ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், இங்கிலாந்து | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், இங்கிலாந்து

டிசம்பர் 04,2017 

Comments

       

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், டிவிடேல், இங்கிலாந்து


கோயில் திறந்திருக்கும் நேரம்


வார நாட்களில் காலை 08:30 மணி முதல் பகல் 1 மணி வரை; மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை

வார இறுதி நாட்களில் காலை 08:30 மணி முதல் பகல் 02:30 மணி வரை; மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை 


தலவரலாறு: 


இங்கிலாந்து, மேற்கு மிட்லேண்ட்ஸ், டிவிடேல் பகுதியில், 1970 ம் ஆண்டு வாக்கில் வெங்கடேஸ்வர பெருமானுக்கு ஒரு கோயில் கட்டுவதென்று அப்பகுதி இந்துக்கள் திட்டமிட்டனர். இந்து சமுதாயத்தினரிடையே ஏற்பட்டிருந்த ஆன்மிக வெற்றிடத்தை நிரப்ப இந்த கோயில் உதவும் என்று அவர்கள் கருதினர்.  இந்தியாவில் திருப்பதி கோயிலை்ப் போல் இது அமைய வேண்டும் என்று விரும்பினர். இதைத் தொடர்ந்து, 1984 ல் ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.


நீண்ட தேடலுக்குப் பிறகு டிவிடேல் பகுதியில் கோயில் கட்டுவதற்கு தகுதியான இடத்தைக் கண்டு பிடித்தனர். 1995 ல் இந்த நிலம் கையகப்படுத்தப்பட்டது.


கோயில் கட்டும் பணி

கோயில், சமுதாய மையம், சந்நிதிகள் கொண்ட ஒரு வழிபாட்டுத் தலத்தை உருவாக்க திட்டம் தீட்டப்பட்டது. 1996 ல் தொண்டு நிறுவனங்களிடமிருந்தும், பொது மக்களிடமிருந்தும் நிதி வந்ததைத் தொடர்ந்து, 1997 ல் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்து மரபுப்படி, 1999 ல் விநாயகர் விக்ரகம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் உற்சவ மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டது. 2000 மே மாதம் சுப்ரமணிய சுவாமி கோயில் பணி நிறைவு பெற்றது. 2002 ஜூலையில் ஸ்ரீ சுதர்சன சுவாமி உற்சவ மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டது. 2003 ஜனவரியில் சமுதாய அரங்கிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 2003 ஜூலையில் நவகிரகங்கள் பரிதிஷ்டை செய்யப்பட்டன. 2004 ஆகஸ்டில் சமுதாய அரங்கு திறக்கப்பட்டது. 2006 ஆகஸடில் பிரதான கோயிலின் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

2007 மே மாதம் அனந்தபத்மநாபர் பள்ளி கொண்ட அலங்கார குளம் திறந்து வைக்கப்பட்டது. 2011 ல் சிவபெருமான் சந்நிதி நிறைவு பெற்று, இமயமலை அடிவாரத்தில் கங்கை கரையிலிருந்து எடுக்கப்பட்ட கல்லில் செதுக்கப்பட்ட விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

கோயிலின் கட்டட வடிவமைப்பு

இந்த கோயில் தென்னிந்திய திராவிட பாணியில் அதாவது பல்லவர், சோழர், பாண்டியர் காலத்து கட்டட வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. சிற்பங்களுடன் கூடிய கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ள கோயில் வளாகத்தில், சந்நிதிகளும் பிரதான் கோபுரமும் கிழக்கு மேற்காக அமைந்துள்ளன. பிரதான கோபுரம் வழியாக நுழைந்தால் இருபுறமும் சந்நிதிகள் அமைந்திருக்க, பிரதான கோயிலின் படிக்கட்டுகளை அடையலாம். சமுதாய அரங்கம் புத்த கலாச்சாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

பிரதான கோயிலில் உள்ள அரங்கம், 700 பக்தர்கள் கூடுவதற்கு வசதியானது. சமுதாய கூடத்தில் இரண்டு அரங்குகள், ஒரு சமையலறை, கல்வி, கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நிகற்வுகளுக்கான வசதிகள் உள்ளது. 

