ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம், ஹம், ஜெர்மனி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம், ஹம், ஜெர்மனி

அக்டோபர் 10,2017 

Comments

 ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம், ஹம், ஜெர்மனி
Hindu Shankarar Sri Kamadchi Ampal Tempel e.V. (Europa)Siegenbeckstraße 4-559071 HammDeutschland
கோயில் திறந்திருக்கும் நேரம்:தினந்தோறும் காலை 08- 00 மணி முதல் பிற்பகல் 14-00 வரை; மாலை 17-00 மணி முதல் இரவு 20-00 மணி வரை;
பூஜைகள்: காலை 08-00; நண்பகல்: 12-00; மாலை 06-00.கோயில் முகவரி: Siegenbeckstrasse 4-5, Hamm-Uentrop, Germany.
இணைய தளம்:

http://kamadchi-ampal.olanko.de/index.php/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html
தொலை பேசி: 023 88/30 22 23 - 02388/30 22 25தொலை நகல்: 023 88/30 22 24மின்னஞ்சல்: info@kamadchi-ampal.de

கோயில் வரலாறு:


1989ம் ஆண்டில் ஆரம்பிக்கிறது ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலய வரலாறு. ஆலய ஸ்தாபகர் சிவஸ்ரீ ஆறுமுக பாஸ்கரக்குருக்கள் இலங்கையைச் சேர்ந்தவர். 1986ல் பிரான்ஸ் செல்லும் வழியில் ஜெர்மனி ஹம் நகரில் தங்க நேரிட்டது. அவர் வாடகைக்கு இருந்த வீட்டிலேயே தன்னுடைய வழிபாட்டு அறையை அம்பாளின் கோயிலாக நினைத்து பூசைகளை செய்து வந்தார். இதை அறிந்து நாளடைவில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே சென்றது. 1989ம் ஆண்டில் நில அறையில் அன்னை காமாக்ஷிக்கு சிறு கோயில் போன்ற மாதிரி வடிவத்தை பக்தர்களின் உதவியுடன் உருவாக்கி அதிலே அன்னையை எழுந்தருளச் செய்து நாள்தோறும் பூசைகளைச் செய்து வரலானார். அவருக்கு உதவியாக குருக்களின் சகோதரர் சிவஸ்ரீ. கேதீஸ்வரஐயாவும் அன்றாட பூசைகளில் அன்னை காமாக்ஷிக்கு பணிகள் செய்து வந்தார்.
பின்னர் 1992ம் ஆண்டில் ஹம் நகரில் ஒரு மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அந்த இடத்தில் அன்னைக்கு கர்பக்கிரகம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான சந்நிதிகளை ஆலய ஆச்சாரியார்களின் உதவியுடன் அமைத்து 1992ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்து அன்னைக்கு தினமும் இரண்டு நேரப் பூசைகளை செய்து வந்தார்.

வருடாந்தர உற்சவம்


1993ம் ஆண்டில் அன்னை ஸ்ரீ காமாட்சி அம்பாளுக்கு முதன் முதலாக வருடாந்தர உற்சவத்தை குருக்கள் ஆரம்பித்து வைத்தார். உற்சவத்திற்காக இந்தியாவிலிருந்து குருமார்கள் வரவழைக்கப்பட்டு உற்சவம் மிகச் சிறப்பாக நடத்தி வைக்கப்பட்டது. 1994ம் ஆண்டு உற்சவத்தில் முதன் முதலாக ரதோற்சவம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ரதோற்சவ விழாவிற்காக இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் சிவாச்சாரியர்கள் அழைக்கப்பட்டு குருக்கள் அவர்களின் தலைமையில் ரதோற்சவ விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது சுமார் 2000 பக்தர்கள் உற்சவத்தில் பங்கேற்றனர்.
விழாக் காலங்களில் பங்கு பற்றும் பக்தர்களின் எண்ணிக்கை மென்மேலும் அதிகமாகவே சென்றது. இதன் காரணமாக இடத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதித்தது. ஒரு நாள் குருக்கள் கனவில் அன்னை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் தோன்றி ஆலயத்தை அமைப்பதற்கான இடத்தை தெரியப்படுத்தி மறைந்தாள். அந்த இடம் ஹம் நகரிலிருந்து சுமார் 10கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த ஹம் நகர்ப்புறமான உன்ரோப் எனப்படும் ஒரு சிறு கிராமம். 1996ஆம் ஆண்டு உன்ரோப் பகுதியில் அன்னைக்கு சொந்தமாக நிலம் வாங்கி அந்த இடத்தில் சிறிய ஆலயமாக அமைத்து 1997ஆம் ஆண்டில் மஹா கும்பாபிஷேம் நடத்தினார்.

