இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

ஜூன் 10,2018  IST

Comments

இங்கிலாந்தில் இலண்டன் அருகில் மோல்டன் என்ற சரோ பகுதியில்,எண்-255,பர்லிங்டன் சாலை என்ற இடத்தில் ‘மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்’ ஒன்று அமைந்துள்ளது. இங்கிலாந்து வாழ் தமிழ் மக்கள் தாம் நினைத்தவுடன் தமிழ்நாட்டில் உள்ள திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று வருவது சற்று இயலாத ஒரு காரியம் தான். இவர்களின் விருப்பத்தினை பூர்த்தி செய்யும் பொருட்டு இங்கு திருத்தணிகை முருகவேல் திருத்தலம் அமைந்தது திருத்தணி முருகப்பெருமானின் திருவருள்தான் என்று நாம் கூறலாம்.

2003 ஆம் ஆண்டு ‘சர்பிடன்’ என்ற பகுதியில்; சிறிய அளவில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்ட முருகன் ;கோவில், நாளடைவில் ஆன்மீகப் பற்று அதிகம் உள்ள பக்தர்களின் பேராதரவுடன், இப்போது உள்ள இவ்விடத்தில் ஒரு பெரிய ஆலயமாகத் திகழ்கின்றது. இந்திய வாழ் மக்களும் இலங்கைத் தமிழ் மக்களும் ஆன்மீக சேவையில் பெரிதும் பஙகு கொள்கின்றனர் என்பதற்கு எடுத்;துக் காட்டாக இத்திருத்தலம் திகழ்கின்றது என்று கூறினால் அது மிகையாகாது. இத்திருத்தலத்தின் கும்பாபிசேகம் 2004 ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றுள்ளது. திருத்தலத்தின் தேரோட்டத் திருவிழா 03.09.2017 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது.போக்குவரத்து அதிகமுள்ள இவ்விடத்தில் திருத்தலம் அமைந்துள்ளது, இலண்டனின் பல்வேறு பகுதியிலிருந்தும் இத்தலம் வருவதற்கு பேரூந்து மற்றும் இரயில் வசதிகள் உள்ளன. திருத்தலத்தின் கீழ்தளத்தில் ஸ்ரீரடி சாய் பாபா அருள்பாலிக்கின்றார். இங்கு தினசர்ணீ பூஜைகளுடன் வியாழக்கிழமை தோறும் ஸ்ரீரடி சாய் பாபாவிற்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன. மேல் தளத்தில் முக்கிய சன்னதியில் திருத்தணிகை முருகன் வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கின்றார். முருகப் பெருமான் சன்னதியின் வலப்புறத்தில் எம்பெருமான் நந்தியம் பெருமானுடன் இருந்து பக்தர்களை அருள்பாலிக்கின்றார். இடப்புறத்தில் நாக பூசணி அம்மையாரைத் தரிசிக்கலாம். முருகப் பெருமானைத் தரிசித்து வி;ட்டு வலம் வரும் போது நாம் பெரிய அளவிளான வினாயகர்,தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணர்,சண்டிகேஸ்வரர், சண்முகர், ஆஞ்சநேயர்,நாக தம்பிரான்,பைரவர் மற்றும் ஒரு சிறிய வினாயகர், ஆகியவர்களை வழிபட்டுச் செல்வதற்கு மூர்த்திகள் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளன.


பக்தர்களின் வசதியினைக் கருத்தில் கொண்டு, திருமணம், புண்ணியஜலம்;, மற்றும் ஹோமங்கள், நடத்தப்படுகின்றன. இங்குள்ள குருக்கள் பக்தர்களின் அழைப்பின் பேரில் வீட்டில் நடத்தப்படும் விசேச ஹோமங்கள்,மற்றும் உள்ள விழாக்கள் போன்றவற்றில் தமது திருப்பணிகளை செய்து பக்தர்களை திருப்திபடுத்துகின்றனர். திருத்தலத்தில் சுவாமிகளுக்கு செய்யப்படும் அர்சனைகளுக்கு கட்டணம் உண்டு. இத்திருத்தலம் ஞாயிறு மற்றும் திங்கள் முதல் வியாழன் வரை காலை 09.00 மணி முதல் 14.00 மணி வரையும், மாலை 18.00 மணி முதல் 21.00 மணி வரையும் திறந்திருக்கும். வெள்ளிக்கிழமை காலை காலை 09.00 மணி முதல் 14.00 மணி வரை. மாலை 18.00 மணி முதல் 21.30 மணி வரை. மேலும் திருத்தலம் பற்றிய செய்திகள் அறிந்து கொள்ள அணுக வேண்டிய கையகப்பேசி எண் 020 8942 4475 மற்றும் 020 3274 2025.


- தினமலர் வாசகர் ச.பொன்ராஜ்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆக்லாந்தில் தைப்பூசம் திருவிழா

ஆக்லாந்தில் தைப்பூசம் திருவிழா...

துங் சுங் ல் பொங்கல் திருவிழா

துங் சுங் ல் பொங்கல் திருவிழா...

மலேசியாவில் தைப்பூச விழா கொண்டாட்டம் துவக்கம்

மலேசியாவில் தைப்பூச விழா கொண்டாட்டம் துவக்கம்...

பஹ்ரைனில் உழவர் திருவிழா

பஹ்ரைனில் உழவர் திருவிழா ...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)