இலண்டன் லூயிஸ்ஹாம் சிவன் கோவில் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

இலண்டன் லூயிஸ்ஹாம் சிவன் கோவில்

ஆகஸ்ட் 26,2018 

Comments

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்

பெண்ணாகிய பெருமாள் மலை திருமாமணி திகழ

மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைமழுவதிரும்

அண்ணாமலை தொழுவார்வினை வழவாவண்ணம் அறுமே

- திருஞானசம்பந்தப் பெருமான்

சிவ வழிபாடு தமிழரின் தொன்மை வழிபாடு ஆகும். தமிழர் வாழும் இடமெல்லாம் சிவ வழிபாடும் அவர்கள் வாழ்வின் ஓர் அங்கமாக அமைவது தமிழரின் வரலாறு ஆகும். அந்த வரலாற்றுத் தன்மைக்கு ஒரு உதாரணமாக இலண்டனில் ஐரோப்பாவிலேயே முதற் சிவன் கோவில் என்ற பெருமையினைக் கொண்டு விளங்குவது ‘லூயிஸ்ஹாம்’ சிவன் கோவில் ஆகும். இன்று பல்வேறு நாட்டினரும் இத்தலத்திற்கு வந்து எம்பெருமானை வழிபடுவதோடு மட்டுமல்லாமல், அனைத்து தரப்பினரும் சைவ சித்தாந்தத்தில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

பொதுவாக பாரதத்தில் குறிப்பாக தமிழ்நாடு ஆந்திரா,கர்நாடாக ஆகிய மாநிலங்களில் வரலட்சமி பூஜை மிக சிறப்பாக கொண்டாடப்படுவதுண்டு. வடமாநிலங்களில் மகாலட்சுமி பூஜை என்ற பெயரில் விழா நடத்தப்படுவதுண்டு. இத்தகைய சிறப்புப் பெற்ற இந்த வரலட்சுமி நோன்பு பூஜை, இலண்டனில் உள்ள லூயிஸ்ஹாம் சிவன் கோவிலிலும் நடைபெறுகிறது.

அருள்மிகு அபீதகுஜாம்பாள் உடனுறை அருணாச்சலேஸ்வரர் திருவுளங்கனிந்த நிலையில்,சிவகாம விதிகளுக்குட்பட்டு,மகிமை மிகுந்த ஒரு சிவாலயத்தை இலண்டன் மாநகரில் ‘லூயிஸ்ஹாம்’ என்ற இடத்தில் இலண்டன் வாழ் அறங்காவலாகள்;, சிவனடியார்களின் சார்பில், மிக பிரமாண்டமான திருக்கோவிலை வடிவமைூத்து, வழிபாட்டுக்கு வகை செய்கு உள்னர். .

எம்பெருமான் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருத்தலத்தின் மையத்தில் உள்ள சன்னதியில் அருள்பாலிக்க,அருள்மிகு செல்வ வினாயகர் ஒருபுறமும், அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியப் பெருமான் மறுபுறமும் தனித்தனி சன்னதியில் அமைந்திருக்கும் காட்சி ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும். வரலட்சுமி பூஜை யன்று நேரத்தில் இத்தலத்தின் தேவார ஆசிரியர் ‘பன்னிசை அரசு’ சாமி தண்டபாணி பன்னோடு தேவாரப் பாடல்களை பாடுவார்.

