ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா

மே 10,2018  IST

Comments

திருத்தல வரலாறு : 1890ம் ஆண்டுகளில் மலேசிய பக்தர்கள் ஒன்றுகூடி, மலேசிய திருநாட்டில் திருக்கோயில் அமைக்க முயற்சித்து, அதன் அடிப்படையில் ஆலோசனைகளைப் பெற திருமலை பெரிய ஜீயரை அனுகினர். இறைவனின் விக்ரஹம் அல்லாத இறைவனின் பாதுகையை வைத்து பூஜிக்க ஜீயர் ஸ்வாமிகள் அனுகிரகித்தார். அவ்வாறு பாதுகை பூஜையென்பதை வைணவ சித்தாந்தம் மிகப்பெருமையாக போற்றுகிறது. மலேசிய கிள்ளான் பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு திருமேனியுடன் (விக்ரகமாக) பூஜிக்க எண்ணினர்.

திருமலை பெரிய ஜீயரை மீண்டும் அணுகி தங்களின் விருப்பத்தை தெரிவித்தனர். ஜீயர் ஸ்வாமிகளும் பக்தர்களின் பக்தியைக் கண்டு தான் பூஜித்து வந்த வெள்ளி விக்ரஹத்தை சமர்பித்து அனுகிரகித்தார். இதனால் இத்திருத்தலம் திருகோஷ்டியூருக்கு நிகரானதாக போற்றப்படுகிறது. தென்கிழக்காசிய திருப்பதி ( யாத்திரை மற்றும் பிரார்த்தனை ஸ்தலம்) என இக்கோயில் மலேசிய மக்களால் போற்றப்படுகிறது.


தெய்வங்கள் : பெருமாள் சன்னிதி - ஸ்ரீதேவி பூமி தேவி சமேத ஸ்ரீ சுந்தர ராஜ சுவாமி் சன்னிதி, ஸ்ரீ சுந்தர வல்லி தாயார் மஹா லெஷ்மி சன்னிதி, உற்சவர் - ஸ்ரீ தேவி பூமி தேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ பால பக்த ஆஞ்சநேயர்சிவன் சன்னிதி - ஸ்ரீ விநாயக பெருமான், ஸ்ரீ ஆத்மநாத சுவாமி, ஸ்ரீ சிவகாமி சுந்தரி, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீ ஐயப்ப சுவாமி், சனிஸ்வர சன்னிதிசனிஸ்வரன் சன்னிதியில் சனிஸ்வர சுவாமி தனியாகவும் நவகிரக சன்னிதியும், ஸ்ரீ நாகரும் அருள் புரிகின்றனர்.

பூஜை நேரம் :
காலை : மணி 6.40 க்கு விஸ்வரூபம் மணி 7.30 க்கு நித்திய பூஜை ஆரத்திநண்பகல் : 12.00 மணிக்கு நடை சாற்றுதல்மாலை : 6.00 மணிக்கு நித்திய பூஜைஇரவு : 9.15 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடை சாற்றுதல்வியாழன், வெள்ளி கிழமைகளில் : இரவு 9.30 மணிக்கு அர்த்த ஜாமம் பூஜைசனிக்கிழமை : 10.00 மணிக்கு அர்த்த ஜாமம் பூஜைதிருமஞ்சனம் (அபிஷேகம்) : வெள்ளிக் கிழமை காலை 5.50 மணிக்கு சிவன் சன்னிதியிலும், 6.00 மணிக்கு பெருமாள் சன்னிதியிலும் மகாலெஷ்மி தாயாருக்கு அபிஷேகம் நடைபெறும்.சனிக்கிழமை காலை 5.00 மணிக்கு சிவன் சன்னிதியிலும், 5.30 மணிக்கு பெருமாளுக்கும் அபிஷேகம் நடைபெறும்*விசேஷ காலங்களில் மாறுதலுக்கு உட்பட்டது.

ஆலய முகவரி : Sri Sundaraja Perumal TempleNo. 80, Jalan Mastika Off Psn Raja Muda Musa, Selangor, 41100 Klang, Malaysia
தொலைப்பேசி : +60 3-3371 1763
இணையதளம் : http://www.ssptklang.com/index.html

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிங்கப்பூரில் ஸ்ரீ சதசண்டி மஹா யாகம்

சிங்கப்பூரில் ஸ்ரீ சதசண்டி மஹா யாகம்...

அக்., 19ல் தாய் தமிழ்ப் பள்ளிகளின் ஆண்டு கலாச்சார நிகழ்வு

அக்., 19ல் தாய் தமிழ்ப் பள்ளிகளின் ஆண்டு கலாச்சார நிகழ்வு...

நவ., 4- 5ல் ஸ்வாமி வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம்

நவ., 4- 5ல் ஸ்வாமி வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம்...

அக்.,19ல் தீபத் திருவிழா

அக்.,19ல் தீபத் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

இந்து முன்னணி பிரமுகரின் கார் எரிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நிஜாம் காலனியில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் வடிவேல் என்பவரின் வீட்டில் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது ஹுண்டாய் ஐ 20, கார் ...

அக்டோபர் 17,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)