புதிய இடம்


உன்ரோப் பகுதியில் அன்னையின் ஆலயத்தில் தினமும் 2வேளைகள் பூசைகள் செய்யப்பட்டது 1998 ஆம் ஆண்டு நடை பெற்ற அம்பாளின் மஹோற்சவ விஞ்ஞாபனத்தில் சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு அன்னையின் அருள் பெற்றுச் சென்றனர். 1998ஆம் ஆண்டு அதே இடத்தில் உள்ள பெரிய நிலத்தை பக்தர்களின் உதவியுடனும் வங்கியின் கடனுதவியுடனும் வாங்கி அங்கே ஆலயம் அமைப்பதற்கு உரிய பூமி பூசை தொடங்கப்பட்டது.
ஹம் நகரில் வசிக்கும் ஹைன்ஷ் ரைய்னர் ஐஸ்கோஸ்ற் எனும் கட்டிட நிபுணரின் கட்டுமாணப் பணியுடன். ஆலய கட்டிட வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அடுத்ததாக சிற்ப வேலைகளுக்காக இந்தியாவிலிருந்து சிற்ப கலைஞர்கள் 1999ஆம் ஆண்டு கடைசிப்பகுதியில் வரவழைக்கப்பட்டு சிற்பவேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் ஆலய விக்கிரகங்கள் அனைத்தும் இந்தியாவில் செதுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டது. பார்ப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில் சிலைகள் யாவும் கருங்கற்களில் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. மூல விக்கிரகம் (காமாக்ஷி அம்பாள்) இந்தியா காஞ்சி காமாக்ஷி அம்பாளின் திருவுருவத்தை ஒத்ததாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மகாகும்பாபிேஷகம்


சுமார் 18 மாதங்கள் தொடர் வேலைகளின் பின்பாக 2002ஆம் ஆண்டு 7ம் மாதம் 7ம் தேதி ஸ்ரீ காமாக்ஷி அம்பாளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திறகாக பல சிவாச்சாரியர்கள் இந்தியாவிலும் இலங்கையிலிருந்தும் வருகை தந்து அன்னையின் புதிய ஆலய கும்பாபிஷேகம் சிறப்புற சிவஸ்ரீ. ஆறுமுக பாஸ்கரக்குருக்களின் தலைமையில் நடத்தி வைக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தின் பின்பாக அன்னை ஸ்ரீ காமாக்ஷி அம்பாளுக்கு தினமும் மூன்று காலப் பூசைகள் நடைபெற்று வருகிறது
VIDEO: THEROTTAM
https://youtu.be/6kWRQo_N-UY

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துக்கு லண்டன் வழங்கிய உலக மகா விருது

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துக்கு லண்டன் வழங்கிய உலக மகா விருது...

குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் நடத்தும் கவிதைப் போட்டி

குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் நடத்தும் கவிதைப் போட்டி...

லயன்ஸ் சங்க நண்பர்கள் மூலம் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் தொடர் சேவை

லயன்ஸ் சங்க நண்பர்கள் மூலம் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் தொடர் சேவை...

துபாயில் சிறப்பு உளவியல் நிகழ்ச்சி

துபாயில் சிறப்பு உளவியல் நிகழ்ச்சி ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us