ஸ்ரீ சவுமிநாராயண் கோயில், சிகாகோ | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ சவுமிநாராயண் கோயில், சிகாகோ

நவம்பர் 12,2017 

Comments

ஸ்ரீ சவுமிநாராயண் கோயில், சிகாகோBAPS Shri Swaminarayan Mandir, Chicago
அமெரிக்காவில் சிக்காகோ பகுதியில் பார்ட்லட் என்ற இடத்தில் புதிதாக ஒரு இந்து கோயில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்துக்கள் இதை உலகின் எட்டாவது உலக அதிசயமாக சொல்கிறார்கள். அமெரிக்காவின் வடமேற்கு புறநகர் பகுதியில் சுமார் 69 கோடியே 10 லட்சம் செலவில் கட்டப் பட்டுள்ள இக் கோயில்தான் வட அமெரிக்காவில் உள்ள இந்து கோயில்களில் பெரியது. லண்டனில் இருக்கும் கோயிலுக்கு அடுத்ததாக இது தான் மனதில் படியக் கூடியதாக கருதப்படுகிறது. இக் கோயில் மலைகளுக்கு நடுவே உள்ள அழகான இடத்தில் 38 ஏக்கர் இடத்தில் கட்டப் பட்டுள்ளது.

இரும்பு இல்லாத இரு மாடி கட்டடம்
அலங்காரமாக செதுக்கப்பட்ட கற்களைக் கொண்டு 2 மாடிகளாக கட்டப்பட்ட இக் கோயிலின் வெளிப்புறத்தை பல்கேரிய சுண்ணாம்பு கற்களை கொண்டு கட்டியிருக்கிறார்கள். உள்புறத்தில் இத்தாலியன் மார்பிள் போடப்பட்டுள்ளது.இது 16 மாடங்களையும் 151 தூண்களையும் கொண்டதாக இருக்கிறது. 5 கோபுரங்களும் 4 பால்கனியும் கொண்டதாக இருக்கிறது.12,000 டன் எடையுள்ள இக் கோயிலை 4,000 செதுக்கப்பட்ட கற்களைக் கொண்டு கட்டியிருக்கிறார்கள். இக் கற்கள் எல்லாம் சென்னையில் செதுக்கப்பட்டு 400 கன்டெய்னர்கள் மூலமாக இங்கு கொண்டு வரப்பட்டது. இரும்பு இல்லாமல் முற்றிலும் கற்களைக் கொண்டு இக் கோயில் கட்டப்பட்டதால் 1000 வருடங்களுக்கு இது நிலைத்து நிற்கும் என்று கூறப்படுகிறது. *இந்தியாவைச் சேர்ந்த அனைவரும் ஒன்று கூடுமிடமாவும் இருப்பதற்காக, ஒரு இந்துக் கோயில் கட்டுவதென்று முடிவின் அடிப்படையில் கட்டப்பட்ட இக்கோயிலின் முக்கிய தெய்வமாக ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். மேலும், சீதா தேவி, லட்சுமணர், ஹனுமன் மற்றும் விநாயகர் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

கோயில் வளர்ந்த விதம்
* கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம் மற்றும் கோயில் பிரகாரத்துடன், 8000 சதுர அடி பரப்பளவிலான இக்கோயிலின் முதல் கட்டப் பணிகளும், அடுத்து, இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகளாக, 17 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அயோத்தியா மண்டபம், ஹனுமன் ஆலயம், 95 அடி உயரத்திலான ராஜகோபுரம் மற்றும் வெங்கடேஷ்வரர், ஸ்ரீ தேவி, பூ தேவி மற்றும் ராதா-கிருஷ்ணர் ஆலயங்களும் கட்டப்பட்டன.* 1986-ம் ஆண்டு மே மாதம் 3-ம் தேதி, இக்கோயிலில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.*1988-ம் ஆண்டு இக்கோயிலின் சீரமைப்பு பணிகளின் போது, மார்பிள் கல்லால் ஆன துர்க்கை அம்மன் சிலை நிறுவப்பட்டது. இது பார்ப்பவர்களின் மனதை கவரும் வண்ணம் அமைந்திருந்தது. தொடர்ந்து கணேசர், சிவன், துர்க்கை ஆலயங்கள் எழுப்பப்பட்டன. * 1994-ம் ஆண்டு, கணேசர், சிவன், சுப்ரமணியர் மற்றும் பார்வதி தேவி ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முகவரி
1851 S IL Route 59 Pramukh Swami Rd Bartlett IL 60103-3008 USA
போன்
Tel: (630) 213 2277 Fax: (630) 213 2088

இணைய தளம்
http://www.baps.org/Global-Network/North-America/Chicago.aspx
மின்னஞ்சல்
E-mail: info.chicago@usa.baps.org
----The BAPS Shri Swaminarayan Mandir encompasses: the Stone Mandir, the Wooden Haveli and the Heritage Exhibition.

திறந்திருக்கும் நேரம்Open to visitors from 9:00am – 7:30pm daily throughout the year:Visiting Hours: 9:00 am to 7:30 pm
TIMINGS
Mandir campus9:00 am - 7:30 pm dailySacred shrines darshan9:00 am - 10:15 am11:15 am - 12:00 pm4:00 pm - 6:00 pm

ஆரத்தி Arti
Shangar: 7:30 amRajbhog: 11:15 amSandhya: 7:00 pmShayan: 8:30 pm
அபிேஷகம்
Nilkanth Varni Abhishek
Mon-Fri9:00 am - 10:15 am11:20 am - 12:00 pm4:00 pm - 6:00 pm7:20 pm - 8:00 pmSat-Sun9:00 am - 10:15 am11:20 am - 3:00 pm4:00 pm - 6:00 pm7:20 pm - 8:00 pmSunday Mahapuja8:00 am - 9:30 am

Mandir Darshan & Nilkanthvarni Darshan Timings9:00 am to 10:15 am: Murti Darshan Open
11:15 am to 12:00 pm: Arti (Prayer) ceremony & Murti Darshan
4:00 pm to 6:00 pm: Murti Darshan
7:00 pm: Sandhya Arti

Sunday Activities:Bal Mandal (Children KG-Gr. 8): 4:30 pm To 6:00 pmKishore Mandal (High School): 4:30 pm To 6:30 pmKishore Mandal (College): 12:00 am To 1:00 pmYuvak Mandal (ages 22-35): 3:00 pm To 4:30 pmVadil Mandal: 4:30 pm To 7:00 pmBalika Mandal (Children KG-Gr. 8): 4:30 pm To 6:00 pmKishori Mandal (High School/College): 2:30 pm To 4:00 pmYuvati Mandal ((ages 22-35): 3:00 pm To 4:30 pmGujarati Language Classes: 2:30 pm To 3:45 pm

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிசெல்ஸ் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

சிசெல்ஸ் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு...

இந்திய 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு ரியாத் நகரில் இரத்ததான முகாம்

இந்திய 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு ரியாத் நகரில் இரத்ததான முகாம்...

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்...

பஹ்ரைனில் பொங்கல் திருவிழா

பஹ்ரைனில் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.