கோயில் வளாகத்தில் 7 மத நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கும் ஏழு குன்றுகள் அமைக்கப்பட உள்ளனு. முதல் கட்டமாக மரத்தாலான புத்தர் சிலையும் பைபிள் வாசகம் கொண்ட குன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கோயில் மற்றும் சமுதாய கூடத்திற்குள், மத, இன வேறுபாடின்றி ்னைத்து தரப்பினரும் அனுமதிக்கப்படுவர்.

கோயிலில் உள்ள சந்நிதிகள்

SHRINES IN THE TEMPLE

கணேசப் பெருமான் (Lord Ganesh); முருகப்பெருமான் (Lord Murugan); வெங்கடேஸ்வர பெருமாள் (பாலாஜி) (Lord Venkateswara (Balaji); பத்மாவதி தாயார் (Goddess Shri Padmavathi); ஹனுமன் (Lord Hanumaan); சிவபெருமான் (Lord Shiva); நவகிரகங்கள் (Navagraha); ஐயப்பன் (Lord Ayyapan); ஷீரிடி பாபா (Shiridi Sai Baba)

முகவரி: 

Shri Venkateswara(Balaji) Temple of UK

Dudley Road East, Tividale, West Midlands,

B69 3DU, England.

மின்னஞ்சல்

Email: temple@venkateswara.org.uk

ஆலய முகவரி :  

தொலைப்பேசி : 0121 544 2256

பேக்ஸ் : 0121 544 2257

இ-மெயில் : temple@venkateswara.org.uk

இணையதளம் : http://www.venkateswara.org.uk/

 temple priests on 0740 4144 925 between 9:30 pm to 10:30pm

பூஜைகள் (POOJAS)

தினசரி பூஜைகள் (Daily Poojas)

பூஜை நேரங்கள் (Pooja Times)

கணேசப் பெருமான் (Lord Ganesh): காலை பூஜை (Morning Pooja) 9:00 am; உச்சிகால பூஜை (Noon Pooja) 11:30 am; சாயரட்சை பூஜை (Evening Pooja) 7:00 pm

சிவபெருமான் (Lord Shiva): காலை பூஜை (Morning Pooja) 9.15am; உச்சிகால பூஜை (Noon Pooja) 11.30am; சாயர்டசை பூஜை (Evening Pooja) 7:15 pm

முருகப் பெருமான் (Lord Murugan): காலை பூஜை ( Morning Pooja) 9:30 am; உச்சி கால பூஜை (Noon Pooja) 11:30 am; சாயரட்சை பூஜை (Evening Pooja) 7:30 pm

ஷீரிடி பாபா (Shirdi Sai Baba): காலை பூஜை (Morning Pooja) 8:30 am; உச்சிகால பூஜை (Noon Pooja) 12:00 noon; சாயரட்சை பூஜை (Evening Pooja) 6:00 pm; ஏகாந்த சேவை (Ekantha Sewa)  8:30 pm 

நவகிரகங்கள் (Navagraha): காலை பூஜை (Morning Pooja) 9.45am; உச்சிகால பூஜை (Noon Pooja) 11.45am; சாயரட்சை பூஜை (Evening Pooja) 7:45 pm

பாலாஜி சுப்ரபாத சேவை (Lord Balaji Suprabhata seva) 8:30 am

காலை பூஜை (Morning Pooja)  10:00 am

உச்சிகால பூஜை (Noon Pooja)  12:00 noon

சாயரட்சை பூஜை (Evening Pooja)  8:00 pm

ஏகாந்த சேவை (Ekantha Sewa)  8:50 pm 

லட்சுமி தேவி- காலை பூஜை (Goddess Lakshmi Morning Pooja)  10:00 am

உச்சி கால பூஜை (Noon Pooja)  12:00 noon

சாயரட்சை பூஜை (Evening Pooja)  8:00 pm

ஹனுமன்காலை பூஜை (Lord Hanuman Morning Pooja)  10:00 am

உச்சிகால பூஜை (Noon Pooja)  12:00 noon

சாயரட்சை பூஜை (Evening Pooja)  8:00 pm

ஐயப்பன் காலை பூஜை (Lord Ayyappan Morning Pooja)  9.45am

உச்சிகால பூஜை (Noon Pooja)  11.45am

சாயரட்சை பூஜை (Evening Pooja)  7:30 pm

ஏகாந்த சேவை (Ekantha Sewa)  8:00 pm

வாராந்தர அபிேஷகம், பூஜை (Regular Weekly Abishekams & Poojas)

