ஸ்ரீ சத்ய நாராயண திருத்தலம், கனக்டிக்கட்,அமெரிக்கா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ சத்ய நாராயண திருத்தலம், கனக்டிக்கட்,அமெரிக்கா

ஆகஸ்ட் 16,2017  IST

Comments

அமெரிக்காவில்,இந்து மதத்தின் பாராம்பரியத்தை காக்கும் பொருட்டும்,இந்திய கலாச்சாரம் மேன்மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஏண்ணத்திலும்,அமெரிக்க வாழ் இந்திய மக்களுக்கு சமுக தொண்டு புரிய வேண்டும் என்ற அடிப்படைக் காரணங்களை முன் வைத்தும், செயல்பட்ட ஒரு அமைப்பு ‘கனக்டிக்கட் பள்ளத்தாக்கு இந்து திருத்தல சமுக அமைப்பு’ ஆகும். இந்த அமைப்பு 1979 ஆம் ஆண்டு முதல் இங்கு செயல்படுகின்றது. இந்த அமைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட திருத்தலம் ஸ்ரீ சத்ய நாராயணா திருத்தலம் ஆகும். எண் 11,ட்ரெயினிங் ஹில் சாலை,கனக்டிக்கட்,ஊவு-06457 அமெரிக்கா என்ற இடத்தில் இத்திருத்தலம் மிக பிரமாண்ட அளவில் கட்டப்பட்டுள்ளது. இத்திருத்தலம் பாஸ்டனிலிருந்து சுமார் 150 மைல் தூரத்திலும்,நியூயார்க்கிலிருந்து சுமார் 116 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது.இத்திருத்தலத்தின் முன் பகுதியில் விசாலமான சிற்றூந்து நிறுத்துமிடமும் அதன் அருகில் திருத்தலத்தில் பணிபுரிபவர்களுக்கு தங்கும் இடமும் மிக வசதியாக கட்டப்பட்டுள்ளது. திருத்தலத்தின் உள் நுழைந்ததும் வரவேற்பு ஹால் அமைந்திருப்பதனைக் காணலாம். இங்கு திருத்தலம் பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்வதுடன், சுவாமிக்குரிய அர்ச்சனை சீட்டுகள் இங்கு பெற்றுக் கொள்ளலாம். சற்று உள் நுழைந்ததும் இடப்புறத்தில் ஸ்ரீ கணேசர் மிகப் பெரிய அளவில் பிரமாண்ட ரூபத்தில் காட்சியளிக்கின்றார். கணேசரை வழிபட்ட பின் அடுத்து நாம் நுழைய இருப்பது ‘பார்பதி’ என்ற வளாகம் ஆகும். இங்கு நம் கண்களுக்கு நேர் எதிரில் முக்கிய மூலவராக காட்சி அளிப்பது அருள்மிகு தெய்வம் சத்ய நாராயண சுவாமிகள் ஆகும். இவருக்கு இருபுறமும் அருள்பாலிப்பவர்கள் அருள்மிகு தெய்வம் ஸ்ரீதேவி பூதேவி ஆவார்கள்.வளாகத்தின் ஆரம்பத்தின் இடப்புறத்தில் இராமர் இலட்சுமணர்,சீதை,ஆஞ்சநேயர் வினாயகர்,வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் சரஸ்வதி ஆகிய அருள்மிகு உற்சவ மூர்த்தி தெய்வங்களை வணங்கிடலாம். இதற்கு அடுத்து மாடம் போன்ற அமைப்பில் உள்ள சன்னதியில் இராதே கிருஷ்ர்ணர், இராமர் பரிவார் ஆகியவர்களையும்,அடுத்த மாடத்தில் பகவான் ஆதிநாத் மற்றும் பகவான் மகாவீர் அவர்களையும் கண்டு வணங்கிடலாம். வெங்கடேசப் பெருமாளை தனியொரு மாடத்தில் கண்டு வணங்கிட பெருமாளின் திரு உருவச் சிலை மிகப் பெரிய அளவில் நின்றவாறு பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.சத்யநாராயண சாமியின் இடப்புறத்தில் சிவபெருமான் நந்தியுடன் காட்சி தந்து பக்தர்களை அருள்பாலிப்பதைக் காணலாம். சிவனுக்கு பிரதோச பூஜை மிக சிறப்பாக நடத்தப்படுகின்றது.இதற்கு அடுத்த மாடம் போன்ற சன்னதியில் இருந்து அருள்பாலிப்பது அருள்மிகு தெய்வம் அய்யப்பனும்,அதற்கு அடுத்த சன்னதியில் துர்கா மாதாவையும் அதனை அடுத்து வள்ளி,சுப்பிரமணிய சுவாமி,தெய்வானை ஆகிய அருள்மிகு தெய்வங்களை நாம் வணங்கிச் செல்லலாம். நவகிரகங்களை வணங்கிச் செல்வதற்கு நவகிரகங்கள் தனியாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இத்தலத்தில் அனைத்து தெய்வங்களுக்கும் கட்டணத்தின் அடிப்படையில் அபிசேகங்கள் செய்வதற்கு வசதிகள் உள்ளன. இத்திருத்தலத்தில் அன்ன பிரசன்னம்,முடி காணிக்கை செலுத்துதல்,ஆயள் ஹோமம், உபநயனம், திருமணம்,சீமந்தம்.கிரகப் பிரவேசம்,தர்பணம் கட்டணத்தின் அடிப்படையில் முன் அனுமதியுடன் ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம். இத்திருத்தலத்தின் அமைப்பினர் இந்து பாரம்பரிய கலாச்சாரத்தை வளர்க்கும் பொருட்டு, குழந்தைகளுக்கு அது பற்றிய போதனை வகுப்புகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். இது போன்று இது போன்று வேதங்கள்,சன்மார்க்க போதனைகள்,இந்திய வரலாறு, சுலோகம், தியானம், யோககலை, கைவண்ணக் கலை கள், ஆகியவற்றிற்கு சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பயிற்சிகள் ஞாயிறு தோறும் காலை 10.45 மணி முதல்12.30 மணி வரை நடைபெறுகின்றது. இத்திருத்தலம் சனி ஞாயிறு போன்ற நாட்களில் காலை 09.00 மணி வரை மாலை 21.00 மணி வரையும் மற்ற நாட்களில் காலை 09.00 மணி முதல் 12.00 மணி வரையும்,மாலை 18.00 மணி முதல் 21.00 மணி வரையும் திறந்திருக்கும். மேலும் தலம் பற்றிய விவரங்களுக்கு அணுக வேண்டிய கையகப்பேசி எண் 860 346 8675.

- ச.பொன்ராஜ்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஹூஸ்டனில் பரதநாட்டிய அரங்கேற்றம்

ஹூஸ்டனில் பரதநாட்டிய அரங்கேற்றம்...

இந்தோனேசியாவில் குறள் உரையாடல்

இந்தோனேசியாவில் குறள் உரையாடல்...

சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா

சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா ...

அமீரகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

அமீரகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)