ஸ்ரீரடி சாய் பாபா திருத்தலம், பிட்ஸ்பெர்க், பென்னின்ஸ்லவேன்யா, அமெரிக்கா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீரடி சாய் பாபா திருத்தலம், பிட்ஸ்பெர்க், பென்னின்ஸ்லவேன்யா, அமெரிக்கா

ஜூலை 01,2017 

Comments

அமெரிக்காவில் பென்னின்ஸ்லவேன்யா மாகாணத்தில் பிட்ஸ்பெர்க் நகரில் சாய்பாபா திருத்தலம் சிறிய மலையின் மீது அமைந்துள்ளது. வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியுடன் திகழும் இத்தலத்தில் ஸ்ரீரடி சாய் பாபா அமைதியின் சொரூபமாக காட்சியளிக்கின்றார். சாய்பாபாவின் சன்னிதானத்திற்கு முன்பாக உள்ள விநாயகரை கண்டு வணங்கிச் செல்லலாம். ஸ்ரீரடி சாய் பாபாவிற்கு இருபுறமும்; புட்டபத்தி சாயி பாபா மற்றும் ஸ்ரீரடி சாய் பாபாவின் புகைப்படங்கள் மிகபெரிய அளவில் மாட்டப்பட்டுள்ளது.

இத்தலத்தில் நந்தியுடன் கூடிய சிவலிங்கமும், கணபதி, நவகிரகம் ஆகிய அருள்மிகு தெய்வங்களை வழிபடுவதற்கு மூர்த்திகள் உள்ளன. நந்தியுடன் கூடிய சிவலிங்கம் ஸ்ரீரடி சாய் பாபாவிற்கு நேர் எதிரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இத்தலத்தில் உள்ள விநாயகர் மிக பெரிய அளவில் காட்சியளிக்கின்றார். விநாயகருக்கு முன்பாக மற்றொரு சிவலிங்கம் உள்ளது இந்த சிவலிங்கத்தை சுற்றி படிக லிங்கங்கள் சுமார் 360க்கும் அதிகமாக ஒரு ஒழுங்கு வடிவில் வைக்கப்பட்டுள்ள காட்சி நம் கண்ணை கவரும் வண்ணம் உள்ளது.திருக்கோவில் எளிய முறையில் காட்சியளித்தாலும், தொண்டு உள்ளம் நிரம்பபெற்ற இப்பகுதி மக்களின் அரும் பெரும் முயற்சியால் திருத்தலம் மிகப் பெரிய அளவில் ஏற்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கின்றன.


இத்தலத்தில் சிவன், அனுமான், கணபதி ஆகியோர்களுக்கு அர்ச்சனை அபிசேகம் நடைபெறுகின்றது. சனி ஞாயிறு போன்ற தினங்களில் இலவச சாந்தி ஹோமம், ருத்திர அபிசேகம் நடத்தப்படுகின்றது. இதற்கு முன்பதிவு அவசியம் தேவை. மேலும் இங்கு சகஸ்ரநாம அர்ச்சனை, லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை நடப்பது ஒரு சிறப்பு அம்சமாகும். இத்திருத்தலம் திறந்திருக்கும் நேரம் வியாழக்கிழமை காலை 0900 முதல் மாலை 20.30 மணி வரை. மற்ற நாட்களில் காலை 09.00 மணி முதல் 19.30 மணி வரை. பனிகாலங்களில் நேரத்தில் மாறுதல் உண்டு. இத்தலத்தின் முகவரி எண் 1449,அபர்ஸ் கிரீக் சாலை, மோன்ரோயிவிலே பென்ஸ்லவேனியா-15146. இத்திருத்தலம் பற்றி மேலும் செய்திகள் அறிந்து கொள்ள அணுக வேண்டிய கையகப்பேசி எண் 412 374 9244


பிட்ஸ்பர்க்கில் மிகவும் புகழ்வாய்ந்த பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். அமெரிக்கா வரும் சுற்றுலா பயணிகள் பிட்ஸ்பர்க்கில் உள்ள பெருமாள் கோவிலுக்கும் ஸ்ரீரடி சாய்பாபா கோவிலுக்கும் அவசியம் வந்து இறையருளைப் பெற வேண்டும்.


- ச.பொன்ராஜ்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மலேசியாவில் அவத்தார் அவார்ட்ஸ்

மலேசியாவில் அவத்தார் அவார்ட்ஸ்...

அமீரக கல்வியாளர் பங்கேற்ற இணைய வழி உரை

அமீரக கல்வியாளர் பங்கேற்ற இணைய வழி உரை ...

சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் புதிய செயற்குழு பொறுப்பேற்பு

சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் புதிய செயற்குழு பொறுப்பேற்பு...

ரியாத்தில் அவசர ரத்த தான முகாம்

ரியாத்தில் அவசர ரத்த தான முகாம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us