தேஸி ஜிந்தகி.எப்எம், பிரிமான்ட், கலிபோர்னியா
தேஸி ஜிந்தகி.எப்எம், பிரிமான்ட், கலிபோர்னியா
Desizindagi, Fremont, California
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வளைகுடா பகுதியிலிருந்து உலகில் வாழும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் தமிழ் சிறப்பு இணைய வானொலி நிகழ்ச்சி 'காலை தென்றல்' வாரம் தோறும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை
www.DesiZindagi.fm என்ற இணைய ரேடியோ அலைவரிசையில் அரிமா எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்குகிறார்கள் . இதில் மங்கள நாதம் , ஆன்மீக விவரங்கள் நிறைந்த பக்தி பாமாலை, குழந்தைகளுக்கான குட்டீஸ் கார்னர்,அரிமாவின் ராக கீதங்கள், நேயர் விருப்பம்,ஓல்ட் இஸ் கோல்ட், நேயர்களுக்கான விளையாட்டு அம்சம் கொண்ட சவாலே சமாளி மற்றும் நேயர்களுக்கு பயன் தரும் வகையில் டிப்ஸ் கார்னர், ஜாப்ஸ் கார்னர் போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது.குட்டீஸ் கார்னரில் கேட்கப்படும் குழந்தைகளுக்கான அறிவு சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் குழந்தைகளுக்கு பரிசு அளிக்கப்பட்டு தக்க விதத்தில் ஊக்குவிக்கபடுகிறார்கள். மேலும் நேயர்களுடன் கருத்து பரிமாற்றம் இடம் பெறுகிறது. இந்நிகழச்சிகள் அனைத்தையும் வீ. ரமேஷ் மற்றும் சாந்தி ரமேஷ் தொகுத்து வழங்குகிறார்கள். மேலும் வாரம் தோறும் ஞாயிற்று கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை 'நினைத்தாலே இனிக்கும்' என்ற மற்றுமொரு தமிழ் சிறப்பு இணைய வானொலி நிகழ்ச்சி அரிமா எண்டர்டைன்மெண்ட் என்கின்ற நிறுவனத்தால் வழங்கபடுகிறது. இதில் உன்னதமான தமிழ் இசை தொகுப்பிலிருந்து பாடல்கள் ஒளிபரப்பப்படும்.'அரிமாவின் காலை தென்றல்' 'நினைத்தாலே இனிக்கும்' மற்றும் தமிழ் வானொலி நிகழ்ச்சிகளை அமெரிக்காவில் பிற மாகாணத்தில் வாழும் தமிழர்களும் மற்றும் உலக தமிழர்கள் அனைவரும்
www.DesiZindagi.fm மற்றும்
www.arimausa.com என்ற இணையதளத்தில் உள்ள லிசன் லைவ் பகுதியில் வாரம் தோறும் சனிக்கிழமை காலை PST டைம் காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை கேட்டு மகிழலாம். முந்தைய பதிவு நிகழ்ச்சிகள் அனைத்தையும் அச்சீவ்ஸ் இல் கேட்கலாம். அரிமா எண்டர்டைன்மெண்ட், தமிழ் நெஞ்சங்களின் பாடும் திறனை ஊக்குவிக்கும் வகையில் 'தமிழ் கரோக்கி கிளப்' என்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளார்கள். இந்த அமைப்பு மாதம் தோறும் 'கரோக்கி' பாட்டு நிகழ்ச்சிகளை வளைகுடா பகுதியில் வாழும் தமிழர்களுக்காக நடத்துகிறார்கள்.எனவே இப்பகுதியில் வாழும் பாடும் திறமை உள்ள மற்றும் விருப்பம் உள்ள தமிழர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு
www.tamilkaraokeclub.com இல் உங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
Desizindagi
Contact

FremontCalifornia94538United Stateshttp://www.desizindagi.fm