தென் ஆப்பரிக்கா, டர்பன் நகரின் மையப் பகுதியில் சாம்ட்சியூ சாலையில் அமைந்துள்ள புகழ் பெற்ற டர்பன் இந்து கோயில், 1901ம் ஆண்டு அப் பகுதி இந்துக்களால் கட்டப்பட்டது. நூற்றாண்டைக் கடந்த இத் திருத்தலம், 1860 வாக்கில் அங்கு குடியேறிய இந்தியர்களின் ஆன்மிக மற்றும் கலாச்சார வரலாற்றைப் பிரதிபலிப்பதாக உள்ளது. இந்த கோயிலை ஒட்டியுள்ள பகுதி தற்போது சமுதாய, கலாச்சார மையமாக மாற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம் மதம், கலாச்சாரம், கல்வி மற்றும் இந்து சமுதாயத்தின் சமூக நலம் மேம்படும்.மேலும் இந்து மத கலைப் பொருட்கள், ஆவணங்கள், நூல்கள் போன்றவற்றை எதிர்கால சந்ததியினருக்காக மேம்படுத்தி பாதுகாக்கவும் முயற்சி நடைபெற்று வருகிறது. மிகப்பழமையான இந்த கோயிலில், இந்து காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான பூஜைகள் முறையாக நடத்தப்பட்டு வருகின்றன. பல பகுதிகளிலிருந்தும் இந்துக்கள் இந்த பூஜைகளில் பங்கேற்று வருகின்றனர். பெரும்பாலான இந்துக்கள் டர்பன் நகரின் மையப் பகுதி மற்றும் கடற்கரையைச் சுற்றியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இடம் பெயர்ந்து விட்டதால், அவர்களுக்கு இந்து மத பண்டிகைகளைக் கொண்டாடவோ, கலாச்சார பூஜைகளை கடைப்பிடிக்வோ வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இதனால் அவர்கள் தங்கள் பூஜைகளைச் செய்யவும் பண்டிகைகளைக் கொண்டாடவும் இந்த கோயிலுக்கு வருகினறனர். இதன் மூலம் இந்த சமுதாயத்தினரிடையே ஒற்றுமையை ஏற்படுத்துகிறது.கலாச்சாரம் மற்றும் மதம் மட்டுமல்லால் இதர விஷயங்களிலும் இளைஞர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில்பயிற்சி பட்டறைகள் நடத்தவும் கோயில் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.இப்படியாக டர்பன் கோயில் வெறும் வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல், இங்குள்ள இந்துக்களுக்கு பல விதங்களிலும் பயன்படும் மையமாக செயல்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு பெற்றேர்களும் உதவிகரமாக இருக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் எதிர்பார்க்கிறது. அனைத்து இந்து குடும்பங்களும் ஒன்றாக கூடி, தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள் இந்த கோயில் ஒரு தளமாக செயல்பட்டு வருகிறது. இளைஞர்களையும் இந்து சமுதாயத்தையும் எந்த ஒரு சவால்களையும் சமாளிக்கும் வகையில் தயார் செய்யவும், சிறந்து கல்வி அளிக்கவும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.விரைவில் இந்து சமுதாயத்திற்கான தகுதி வாய்ந்த மதம் மற்றும் கலாச்சார மையமாக இந்த கோயில் விரைவில் உருவெடுக்கும்.
கோயில் முகவரி: 24 Somtseu Road, Durban, போன்: 031 332 2848; 031 368 6576இ-மெயில்: admin@durbanhindutemple.co.za
ஹாஜிகளின் நலனுக்காக சவூதியில் 129வது இரத்ததான முகாம்....
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.