இந்தோனேசியா தமிழ்ச் சங்கம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

மே 19,2018 

Comments

சங்கம் பற்றிய குறிப்பு : இந்தோனேசியா தமிழ்ச்சங்கம் ஒரு லாபநோக்கமற்ற அமைப்பாகவும், இந்தோனேசியாவில் வாழும் தமிழ் பேசும் சமூகத்தினரின் நலனுக்காகவும், தமிழ் சமூக மற்றும் கலாச்சாரத்தை முன்னேற்றுவதையும் நோக்கமாகக் செயல்பட்டு வருகிறது.

இந்தோனேசியாவில் 2011 ம் ஆண்டு சட்டப்பூர்வ அமைப்பாக இந்தோனேசிய தமிழ்ச்சங்கம் துவங்கப்பட்டது. ஏறக்குறைய 400 தமிழ் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இந்தோனேசிய தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.


முக்கிய பணிகள் : இந்தோனேசியாவில் வாழும் தமிழர்களை ஒன்றிணைப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இச்சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்தோனேசியாவில் வாழும் தமிழர்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை மேம்படுத்துவது, தமிழ் மொழியின் பழமை, கலைகள், கலாச்சாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையிலான நிகழ்ச்சிகளை நடத்துவது ஆகியனவும் இந்தோனேசிய தமிழ்ச்சங்கத்தின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.

தமிழ் பள்ளிகள், தமிழ் நூலகங்கள், பயிற்சி குழுக்கள், தமிழ் வகுப்புக்கள் ஆகியனவும் உருவாக்கப்பட்டு வருகிறது. கலை, இசை, நாடகம், விளையாட்டு உள்ளிட்டவைகளும் தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெற்று வருகின்றன. தமிழக இளைஞர்களிடை தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையிலான நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் விழாக்கள் பலவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் தமிழர்களின் உணவு முறை, கலாச்சாரம், கலைகள் உள்ளிட்டவைகளை போற்றும் விதமாக அனைத்தையும் ஒருங்கிணைத்து சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழக உணவு கடைகள், தமிழ் நாட்டுப்புற கலைகளான கரகாட்டம், வில்லுப்பாட்டு, ஒயிலாட்டம், காவடி உள்ளிட்ட கலைகள், உரியடி, பம்பரம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுக்கள் உள்ளிட்ட தமிழ் கலாச்சாரங்களை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையிலான அம்சங்களும் சங்கமம் விழாவில் இடம்பெறுவது தனிச்சிறப்பாகும்.

தமிழ் இசை நிகழ்ச்சிகள், நாடகம், விவாத நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் என இந்தியாவில் இருந்து சிறப்பு விருந்தினர்கள், பிரபலங்கள் அழைத்து வரப்பட்டு பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ் சினிமாக்கள் பலவும் ஜகர்த்தா, மேடன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகள் இந்தோனேசியா தமிழ்ச் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்தோனேசியாவில் உள்ள பிற இந்திய கலாச்சார அமைப்புக்களுடன் இணைந்தும் இந்தோனேசிய தமிழ்ச்சங்கம் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகிறது.

தொடர்புக்கு : ரமேஷ் ராமச்சந்திரன் - +62 811864387

இமெயில் : indonesiatamilosai@gmail.com

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பாலஸ்தீன வர்த்தக சபை அதிகாரிகளுடன் இந்திய பிரதிநிதி சந்திப்பு

பாலஸ்தீன வர்த்தக சபை அதிகாரிகளுடன் இந்திய பிரதிநிதி சந்திப்பு...

உணவு பொருளாதாரம், பாதுகாப்பாக பேக்கிங் குறித்து காணொலி விவாதம்

உணவு பொருளாதாரம், பாதுகாப்பாக பேக்கிங் குறித்து காணொலி விவாதம்...

கொடை நிகழ்ச்சித்திட்டம்

கொடை நிகழ்ச்சித்திட்டம்...

மஸ்கட்டில் காணொலி வழியாக பக்ரீத் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

மஸ்கட்டில் காணொலி வழியாக பக்ரீத் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.