பாலாஜி கோயில், போட்ஸ்வானா
முகவரி: போட்ஸ்வானா இந்து அறக்கட்டளை,
பிளாட் 35274, பிளாக் 8,
காபோரோன்
அஞ்சல் முகவரி: போட்ஸ்வானா இந்து அறக்கட்டளை,
தபால் பெட்டி எண்: 403534,
காபோரோன்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
அக்டோபர் முதல் ஏப்ரல் வரை
வாரநாட்களில் காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரை; மாலை 05:30 மணி முதல் இரவு 08:30 மணி வரை.
விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை; மாலை 05:30 மணி முதல் இரவு 08:30 மணி வரை.
மே முதல் செப்டம்பர் வரை
வாரநாட்களில் 07:30 மணி முதல் பகல் 11:30 மணி வரை; மாலை 05:30 மணி முதல் இரவு 08:30 மணி வரை.
விடுமுறை நாட்களல் 07:30 மணி முதல் நண்பகல் 12:30 மணி வரை; மாலை 05:30 மணி முதல் இரவு 08:30 மணி வரை.
2007 ல் துவக்கிய முயற்சி
2000 மாவது ஆண்டில் சில நண்பர்கள் கூடி, பாரம்பரிய இந்திய கலாச்சாரத்துடன் கூடிய ஒரு வழிபாட்டுத் தலத்தை, இந்து சமுதாயத்திற்காக கட்டுவதென்று முடிவு செய்தனர். அப்படி உருவானதே பாலாஜி கோயில். பொட்ஸ்வானா இந்து அறக்கட்டளை என்ற அமைப்பை அவர்கள் உருவாக்கி, கோயில் கட்டுவதற்கான நிலம் ஒதுக்கி தரக் கோரி அரசுக்கு விண்ணப்பித்தனர். காபோரோன் நகர 8 வது பிளாக் பகுதியில் 7 ஆயிரத்து 18 சதுர மீட்டர் நிலத்தை அரசு ஒதுக்கித் தந்தது. சிறு சிறு நன்கொடைகள் மூலம் நிதி வசூலித்து கம்பி வேலி அமைத்தனர். கோயில் கட்டுவதற்கான திட்டத்தை உருவாக்கவும், திட்டத்தைச் செயல்படுத்தவும் முறையான செயல் குழு உருவாக்கப்பட்டது. முத்தையா ஸ்தபதி என்பவருடன் கலந்தாலோசித்து, கோயில் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. அடிப்படை வரைபடம் தயாரிக்கப்பட்ட பிறகு, 2001, மே 27 ம் தேதிகோயில் கட்டும் திட்டம் முறைப்படி துவக்கப்பட்டது.
புதிய திட்டம்
இந்த பகுதியில் இந்து சமுதாயத்தினர் மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு அனைவருக்கும் பயன் தரும் வகையில், புதிய கோயில் பாலாஜி நீங்கலாக இதர தெய்வங்களும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று இந்து சமுதாயத்தின் மூத்தவர்கள், கோயிலைக் கட்டத் துவங்கும் முன்பே யோசனை தெரிவித்திருந்தனர். அதற்கேற்ப இதர தெய்வங்களையும் பிரதிஷ்டை செய்ய கோயிலில் வழிவகை செய்யப்பட்டது. இப்படித்தான் புதிய கோயில் திட்டம் உருவானது. பாலாஜி கோயிலுக்கான மூல வரைபடம், புதிய கோயிலுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டது.
புதிய கோயிலில் பாலாஜி மற்றும் அவருடைய தெய்வ துணைவியர் மட்டுமல்லாமல், ஐயப்பன், முருகன், சிவன், வைஷ்ணவ தேவி ஆகிய கடவுளர்களின் விக்ரகங்களும் பிரதிஷ்டை செய்ய முடிவெடுக்கப்பட்டது.
