ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில், நைரோபி
கோயில் திறந்திருக்கும் நேரம்
ஞாயிறு முதல் வெள்ளி வரை மற்றும் விடுமுறை நாட்கள்: காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை; மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை. சனிக்கிழமை: காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை; மாலை 4 மணி முதல் இரவு 08:30 மணி வரை.
முகவரி:
ஸ்ரீ பாலாஜி கோயில் கமிட்டி, ஸ்ரீ சநாதன தர்ம சபா, கீழ் கபேடே சாலை, தபால் பெட்டி- 40032- 00100, நைரோபி, கென்யா
மின்னஞ்சல்
e-mail : info@balajikenya.orgnarendra.kodali@gmail.com
இணையதளம்http://www.balajikenya.org
ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் கென்யா தலைநகர் நைரோபியில் அமைந்துள்ளது. கோயில் தென்னிந்திய முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது. கோயில் கர்ப்ப கிரகம் 2 அடுக்கு விமானங்களில் அமைக்கப்பட்டுள்ளது. விமானம் 15 அடி 4 அங்குல உயரம் கொண்டது. கோயில் நுழைவு வாயிலில் 20 அடி 8 அங்குல உயரத்தில் கோபுரம் உள்ளது. கோபுரம் மற்றும் விமானத்தின் பல பகுதிகள் ஒலியை எதிரொலிப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.
கோயில் நிகழ்ச்சிகள் :
காலை: 6.00 மணி முதல் 6.30 வரை - சுப்ரபாதம்; 6.30 மணி முதல் 7.30 வரை - சுத்தி மற்றும் தோமாலை சேவை; 7.30 மணி முதல் 8.30 வரை - ஸ்ரீ வெங்கடேஸ்வரருக்கு சகஸ்கரநாம அர்ச்சனை மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி அஷ்டோத்ர அர்ச்சனை; 9 மணி முதல் 9.30 வரை : நிவேதனம்; 9.30 மணி முதல் நண்பகல் 12 வரை - சர்வ தரிசனம்
மாலை: 4 மணி முதல் 5.30 மணி வரை - சர்வ தரிசனம்; 5.30 மணி முதல் 6.30 வரை : கைங்கரியம், சுத்தி, தோமாலை சேவை மற்றும் அஷ்டோத்ர சேவை; 6.30 மணி முதல் இரவு 7.45 வரை - அர்ச்சனை;
இரவு: 7.45 மணி முதல் 8 மணி வரை - ஏகாந்த சேவை மற்றும் பாவலிம்பு சேவை
சனிக்கிழமை நிகழ்ச்சிகள்
காலை: 6.00 மணி முதல் 6.30 வரை - சுப்ரபாதம்; 6.30 மணி முதல் 7.30 வரை - தரிசனம், ஆரத்தி, தீர்த்தம்; 7.30 மணி முதல் 8.00 வரை - சடலிம்பு சேவை (அபிஷேகத்திற்கு தயார் செய்தல்); 8.00 மணி முதல் 9.30 வரை - அபிஷேகம் (பக்தர்கள் விருப்பப்படி பால், தயிர், தேன், நெய், சந்தனம், இளநீர், மஞ்சள், குங்குமம், கற்பூரம் போன்ற அபிஷேக பொருட்களை வழங்கலாம்); 9.30 மணி முதல் 11 மணி வரை - அலங்காரம்; 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை - அஷ்டோத்ரம், தோமாலை சேவை
மாலை: 4.00 மணி முதல் 8.00 வரை - பிற நாட்களில் உள்ள நிகழ்ச்சிகள்
மாத நிகழ்வுகள் :
ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்று கிழமையில் காலை 10 மணி முதல் மதியம் 1.00 வரை - கல்யாண மகோத்சவம், ஸ்ரவண மகோத்சவம்.
ஆண்டு நிகழ்வுகள் :
ஏப்ரல் 29 : புஷ்ப யாகம்( திருப்பதியில் நடப்பது போல தசரா நாட்களில் பிரம்மோற்சவம்)வசந்தோற்சவம் : வருடத்திற்கு 3 நாட்கள்பவித்ரோற்சவம் : வருடத்திற்கு 3 நாட்கள்
பிற நிகழ்ச்சிகள் :
சத்யநாராயண பூஜை, நாமகரணம், அன்னதானம், அக்ஷரப்யாசம், உபநயனம், கேச காந்தனா, வாகன பூஜை, விவாகம் மற்றும் பல.
ஹாஜிகளின் நலனுக்காக சவூதியில் 129வது இரத்ததான முகாம்....
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.