கணேச பெருமான்- வெள்ளிக் கிழமை (Lord Ganesh- Friday)  6.00 pm

சிவ பெருமான்- திங்கள் கிழமை (Lord Shiva- Monday)  6.00 pm

முருகப் பெருமான்- செவ்வாய் கிழமை (Lord Murugan- Tuesday)   6:00 pm

ஷீரடி சாய் பாபா- செவ்வாய்க் கிழமை (Shirdi Sai baba- Thursday)   6:00 pm

நவகிரக்ஙகள்- சனிக்கிழமை (Navagraha- Saturday)   6:30 pm

பாலாஜி பெருமான்- சனிக்கிழமை (Lord Balaji- Saturday)  10:00 am

லட்சுமி தேவி- வெள்ளிக் கிழமை (Goddess Lakshmi- Friday)  6.15 pm

ஹனுமன்- வியாழக் கிழமை (Lord Hanuman- Thursday)  6.15 pm


இதர வழக்கமான பூஜைகள். நிகழ்வுகள்

Other Reqular Poojas & Events


பூர்ணிமா- முழு நிலவு நாள் (Purnima ( Full Moon Day ) 6:30pm; சத்யநாராயண பூஜை (Satya Narayana Pooja) 

சங்கடஹர சதுர்த்தி (Sankasta Hara Chathurthi) 5:30pm கணபதிக்கு ஹாமம், அபிேஷகம், பூஜை (Homam, Abhishekam & Pooja to Ganapathy)

சஷ்டி (Sashti) 6:00pm முருகனுக்கு ேஹாமம், அபிேஷகம், பூஜை (Homam, Abhishekam & Pooja to Murugan)

பிரதோஷம்- சுக்ல பக்ஷம்) (Prathosam) ( Sukla Paksha ) 6:00pm சிவலிங்கத்துக்கு சகஸ்ரநாம அர்ச்சனையுடன் அபிேஷகம், பூஜை (Abhishekam & Pooja to Shiva Lingam with Sahasranama Archana)

பிரதோஷம்- கிருஷ்ண பக்ஷம் (Prathosam ( Krishba Paksha ) 6:00pm சிவலிங்கத்துக்கு அபிேஷகம், பூஜை (Abhishekam & Pooja to Shiva Lingam)

ஷ்ரவண நக்ஷத்திரம் (Shravana Nakshathram) 7:30pm பாலாஜிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை (Sahasranama Archana to Balaji)

மாதந்தோறும் 2வது சனிக்கிழமை விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் (2nd Saturday of each Month) 11:00 am Chanting of Vishnu Sahasranamam

உத்தர நக்ஷத்திரம்- ஐயப்பனுக்கு அபிேஷகம் (Uttara Nakshathram ------ Abishekam to Ayyappan)


இக்கோயிலுக்கு செல்ல சிறப்பு சலுகையில் டிக்கெட்டுகளை பெற இங்கே கிளிக் செய்யவும் : http://www.may-tours.co.uk

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துக்கு லண்டன் வழங்கிய உலக மகா விருது

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துக்கு லண்டன் வழங்கிய உலக மகா விருது...

குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் நடத்தும் கவிதைப் போட்டி

குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் நடத்தும் கவிதைப் போட்டி...

லயன்ஸ் சங்க நண்பர்கள் மூலம் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் தொடர் சேவை

லயன்ஸ் சங்க நண்பர்கள் மூலம் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் தொடர் சேவை...

துபாயில் சிறப்பு உளவியல் நிகழ்ச்சி

துபாயில் சிறப்பு உளவியல் நிகழ்ச்சி ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us