இந்து கோயில், கம்பாலா
HINDU TEMPLE, KAMAPALAAddress: 10, Snay Bin Amir Rise, Kampala, Uganda
தலவரலாறு : யுகாண்டாவின் தலைநகரான கம்பலாவில் அமைந்துள்ள மிகப் பெரிய இந்துக் கோயில் இதுவே ஆகும். அருள்மிகு சனதன் தர்ம் மண்டல் என்றழைக்கப்படும் இக்கோயிலின் வடிவமைப்பாளர் யார் என்பது சரியாக தெரியவில்லை. யுகண்டாவின் விடுதலைக்கு பின்னர் 1960 களின் முற்பகுதியில் கம்பலாவின் முக்கிய இடமாக இக்கோயில் கருதப்பட்டது. இக்கோயிலுக்கான கட்டுமானப் பணியின் முதல்கட்டமாக நிலம் தேர்வு செய்யப்பட்டது. சோலைகள்,நதிகள்,மலைகள் மற்றும் நீரூற்றுகள் ஆகியவற்றின் ஒன்றின் அருகில் கோயில் அமைப்பதற்கான சிறந்த சூழலாகும் என கோயில் நிர்வாகத்தினர் கருதினர். இறுதியில் நீர் நிலைக்கு அருகில் கோயில் அமைக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்துக் கோயிலின் முக்கிய அம்சமான சிகரத்தில் உச்சியில் கோயில் அறை அமைக்கப்படுவது போன்ற பண்டைய இந்துக் கோயில்களின் சாஸ்த்திரப்படி இக்கோயில் வடிவமைக்கப்பட்டது. கம்பலா இந்துக் கோயிலின் கோபுரம் ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்த நகரத்தார்களின் முறையில் தேன்கூடு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. சதுர வடிவிலான தரைகளும் சுவர்களை தாங்கும் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதே போன்ற கோயில்கள் கம்பலா நகரில் அதிகளவில் காணப்படுகின்றன. சார்லஸ் மாசன் ரெமி என்ற அமெரிக்க கட்டிட வடிவமைப்பாளரால் இக்கோயில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள பஹாயி எனப்படும் வழிபாட்டு தலமும் இவராலேயே வடிவமைக்கப்பட்டதாகும். கம்பலாவின் கிகயா மலை பகுதியில் அமைந்துள்ள இரண்டு கோயில்களே ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கோயில்களுக்கு முன்னோடியாக கருதப்படுகிறது. கம்பலா அமைந்துள்ள இக்கோயில் 130 அடிக்கும் மேலான உயரமும் 100 மீட்டர் சதுரளவிலும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் அடித்தளம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத வகையில் 10 அடி நீளத்திற்கு போடப்பட்டுள்ளது. இக்கோயிலின் கட்டுமானப் பணிகள் 1958-ம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கப்பட்டது. 1961-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ம் தேதி இக்கோயில் திறக்கப்பட்டு, மக்கள் தரிசனத்திற்காக சமர்பிக்கப்பட்டது.
ஏப்ரல் 14, பிரிக்பீல்ட்ஸ் கந்தசாமி கோயிலில் தமிழ் புத்தாண்டு 2021...
ஏப்ரல் 14, பிரிக்பீல்ட்ஸ் கந்தசாமி கோயிலில் தமிழ் புத்தாண்டு 2021...
ஜித்தா தமிழ் சங்க உறுப்பினர்கள் இந்திய தூதரக அதிகாரியுடன் சந்திப்பு...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.