கணேசர், அனுமன், நவகிரகம்
முதலில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த திறந்த வெளி மண்டபம், புதிய வடிவமைப்பிற்கு ஏற்ப, மகா மண்டபமாக மாற்றப்பட்டது. பின்னர் கணேசப் பெருமான், அனுமான் ஆகியோருக்கும் கருவறைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. நவகிரகங்களும் பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டது. இந்த மாற்றங்களின் மூலம், இந்து சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரின் தேவைக்கும் ஏற்ற கோயிலாக மாற்றம் பெற்றது. அர்ச்சகர்களுக்கான குடியிருப்பு, சடங்குகளுக்கான பிரிவு ஆகியவற்றின் முக்கியத்துவம் கருதி அவற்றை முதல் கட்டத் திட்டத்தில் சேர்க்கப்பட்டன.
நிதி வசூல்
கோயில் கட்டுமானப் பணிக்காக நன்கொடைகள் வசூலிக்கப்பட்டன. கலயாண உற்சவம் நிகழ்ச்சி, போஜன் என்ற பெயரில் உணவுத் திருவிழா, சுருதிலயா என்ற பெயரில் கலைநிகழ்ச்சி நடத்தி நிதி வசூலிக்கப்பட்டது. இதனால் கிடைத்த நிதி அளித்த ஊக்கத்தின் பேரில், 2002, நவம்பர, 23ம் தேதி கோயிலுக்கான பூமிபூஜை நடத்தப்பட்டது. 2003 மத்தி வாக்கில் பாலாஜி, ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு கருவறைகள் அமைக்கும் பணி துவங்கியது. ணகா மண்டபமும் கட்டும் பணியும் ஆரம்பமாகியது.
தொடர்ந்து ஐயப்பன், முருகன், சிவன், வைஷணவ தேவி ஆகியோருக்குமான கருவறைகள் கட்ட ஆரம்பித்த, 2005 மத்தி வாக்கில் பணி நிறைவுற்று, அழகுபடுத்தும் பணி துவங்கியது. தென் இந்திய கோயில்கள் பாணியில் அழகுபடுத்தும் பணி இருக்க வேண்டும் என்பதால், இந்தியாவைச் சேர்ந்த வாலசிங்கம் என்பவர் தலைமையில் 11 ஸ்தபதிகளிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஓராண்டிற்குள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் கண்கவர் அழகு கோயிலாக உருவெடுத்தது.
விக்ரகங்கள் வந்தன
கோயில் வளாகத்திற்குள் சாண்ட்லியர் விளக்கு, கிரானைட் தரை, ராஜகோபுரம், மகாமண்டபம் ஆகியவற்றுக்கு கலையம்சங்கள் செதுக்கப்பட்ட இந்திய தேக்குமர கதவுகள் அமைக்கப்பட்டன. கட்டுமானப்பணி நடந்து கொண்டிருக்கும்போதே, கற்கள் மற்றும் பஞ்சலோகத்தாலான விக்ரகங்கள் உரிய மதச் சடங்குகளுக்குப் பின் கொண்டு வரப்பட்டு, கருவறைகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பின்னர் முறையான பூஜைகளும் ஆரம்பமாகியது.
அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்தியாவிலிருந்து மூ விக்ரகங்கள் கொண்டு வரப்பட்டு லகு சம்ப்ரோக்ஷணம் செய்யப்பட்டது. 48 நாட்களுக்கு ஜலதிவாசம், தான்யதிவாசம் ஆகியவையே லகு சம்ப்ரோக்ஷணம் என அழைக்கப்படுகிறது.
கும்பாபிேஷகம்
கோயில் கட்டத் துவங்கி 7 ஆண்டுகளுக்குப் பின், 2007, செப்டம்பர் 16ம் தேதி மகா கும்பாபிேஷகம் நடைபெற்றது. இதற்கான சடங்குகள், செப்டம்பர் 9ம் தேதி துவங்கின. அன்றைய போட்ஸ்வானா அதிபரும் இந்திய தூதரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஹாஜிகளின் நலனுக்காக சவூதியில் 129வது இரத்ததான முகாம்....
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.