ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், சிகாகோ | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், சிகாகோ

நவம்பர் 14,2017 

Comments

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், சிகாகோSri venkateswara Temple, Chocago
தலவரலாறு: அமெரிக்காவின் மிட்வெஸ்டன் மாநிலத்திலிருந்து, குறிப்பாக சிகாகோ நகரிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிட்ஸ்பர்கிலுள்ள அருள்மிகு வெங்கடேஸ்வர சுவாமியை தரிசிக்கச் செல்லும் சிரமத்தைக் குறைக்கும் வகையில், 1985ம் ஆண்டு, சமுதாய நோக்குள்ள ஒன்பது குடும்பத்தினர், சிகாகோவின் புறநகர்ப் பகுதியான அரோராவில் தங்களுக்குச் சொந்தமான, பண்ணைவீடுடன் கூடிய இருபது ஏக்கர் நிலத்தை வெங்கடேஸ்வர ஆலயம் கட்டுவதற்காக தானமாக கொடுத்தனர்.

கூட்டு முயற்சி
கோயில் ஆகம விதிப்படி மட்டுமில்லாமல், உள்நாட்டு கட்டிட விதிகளுக்கு உட்பட்டதாகவும், நிரந்தர பாதுகாப்பமைப்புடன் அமைய வேண்டும் என்பதற்காக, இந்தியாவின் கோயில் கட்டும் நிபுணரான முத்தையா ஸ்தபதி மற்றும் சிகாகோவின் புகழ்பெற்ற கட்டிட கலைநிபுணர் சுபாஷ் நட்கர்னி இணைந்து இக்கோயிலை வடிவமைத்தனர். பழங்கால சிற்பக்கலை மற்றும் நவீன கட்டிடக்கலை தொழில்நுட்பம் ஆகியவற்றின் கலப்பாக அமைந்துள்ள இக்கோயில், பின்னாளில் அமெரிக்காவில் கட்டப்பட்ட கோவில்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்கிறது. இக்கோயிலின் பிரதட்சண விதிப்படி, மூலஸ்தானம், மூலவரை மட்டுமல்லாது கோயிலின் அனைத்து தெய்வங்களையும் வலம் வரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது, இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.

முக்கிய தெய்வங்கள்:
வெங்கடேஸ்வர சுவாமி (பாலாஜி), கன்னிகாபரமேஸ்வரி, ஐயப்பன், சத்தியநாராயண சுவாமி, லட்சுமி மற்றும் பூதேவி, ஆஞ்சநேயர், சிவன், பார்வதி தேவி, கணபதி, சுப்ரமணிய சுவாமி ஆகியன முக்கிய தெய்வங்களாகும்.
முக்கிய திருவிழாக்கள்: பூலங்கிசேவை, ராமநவமி, பவித்ரோற்சவம், வாசவி ஜெயந்தி, பிரமோற்சவம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, பாலாஜி ஜெயந்தி, நவராத்திரி, கந்தசஷ்டி, தனுர்மாசம், ரதசப்தமி மற்றும் சிவராத்திரி ஆகியன முக்கிய விழாக்களாக கொண்டாடப்படுகின்றன. இதைத்தவிர தினந்தோறும் காலையில் சத்திய நாராயணா பூஜை நடைபெறுகிறது.
ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று ஸ்ரீ பாலாஜிக்கு அபஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்தின் போது, பஜனை கோஷ்டியினர் பஜனை பாடுவர் , சகஸ்ரநாம பாராயணம் செய்வர். சாதுமுறையுடன் அபிஷேக நிகழ்ச்சி முடியும். இங்கு நடக்கும் பெரும்பாலான விழாக்கள் திருப்பதியில் நடப்பது போன்றே நடக்கும். கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் இங்கு பிரமாண்டமான முறையில் அத்யயன உற்சவம் 10 நாட்கள் நடக்கும். நாலாயிர திவ்ய பரபந்தம் பாடப்படும். கடைசிநாள் நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி நடைபெறும்.

பூஜை நேரம்:
காலை 09:00: ஸ்ரீ வெங்கடேஸ்வர சுப்ராபாத சேவைகாலை 09:45: ஸ்ரீ விநாயகர் அபிஷேகம்காலை 10:15: ஸ்ரீ சிவா அபிஷேகம்மாலை 06:00: ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்இரவு 08:30: சயனோற்சவம் ( ஸ்ரீ பாலாஜி )முகவரி: 1145 Sullivan Rd, Aurora, IL 60506
தொடர்புக்கு:
Email: info@svsbalaji.orgPhone: (630) 844-2252Fax: (630) 844-2254
கோயில் நேரம்: காலை 09:00 முதல் இரவு 09:00 ( திங்கள்- ஞாயிறு )

கோயில் நிர்வாக குழு
Chairman: Prabhakar Gupta GarlaVice-Chairman: Harinadha B.KoneruSecretary: Ramaraja B. YalavarthiTreasurer: Suresh MehtaMembers: Athimoolam Naidu, Pethinaidu Veluchamy, Prasad Neerukonda, Sudarsana Rao, Akkineni enkata S. Musunuru, Sudershan Rao Nagulapalli
முகவரி
1145 Sullivan RdAurora, IL 60506(Non profit organization - Tax Id: 36-3294997)https://www.facebook.com/pg/AuroraBalajiTemple/videos/?ref=page_internal
தொடர்புக்கு
Contacts
Email: info@svsbalaji.orgPhone: (630) 844-2252Fax: (630) 844-2254

