்லத்தில் தாயார் செய்யப்பட்ட உணவுகளை எடுத்து வந்து இறைவனுக்கு படைத்து பின் அதனை கீழ் வளாகத்தில் உள்ள பொதுவான இடத்தில் வைத்து விடுகின்றனர். உணவு வகைகளை எடுத்து உண்பதற்கு வேண்டிய அனைத்து வசதிகளும் அங்கு உள்ளன. நேராக சென்று நமக்கு தேவையான பிரசாதத்தை நாமே எடுத்துச் சாப்பிடலாம். பக்தர்களின் வசதியினை முன்னிட்டு புதியதாக பெரியதொரு மண்டபமும் இத்தலத்துடன் இணைந்த வண்ணம் கட்டியுள்ளனர். இந்த மண்டபத்தின் பயன்பாட்டு நிலை அடைவதற்குரிய அனைத்து வேலைகளும் முடிந்து விட்டன.
இத்திருத்தலத்தில் 26.05.2017 முதல் 04.06.2017 வரை பிரமோற்சவம் விழா மிக

சிறப்பான முறையில் நடைபெற்றது. சேச வாகன உற்சவம்,கல்யாண உற்சவம்,கருட வாகன

உற்சவம்,இரத யாத்திரை, அஸ்வ வாகன உற்சவம், இலட்சுமி வெங்கடேஸ்வர உற்சவம்,

ஊஞ்சல் உற்சவம்,தெப்ப உற்சவம் புஷ்ப வாகனம் போன்ற உற்சவங்கள் தமிழ்நாட்டில்

குறிப்பாக ஸ்ரீரங்கத்தில் நடப்பது நடத்துவது போல் நடத்தப்பட்டன.
அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகர் செல்வதற்கு வாய்ப்புகிடைக்கும் தினமலர் நாளிதழ் வாசக நேயர்கள் அவசியம் இத்திருத்தலம் சென்று வரவேண்டும்.

திருத்தலம் திறந்திருக்கும் நேரம்;

சாதாரண தினங்கள் : காலை 09.00 முதல் 12.00 மணி வரை. மாலை 17.00 முதல் 21.00 மணி


வாரத்தின் கடைசி நாள் : காலை 09.00 முதல் மாலை 21.00


- ச.பொன்ராஜ்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மலேசியாவில் அவத்தார் அவார்ட்ஸ்

மலேசியாவில் அவத்தார் அவார்ட்ஸ்...

அமீரக கல்வியாளர் பங்கேற்ற இணைய வழி உரை

அமீரக கல்வியாளர் பங்கேற்ற இணைய வழி உரை ...

சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் புதிய செயற்குழு பொறுப்பேற்பு

சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் புதிய செயற்குழு பொறுப்பேற்பு...

ரியாத்தில் அவசர ரத்த தான முகாம்

ரியாத்தில் அவசர ரத்த தான முகாம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us