தமிழ் ஒலி, குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தமிழ் ஒலி, குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா

அக்டோபர் 17,2017  IST

Comments

  தமிழ் ஒலி, குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா
'தமிழ் ஒலி' தன்னார்வலர்களால் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்த படும் ஒரு வானொலி.. ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பிரிஸ்பேன் நகரில் 'தமிழ் ஒலி' வானொலி இயங்கி வருகிறது. தமிழ் ஒலி வானொலி '4EB சமூக வானொலியின்” ஒரு அங்கம். இது EBAQ (Ethnic Broadcasting Association of Queensland Limited) என்னும் அரசு சார்ந்த நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. '4EB சமூக வானொலியில் ' தமிழ் மொழி மட்டுமல்லாது சுமார் 50 மொழிகளில் வானொலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறது. 


வாரம் இருமுறை


நமது வானொலி நிகழ்ச்சிகள் வாரம் இருமுறை (2 மணி நேரம்) பண்பலை (FM98.1) அலைவரிசையிலும், 5 மணி நேரம் எண்ணிமைக்குறிகை (Global Digital) அலைவரிசையிலும் ஒலிபரப்படுகிறது. நிகழ்ச்சி படைப்பாளர்கள், தொகுப்பாளர்கள், பலகை இயக்குனர்கள் , நிர்வாகக்குழு உறுப்பினர்கள் என அனைவரும் தன்னார்வர்லர்களே. நம் தமிழ் சமூகத்தை ஒன்றிணைத்து, அன்றாட நிகழ்வுகளை வானொலி மூலமாக நம் தமிழ் உள்ளங்களுக்கு கொண்டு சேர்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மேலும், எங்களது தன்னார்வ உள்ளம் கொண்ட நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், சுவாரசியமான பல நிகழ்ச்சிகளை படைத்த வண்ணம் உள்ளனர். எங்களது நிகழ்ச்சிகளை ஆஸ்திரேலியா மட்டுமல்லாது, இந்தியா, சிங்கப்பூர், இலங்கை, மலேசியா போன்ற நாடுகளிலும் இணையத்தளம் மூலம் நேயர்கள் கேட்டு மகிழ்கின்றனர்.


தமிழுக்கு முதல் இடம்


4EB வானொலியில் இயங்கி வரும் 50 மொழிகளுள் தமிழ் மொழி எண்ணிமைக்குறிகை (Global Digital) முதல் இடத்திலும், பண்பலை (FM) அலைவரிசையில் முதல் 10 இடத்திலும் உள்ளது.. தமிழ் ஒலி நிகழ்ச்சிகளை வெள்ளி மாலை 4 மணி தொடக்கம் 5 மணிவரையும், ஞாயிறு இரவு 9 மணி தொடக்கம் 10 மணி வரையும், வானலையில் 98.1 பண்பலைவரிசையின் ஊடாகவும், எண்ணிமக்குறிகை நிகழ்ச்சிகளை “GLOBAL DIGITAL-ல்” ஞாயிறு, திங்கள், புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 7 மணி முதல் 8 மணி வரை கேட்டு மகிழலாம். நேரடி ஒலிபரப்பை இணையத்தில் www.4eb.org.au என்ற பக்கத்தில் “LISTEN LIVE” என்பதை தேர்வு செய்தும் நீங்கள் கேட்டு மகிழலாம். மேலும் எமது நிகழ்ச்சிகள் ஒரு வாரம் வரை ON DEMAND வழியாகவும் செவிமடுக்கலாம். அதற்கு இணையத்தில் www.4eb.org.au என்ற பக்கத்தில் “ON DEMAND” என்பதை தேர்வு செய்து, “FILTER BY SHOW DROP DOWN MENU-ல்” தமிழ் மொழியைத் தேர்வு செய்து செவிமடுக்கலாம். முகநூல் வழியாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் நிகழ்ச்சிகளை பற்றிய பல பின்னூட்டல்கள் மற்றும் கருத்துகளை நேயர்கள் தொடர்ந்து வழங்கி வருகின்ற்னர். தொடர்புகளுக்கு உரிய மின்னஞ்சல் tamil@4eb.org.au. மேலும் தகவல்களை முகநூல் பக்கம் https://www.facebook.com/brisbane.4eb.tamil.oli அல்லது இணையத்தில் Tamil Programme | Radio 4EB காணலாம்.


Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மலேசியாவில் தைப்பூச விழா கொண்டாட்டம் துவக்கம்

மலேசியாவில் தைப்பூச விழா கொண்டாட்டம் துவக்கம்...

பஹ்ரைனில் உழவர் திருவிழா

பஹ்ரைனில் உழவர் திருவிழா ...

கோலாகலமாக கொண்டாடப்பட்ட தைவான் தமிழ்ச் சங்க 7ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா

கோலாகலமாக கொண்டாடப்பட்ட தைவான் தமிழ்ச் சங்க 7ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா...

அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) மக்கள் சேவை உறுதிமொழி

அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) மக்கள் சேவ...

Advertisement
Advertisement

போலிசான்றிதழ் பேராசிரியர்கள் கைது

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைகல்லுாரியில் போலியாக கல்வி சான்றிதழ்கள் கொடுத்த உதவி பேராசிரியர்கள் நாகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டனர். ...

ஜனவரி 20,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)