ஆக்லாந்தில் சத்யவான் சாவித்ரி கோயில் என்றால் ஆச்சர்யமாக உள்ளதா. ஆமாம் இந்த பெயரில் இங்கே ஒரு கோயில் அழகான அமைதியான இடத்தில உள்ளது. ஆக்லாந்தில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் கரே கரே என்னுமிடத்தில் சுற்றிலும் பசுமை நிறைந்த ஒரு மலை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சத்யவான் மற்றும் தபோவனம் என்று இரண்டு வழிபாட்டு தளங்கள் உள்ளது. இதில் தபோவனம் பகுதி தொடங்க இன்னும் சில காலம் ஆகும். சாவித்ரி கோயில் உள்ளே ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா, ஸ்ரீ புட்டபர்த்தி சாய் பாபா அவர்களின் திருஉருவ படங்களும் மற்றும் அமைதியான முறையில் அனைவரும் த்யானம் செய்யும் வகையில் ஒரு த்யான மண்டபமும் உள்ளது. அனைவரும் வந்து முழு நம்பிக்கையுடன் த்யானம் செய்து ஸ்ரீ பாபா அவர்களின் வழியை பின்பற்றி வழிபட மிகச்சிறந்த தலமாகும். கோயிலுக்கு வெளியே சிவா லிங்கமும், பெரிய புத்தர் சிலையும் உள்ளது. இந்த சூழல் பார்க்க மிக ரம்மியமாக உள்ளது. இந்த கோயில் இந்நாட்டை சேர்ந்த ஒருவரால் கட்டப்பட்டு சிறந்த முறையில் தூய்மையாக பராமரிக்கப்படுகிறது. இங்கு பல மதத்தவர், பல நாட்டவரும் வந்து த்யானம் செய்யலாம். ஒரு குழுவாக வந்திருந்து பஜனை பாடல்கள் பாடியும் துதித்து பூஜை செய்பவர்கள் இருக்கிறார்கள். வெளி நாட்டினர் மற்றும் ஆக்லாந்தில் வசிப்பவர்கள் விடுமுறை நாட்களில் அமைதியை விரும்பி இங்கே தங்குபவர்களுக்கு குடில்கள் உள்ளன. இதற்கு மிக அருகில் நாட்டின் சிறந்த கடற்கரைகளில் ஒன்றான பிஹா கடற்கரை உள்ளது. சுற்றுலா வருபவர்கள் இங்கு வந்து த்யானம் செய்து வழிபட்டு அருகில் உள்ள கடற்கரைக்கும் சென்று விடுமுறை நாளை உல்லாசமாக கழிக்கலாம்.
ஹாஜிகளின் நலனுக்காக சவூதியில் 129வது இரத்ததான முகாம்....
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.