வெங்கடேஸ்வரா திருத்தலம், பிட்ஸ்பெர்க், அமெரிக்கா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

வெங்கடேஸ்வரா திருத்தலம், பிட்ஸ்பெர்க், அமெரிக்கா

ஜூலை 01,2017 

Comments

அமெரிக்காவில் ‘பென்னின்சுலேன்யா’ மாநிலத்தில் ‘பிட்ஸ்பெர்க்’ என்ற இடத்தில் மிக பிரமாண்டமான வெங்கடேஸ்வரா திருத்தலம் அமைந்துள்ளது. சுற்றிலும் மலைப்பாங்கான இடத்தில் பசுமையான இடத்தில் இத்தலம் மிகவும் பிரமிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது. திருத்தலத்தில் நுழைந்ததும் முன்பகுதியில் வரவேற்பு ஹாலும்,அலுவலக அறைகளும் அமைந்திருப்பதனைக் காணலாம். வரவேற்பு ஹாலில் பிரசாதங்களும், ஆன்மிக புத்தகங்கள் மற்றும் படங்களும் விற்பனைக்கு உள்ளன.

இதனை அடுத்து உள் நுழைந்ததும் நாம் வணங்க வேண்டிய அருள்மிகு தெய்வம் கணபதியாகும். சில படிகள் ஏறியதும் அருகில் உள்ள பிரகாரத்தில் நுழைந்தால் அங்கு தேர் மற்றும் உற்சவ விமானங்கள் பிரத்தியேக இடத்தில் வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். பிரகாரத்தின் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து மேல் நோக்கிப் பார்த்தால் திருத்தலத்தின் கோபுர தரிசனத்தைக் காணலாம். முக்கிய மூலவருக்கு எதிரில் கொடி மரம் அமைந்துள்ளது.இத்தலத்தில் பாலாஜி என்று கூறப்படுகின்ற வெங்கடேஸ்வரர் தனியொரு சன்னதியில் முக்கிய மூலவராக இருந்து பக்தர்களை அருள்பாலிக்கின்றார். இந்தியாவில் இருந்து கடல் கடந்து வந்த நமது இந்திய நேயர்கள், இத்தலத்திற்கு வந்து பெருமாளை தரிசிக்கும் போது, திருப்பதிக்கே சென்று வந்த உணர்வுகள் ஏற்படும் என்பது திண்ணம்.


இதனை அடுத்து உள்ள சன்னதியில் அருள்மிகு ஸ்ரீலட்சுமி என்று அழைக்கப்படுகின்ற அருள்மிகு ஸ்ரீ பத்மாவதி தாயாரை கண் குளிர வணங்கிச் செல்லலாம். புணீரகாரத்தில் உள்ள சன்னதியில் அருள்மிகு தெய்வம் ஸ்ரீஆண்டாளை வழிபடலாம். எதிரில் கருடாழ்வாரையும், அருகில் உள்ள சன்னதியில் ஸ்ரீஆஞ்சநேயரையும் வணங்கிடலாம்.


இங்கு சுப்ரபாதம், சத்யநாராயண பூஜை, வெங்கடேஸ்வரா, ஸ்ரீலட்சுமி கணேசர் ஆகியவர்களுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் அபிசேகங்கள் நடைபெறுவதுண்டு. ஆண்டாள் ஆஞ்சநேயர் ஆகியவர்களுக்கு அபிசேகம் நடத்தப்படுவதுண்டு. பக்கதர்கள் இங்கு நடைபெறும் கல்யாண உற்சவத்தில் மிகவும் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர்.


இத்தலத்தில் உள்ள விக்ரகங்கள் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டவை; இத்தலத்தின் முதல் விமான பூஜை 30.10.1976 அன்றும் முதல் கும்பாபிசேகம் 22.10.1978 அன்றும் நடைபெற்றது.


இத்திருத்தலத்தின் நடை சனி கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 07.30 முதல் மாலை 19.30 வரையும், வெள்ளிக்கிழமை காலை 09.00 முதல் மாலை 20.30 வரையும் திறந்திருக்கும். திருத்தலத்தில் உணவுக்கூடம் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. வரவேற்பு ஹாலில் உணவுக்களுக்குரிய தொகையை கொடுத்து விட்டு இரசிதுடன் உணவுக்கூடத்திற்குச் சென்று தேவைப்பட்ட உணவினை பெற்று, உட்கார்ந்து சாப்பிடுவதற்குரிய சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இங்கு பிரசாதமாக திருப்பதியில் உள்ளவாறு பெரிய அளவில் லட்டுகளும் கிடைக்கப் பெறுகின்றன என்பது ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். திருத்தலத்தின் முகவரி எண்-1230 சௌத் மெக்கல்லி டிரைவ், பென் கில்ஸ், பிட்ஸ்பெர்க், பென்னின்சுலேன்யா மாகாணம். இத்தலம் பற்றி மேலும் செய்திகள் அறிந்து கொள்ள அணுக வேண்டிய கையகப்பேசி எண் 412 373 3380.


- ச.பொன்ராஜ்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துக்கு லண்டன் வழங்கிய உலக மகா விருது

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துக்கு லண்டன் வழங்கிய உலக மகா விருது...

குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் நடத்தும் கவிதைப் போட்டி

குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் நடத்தும் கவிதைப் போட்டி...

லயன்ஸ் சங்க நண்பர்கள் மூலம் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் தொடர் சேவை

லயன்ஸ் சங்க நண்பர்கள் மூலம் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் தொடர் சேவை...

துபாயில் சிறப்பு உளவியல் நிகழ்ச்சி

துபாயில் சிறப்பு உளவியல் நிகழ்ச்சி ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us