சிவ கிருஷ்ணா கோயில், துபாய் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிவ கிருஷ்ணா கோயில், துபாய்

அக்டோபர் 15,2017  IST

Comments

சிவ கிருஷ்ணா கோயில், துபாய்SIVA KRISHNA TEMPLE, DUBAI
முகவரி சிவா மந்திர், கிருஷ்ணா மந்திர்துபாய் அருங்காட்சியகம் அருகில், பர் துபாய்62 ஏ தெரு, பர்துபாய்துபாய், ஐக்கிய அமீரகம்
Address LocationShiva Mandir & Krishna MandirNear Dubai Museum, Bur Dubai62A Street Bur DubaiDubai, United Arab Emirates
நேரம்: காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை; மாலை 04:30 மணி முதல் இரவு 10 மணி வரைTime : Morning Hours: 6:00 AM to 1:00 PM. Evening Hours – 4:30 PM to 10:00 PM.
போன்: +971 50 966 3825

Phone : +971 50 966 3825
இணைய தள முகவரி:
http://allhindutemples.com/city/dubai/hindu_temple/hindu-shiva-temple-dubai-uae/

கிருஷ்ணர் கோயில்:

ஐக்கிய அரபு நாடுகளில் புகழ்பெற்ற நாடான பர்துபாயில் அமைந்துள்ளது அழகிய இந்துக்கோயில் வளாகத்தில் சிவயபருமான் மற்றும் கிருஷ்ணர் ஆலயங்கள் அமைந்துள்ளன.அருள்மிகு கிருஷ்ணர் திருக்கோயில் இந்துக்களின் வழிபாட்டு திருத்தலமாக மட்டுமின்றி, துபாயின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் திகழ்கிறது. துபாயில் உள்ள புகழ்பெற்ற இந்துக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பர்துபாய் பகுதியில் அமைந்துள்ளது. நீரோடைக்கு அருகே அமைந்துள்ள இக்கோயிலுக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் படகுகளின் மூலமே வருகின்றனர். அப்ரா என்று அழைக்கப்படும் இந்த படகுகளின் மூலம் நீரோடையின் மறுகரையை அடைய சுமார் 20 நிமிடங்கள் ஆகின்றன. இங்கிருந்து 10 நிமிட நடைபயணம் மேற்கொண்டால் கிருஷ்ணர் கோயிலை அடையலாம். மிகப் பெரிய இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள ராதா-கிருஷ்ணர் சிலைகள் வடஇந்திய முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலைகளின் முன்புறம் மிகப்பெரிய வழிபாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வறையில் அமர்ந்தே பக்தர்கள் தியானம், பஜனை போன்ற பக்தி நாட்டத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் பூக்கள், இனிப்புக்கள், வஸ்திரங்கள் போன்ற கடவுளின் காணிக்கைகளை கோயில் அர்ச்சகரிடம் அளிக்கின்றனர். இக்கோயிலில் ஓர் அமைதியான சூழ்நிலையை உணரமுடிகிறது. பக்தர்களின் வசதிக்காக கோயில் கீழ்புறத்தில் ஒரு பெரிய அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் சில குறிப்பிட்ட நாட்களிலும், குறிப்பிட்ட நேரங்களிலும் மட்டுமே திறக்கப்படுகிறது. பூக்கள், மாலைகள், துளசி, தேங்காய் போன்ற பூஜைக்கான பொருட்கள் விற்பதற்காக கோயிலைச் சுற்றி ஏராளமான கடைகள் உள்ளன. மேலும் பக்தர்கள் அமர்வதற்கும், சாப்பிடுவதற்கும் ஏற்றவாறு கோயிலைச் சுற்றி விலாசமான இடங்களும் உள்ளன.

சிவன் கோயில்:

துபாய் இந்து கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலின் முக்கிய தெய்வம் சிவ பெருமான். இக்கோயிலின் கருவறையில் மிகப் பெரிய சிவன் சிலையும் அதற்கு முன்னதாக சிவலிங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக பால்,தேங்காய், பழங்கள், பூக்கள் மற்றும் இனிப்புக்கள் ஆகிய பொருட்கள் நிவேதனக் காணிக்கையாக பக்தர்களால் அளிக்கப்படுகிறது. இப்பொருட்கள் விற்கப்படும் கடைகளும் கோயிலின் அருகிலேயே அமைந்துள்ளன. இக்கோயிலில் எல்லா நேரமும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியே காணப்படுகிறது. இக்கோயிலில் கணேசர், கிருஷ்ணர், லட்சுமி, துர்க்கை, சாய்பாபா போன்ற இந்து தெய்வங்களின் படங்களும் வைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் மேல்தளத்தில் சீக்கியர்களின் வழிபாட்டுத்தலமான குருத்வாரும் அமைந்துள்ளது. இக்கோயிலில் இந்துக்களின் அனைத்து விதமான பண்டிகைகளும் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக சிவராத்திரி அன்று பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் மேற்கொள்கின்றனர். ரொட்டி மற்றும் சமைத்த கறி ஆகியன பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. பக்தர்கள் ஓய்வெடுப்பதற்காக இக்கோயிலில் இருக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

கோவில் நிகழ்வுகள் தொடர்பான வீடியோ :

https://youtu.be/fcQsFzcxupU
https://youtu.be/EssAWrURX88
https://youtu.be/HvRQHtc4nf4
https://youtu.be/uSBfsjbpWmw
https://youtu.be/6Xip0GjnN6Q

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நைஜீரியாவில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள்

நைஜீரியாவில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள்...

டல்லாஸ் நகரில் தமிழர் தைத்திருநாள் பொங்கல் திருவிழாக் கொண்டாட்டம்

டல்லாஸ் நகரில் தமிழர் தைத்திருநாள் பொங்கல் திருவிழாக் கொண்டாட்டம்...

சியாட்டெல் தமிழ் கழக பொங்கல் விழா

சியாட்டெல் தமிழ் கழக பொங்கல் விழா...

கென்யா- நைரோபியில் ஸ்ரீ கல்யாண வேங்கடஸ்வரர் ஆலயத்தில் திருப்பாவை பாசுரம்

கென்யா- நைரோபியில் ஸ்ரீ கல்யாண வேங்கடஸ்வரர் ஆலயத்தில் திருப்பாவை பாசுரம் ...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)