கோயில் திறந்திருக்கும் நேரம்

Temple Hours: 09:00 AM - 09:00 PM (Monday - Sunday)Daily Schedules include: Sri Venkateswara Suprabhatam at 9:00 AM and Sri Vishanu Sahasranama Parayanam at 6:00 PM
அர்ச்சகர்கள்
1. விஸ்வநாதன் கல்யாணசுந்தரம் (1992 முதல்), வீரவநல்லூர், தமிழ்நாடு; அறிந்த மொழிகள்: சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம்2. சுபத்ராச்சார்யுலு ஸ்ரீநிவாசுலு (1992 முதல்), ஏ.கோபாவரம், ஆந்திரா; அறிந்த மொழிகள்: சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம்3. ஹனுமந்த் பிரசாத் பராங்குசம் (1996 முதல்), தெனாலி, ஆந்திரா; அறிந்த மொழிகள்: சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் 4. பேகூர் நாகேந்திர ராவ் (1997 முதல்), பெங்களுரு, கர்நாடகம்; அறிந்த மொழிகள்: சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம்5. கிேஷார் நாராயணம் (200 முதல்), அம்மனாப்ரோலு, ஆந்திரா; அறிந்த மொழிகள்: சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம்6. ஸ்ரீநிவாச்சார்யுலுநாராயணம் (2001 முதல்), போடிலெ, ஆந்திரா; அறிந்த மொழிகள்: சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம்7. ரமேஷ் பட்டர் (2004 முதல்), மதுரை, தமிழ்நாடு; அறிந்த மொழிகள்: சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம்8. பாஸ்கராச்சார்யுலு அக்னிகோத்திரம் (2004 முதல்), கடிவாடா, ஆந்திரா; அறிந்த மொழிகள்: சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம்9. மல்லிகார்ஜுன சர்மா பார்லா (2007 முதல்), நாந்தியால், ஆந்திரா; அறிந்த மொழிகள்: சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம்10. சுந்தரபிரசாத் நவநீத கிருஷ்ணன் (2008 முதல்), மதுரை, தமிழ்நாடு; அறிந்த மொழிகள்: சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம்11. ஆதித்ய சர்மா கோமளபல்லி (2010 முதல்), அமலாபுரம், ஆந்திரா; அறிந்த மொழிகள்: சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம்

Priests1. Viswanathan Kalyanasundaram (1992 - Current), Veeravanalor, Tamil Nadu; Languages: Sanskrit, Tamil, Telugu, Kannada, Hindi, English2 Subhadracharyulu Srinivasula (1995 - Current), A Gopavaram, Andhra Pradesh; Languages: Sanskrit, Tamil, Telugu, Hindi, English3. Hanumanth Prasad Paramkusam (1996 - Current), Tenali, Andhra Pradesh; Languages: Sanskrit, Tamil, Telugu, Hindi, English4. Begur Nagendra Rao (1997 - Current), Bangalore, Karnataka; Languages: Sanskrit, Kannada, Telugu, Tamil, Hindi, English5. Kishore Narayanam (2000 - Current), Ammanabrolu, Andhra Pradesh; Languages: Sanskrit, Tamil, Telugu, English, Hindi6. Srinivasacharyulu Narayanam (2001 - Current), Podile, Andhra Pradesh: Languages: Sanskrit, Tamil, Telugu, English, Hindi7, Ramesh Bhatter (2004 - Current), Madurai, Tamilnadu; Languages: Sanskrit, Tamil, Telugu, Hindi, English8. Bhaskaracharyulu Agnihotram (2004 - Current), Gudivada, Andhra Pradesh; Languages: Sanskrit, Tamil, Telugu, Hindi, English9. Mallikarjuna Sharma Parla (2007 - Current), Nandyal, Andhra Pradesh; Languages: Sanskrit, Tamil, Telugu, Hindi, English10. Sundaraprasad Navaneetha Krishnan (2008 - Current), Madurai, Tamilnadu; Languages: Sanskrit, Tamil, Telugu, Hindi, English11. Aditya Sarma Komallapalli (2010 - Current), Amalapuram, Andhra Pradesh; Languages: Sanskrit, Tamil, Telugu, Hindi, English
வீடியோ
https://lh3.googleusercontent.com/SSLt0HVPEnBN8BcniU5nHCten84rXrr3QLblW2PGd9aur7QatCfCK8kvroZCWqOjcqbyAoagog=m18?cpn=l_9cGN05zHGSd49z


Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மருந்து ஏற்றுமதியில் கால்பதிக்கும் மலேசிய தமிழரின் "பயோ கேர்" நிறுவனம்

மருந்து ஏற்றுமதியில் கால்பதிக்கும் மலேசிய தமிழரின் "பயோ கேர்" நிறுவனம்...

லெபனான் நாட்டில் இந்திய குடியரசு தினம் உற்சாக கொண்டாட்டம்

லெபனான் நாட்டில் இந்திய குடியரசு தினம் உற்சாக கொண்டாட்டம்...

பாலஸ்தீனத்தில் இந்திய குடியரசு தினம்

பாலஸ்தீனத்தில் இந்திய குடியரசு தினம்...

ஜோர்டானில் இந்திய குடியரசு தினம்

ஜோர்டானில் இந்திய குடியரசு தினம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.