ஸ்ரீ மீனாட்சி தேவஸ்தானம், பியர்லாந்து, டெக்சாஸ்
SRI MEENAKSHI DEVESTHANAM, PEARLAND, TEXAS
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள, பியர்லாந்து, ஹூஸ்டனில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி அம்மன் ஆலய நிர்வாகம் 1977ம் ஆண்டு, அக்டோபர் மாதம் நிறுவப்பட்டது. 1978, ஜூன் 20ம் தேதி, இக்கோயிலுக்கான நிலம் பெறப்பட்டு, விநாயகர் ஆலயம் கட்டி 1979 ஆகஸ்டில் விநாயகர் சதுர்த்தியன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஹூஸ்டன் மக்களால்,
இவ்வாலயத்தில் தினசரி பூஜைகள் நடத்தப்பட்டன.
ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலை பேராசிரியரான ரஞ்சித் பானர்ஜி, ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயிலுக்கான வரைபடத்தை உருவாக்கினார். கோயிலின் பெரும் பகுதிக்கான வரைபடத்தை எஸ்.எம்.கணபதி ஸ்தபதி, மூல சன்னதிக்கான கட்டுமானப்பணி மற்றும் வளர்ச்சிப்பணிக்கு முத்தையா ஸ்தபதி ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.
1982 ல் முதல் மகா கும்பாபிேஷகம்
இதன் மகாகும்பாபிஷேகம் 1982ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. கோயிலின் முக்கிய தெய்வங்களான மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், வெங்கடேஷ்வரர் ஆகிய விக்ரகங்கள் ஆகம விதிப்படி அமைக்கப்பட்ட யந்திரங்கள் மீது பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிவ சன்னதிக்கு எதிரே நந்திகேஸ்வரரும் வெங்கடேஷ்வரர் சன்னதிக்கு எதிரே கருடாழ்வாரும் உள்ளனர்.
செல்வத்தின் அதிபதியாக போற்றப்படும் மகாலட்சுமி, இங்கு பத்மாவதி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, 1994 ஜூன் மாதத்தில் மூலஸ்தானத்திலுள்ள விக்ரகங்களுக்கு அஷ்டபந்தன பூஜை செய்யப்பட்டது. பிறகு, கிழக்கு கோபுரத்துடன் சேர்த்து, மூன்று ராஜகோபுரங்களும் நான்கு பிரகாரங்களும் கட்டப்பட்டு, 1995ம் ஆண்டு ஜூலை மாதம் 16ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
முக்கிய தெய்வங்கள்:
கணபதி, சிவன், மீனாட்சி, வெங்கடேஷ்வரர், பத்மாவதி, ஐயப்பன், முருகன், ராமர்- சீதை, ஹனுமான், நடராஜர் மற்றும் துர்க்கை.
முக்கிய திருவிழாக்கள்:
மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம், தியாகராஜர் இசை விழா, மீனாட்சி திருக்கல்யாணம், பிரமோற்சவம், ராமநவமி.
கோயில் நேரங்க
ள்:
திங்கள் முதல் வியாழன் வரை: காலை 8.30 முதல் நண்பகல் 12 மணி வரை; மாலை 5 மணி முதல் இரவு 8.30 வரை;
வெள்ளிக்கிழமை: காலை 8.30 மணி முதல் நண்பகல் 12 வரை; மாலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரை.
சனி, ஞாயிறு மற்றும் தேசிய விடுமுறை நாட்கள்: காலை 8.30 முதல் இரவு 8.30 வரை.
Temple Timings
Monday - Thursdays 8:30 AM to 12 noon and 5:00 PM to 8:30 PM
Fridays 8:30 AM to 12 noon and 5:00 PM to 9:00 PM
Weekends and National Holidays 8:30 AM to 8:30 PM
தொடர்புக்கு
Contact Us
SRI MEENAKSHI TEMPLE SOCIETY 17130 McLean Road, Pearland, TX, USA 77584-4630
temple@meenakshi.org
https://www.emeenakshi.org
Main Temple: 281-489-0358 Extn 100 / 101
Office: 281-489-0358 Extn 100 / 110
Temple Fax (for Pooja Requests): 281-489-3540
Temple Kitchen: 281-489-0358 Extn 227
Library: 281-489-0358 Extn 125
Temple Mnagement
Chairman: Sri Sockalingam Narayanan, Socn1@hotmail.com
Secretary: Sri G.N. Prasad, Narasimhagnp@gmail.com
Treasurer: Sri Sasidharan Pillai, nsasipillai@aol.com
Executive Officer: Sri N.S. Vatsa Kumar, 281-489-0358; 832-689-6448
Administrator: Sri K. Venkatachalam, 281-857-6096; 832-725-1805
Priests:
Sri Pavan Kumar Sri Bhashyam, Sri N.Kalyana Sundaram, Sri R.K.E. Parameswaran, Sri Sridharan Raghavan, Sri Sriman Narayana, Sri Balaji Sethuraman
76 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்...
இந்தியா - குவைத் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வெளிப்படுத்தும் பஸ் விளம்பரம்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.