ஸ்ரீ துவர்காமை ஸ்ரீரடி சாய் பாபா திருத்தலம் வடக்கு பில்லரிக்கா, அமெரிக்கா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ துவர்காமை ஸ்ரீரடி சாய் பாபா திருத்தலம் வடக்கு பில்லரிக்கா, அமெரிக்கா

ஜூலை 28,2017  IST

Comments

‘ஸ்ரீதுவர்காமை வித்யாபித்’ என்ற ஸ்தாபனம் ஸ்ரீரடி சாய் பாபாவிற்குரிய திருத்தலங்களை அமெரிக்காவில் மாசாசூட் என்ற மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஸ்தாபித்துள்ளது. இத்தலங்களில் முதன் முதலாக ஸ்தாபிக்கப்பட்ட தலம் மாசாசூட் மாநிலத்தில் எண் 267,பாஸ்டன் சாலை, சூட் 9, வடக்கு பில்லரிக்கா என்ற இடத்தில் அமைந்துள்ளது. 16.10.2010 அன்று இத்திருத்தலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்தலத்தில் முக்கிய மூலவராக ஸ்ரீரடி சாய் பாபா அவர்கள் 6 அடி உயரத்தில் அமைதியின் சொரூபமாகக் காட்சியளிக்கின்றார். இவரது மூர்த்திக்கு அருகில் மிக உயரத்தில் அருள்மிகு தெய்வம் பாலாஜி என்று கூறப்படுகின்ற சீனிவாசப் பெருமாளைக் கண்டு வணங்கிடலாம். இவருக்கு சற்று முன்பாகவும்,இவருக்கும் ஸ்ரீரடி சாய் பாபாவிற்கும் இடையில் எம்பெருமான் சிவபெருமானின் லிங்கத்திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பாலாஜிக்கு அடுத்து நாம் வணங்க இருக்கும் தெய்வம் அருள்மிகு வினாயகராகும்.கொடி மரத்துடன் கூடிய இத்தலத்தில் கொடி மரத்திற்கு இடப்புறம் வினாயகருடன் ராதே கிருஷ்ணர், கன்னிகா பரமேஸ்வரி, துர்கை ஆகிய அருள்மிகு தெய்வங்களையும், வலப்புறம் நந்தியம் பெருமானையும் கண்டு வணங்கிடலாம்.

இத்திருத்தலத்தில் கணேசர் அபிசேகம், ஸ்ரீரடி சாய் பாபா அபிசேகம், ருத்திர அபிசேகம், பாலாஜி அபிசேகம், வெங்கடேஸ்வர பெருமாள் சுப்பரபாதம், சத்ய நாராயண பூஜை போன்ற தெய்வீக சேவைகளில் பக்தர்கள் கலந்து கொண்டு அந்தந்த தெய்வத்தின் அனுகிரகங்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் கட்டணத்தின் அடிப்படையில் வாகன பூஜை, திருமணம். உபநயனம் போன்றவைகளும் இங்கு நடத்தி வைக்கப்படுகின்றன. முடிகாணிக்கை செலுத்துவதற்கும் குழந்தைகளுக்கு காது குத்துவதற்கும் இங்கு வசதிகள் உண்டு. இத்திருத்தலத்தில் சமஸ்கிருதம், பரதநாட்டியம், தபோலா போன்ற வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ‘துவர்காமை ஆயுர்வேத மையகம்’ இங்கு நன்முறையில் செயல்பட்டு, சிறந்த மருத்துவச் சேவையை செய்து வருகின்றது. மேலும் வருடத்தில் சில குறிப்பிட்ட மாதங்களில் ஸ்ரீரடி சாய் பாபாவின் பல்லக்கு விஜயம் தேவைப்படுபவர்களின் இல்லத்திற்கு எடுத்து வந்து வீட்டில் சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர். விருப்பப்படுபவர்கள் இதற்கு முன் பதிவு செய்திடல் வேண்டும்.

இத்திருத்தலம் திங்கள் முதல் புதன் கிழமை வரையும், மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காலை 08.30 மணி முதல் 13.00 மணி வரையும்,மாலை 17.30 முதல் 20.30 மணி வரையும் திறந்திருக்கும். வியாழக்கிழமை 08.00 முதல் 13.00 மணி வரையும் மாலை 17.30 முதல் 21.30 வரையும் திறந்திருக்கும். சனி ஞாயிறு போன்ற நாட்களில் சற்று மாற்றம் உண்டு. மேலும் திருத்தலம் பற்றிய செய்திகள் அறிந்து கொள்ள அணுக வேண்டிய கையகப்பேசி எண் 978 276 9724 மற்றும் 978 408 1425.


- ச.பொன்ராஜ்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

கோலாலம்பூரில் கோலாகல உலக அமைதி தின விழா

கோலாலம்பூரில் கோலாகல உலக அமைதி தின விழா...

வில்டன் இந்து ஆலயத்தில் கந்த சஷ்டி கோலாகலம்

வில்டன் இந்து ஆலயத்தில் கந்த சஷ்டி கோலாகலம்...

இலங்கை செஞ்சிலுவை சங்க பொதுக் கூடடம்

இலங்கை செஞ்சிலுவை சங்க பொதுக் கூடடம் ...

சிங்கப்பூரில் ( சனி ) பிரதோஷம்

சிங்கப்பூரில் ( சனி ) பிரதோஷம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)