இத்தலத்தில் செல்வ கணபதி சன்னதியை வலம் வரும் போது அருள்மிகு தெய்வங்கள் தட்சிணா கணபதி, விஸ்ணு கணபதி, பிரம்ம கணபதி ஆகியற்றின் மூர்த்திகளை நாம் கண்டு வணங்கிடலாம். மகாலட்சுமி.பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் ஒரு மாடம் போன்ற அமைப்பிலான சன்னதியில் இருந்து பக்தர்களை அருள்பாலிக்கினறனர். இது போன்று நடராஜர் சிவகாமி அம்மையார் தனியொரு மாடம் போன்ற அமைப்பினை உடைய சன்னதியில் வீற்றிருக்கின்றனர். கொடிமரம் மற்றும் பலிபீடத்துடன் கூடிய இத்தலத்தில் ஞான பைரவர்,வசந்த மண்டப மூர்த்திகள் மூலதார வினாயகர்,நந்தி,அறுபத்து மூன்று நாயன்மார்கள், சமயக்குரவர்கள் நால்வர், தட்சிணாமூர்த்தி,,இலிங்கோத்பவர், பிரம்மா, சண்டேஸ்வரர், நவகிரகங்கள் ஆகிய மூர்த்திகளும் ஆகம விதிப்படி பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளன. 31 அடி உயரமும்,5 நிலைகள் கொண்ட ஆலய இராஜகோபுரத்துடன் கூடிய இத்தலத்தின் மூலஸ்தான மண்டப அமைப்புகள், சிற்ப வேலைகள் அனைத்தையும் சென்னையில் உள்ள நீலாங்கரையில் சிற்ப கலாநிலையம் என்ற கலைக்கூடத்தில் உள்ள ஆலய சிற்பக் குடும்பத்தினர் செய்துள்ளனர். இத்திருத்தலத்தில் தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

ஏதிர்கால சந்ததியினரின் நலனை முன்னிட்டு இங்கு இலவசமாக தமிழ் பாடசாலையை ஆரம்பித்து,தமிழ் சமயம்,சங்கீதம்,நடனம்,மிருதங்கம்,வயலின் விசைப்பலகை ஆகிய வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்குள்ள மண்டபத்தில் திருமணங்கள்,கலைநிகழ்ச்சிகள்,முதியோர்கள் சந்திப்பு, கலைநிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு உரிய வழி வகைகள் செய்து, தமிழ் பாரம்பரியத்தை கட்டி காத்து வருகின்றனர். இவ்வாலயத்தின் சிவாசாரியர்கள் கணபதி ஹோமம்,இலட்சுமி பூஜை,கிரகப்பிரவேசம், திருமணங்கள், வாஸ்துசாந்தி,புண்ணியானம் போன்ற சுபகாரியங்களை தேவைப்படுவோரின் இல்லங்களுக்குச் சென்று,மிகச் சிறந்த சேவைகளையும் செய்து வருகின்றனர்.

திருமுறைகளை பண்ணுடன் ஓதுவதற்காக, ஓதுவார் மூர்த்தியை ஏற்படுத்தி, ஆலயத்திலும்,வெளியிடங்களிலும் சைவ சிந்தாந்த வகுப்புகளை நடத்தி, திருமுறைகளை இளைய சமுதாயத்தினருக்கு கற்பித்து, சைவசிந்தாத்தின் வளர்சிக்கு பெரிதும் பாடுபடுகின்றனர். மேலும் இறந்தவர்களின் ஈமைக் கிரியைகளை சைவ முறைப்படி செய்வதற்காக சிவாச்சாரியார் இங்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இத்தகைய பெருமைமிக்க சேவைகளை அளித்து வரும் இத்தலம் ஆரம்பத்தில் சிறிய நிலையில் இருந்து,பின் இப்போது இருக்கும் நிலையில் புதியதாக நிர்மாணம் செய்யப்பட்டு மகா கும்பாபிசேகம் நடத்தப்பட்டு உள்ளது. இத்திருத்தலம் திறந்திருக்கும் நேரம் காலை 08.00 மணி முதல் 15.00 மணி வரை. மாலை 17.00 முதல் 21.00 மணி வரை.சனி ஞாயிறு தினங்களில் காலை 08.00 மணி முதல் இரவு 21.00 மணி வரை நடை திறந்திருக்கும். இத்திருத்தலம் இலண்டன் சிவன் கோவில் ட்ரஸ்ட் மூலம் பாராமரிக்கப்பட்டு வருகின்றது.

இத்திருத்தலம் இலண்டன் விக்டோரியாவிலிருந்து சுமார் 8 மைல் தூரத்தில் உள்ளது. இரயில் நிலையம் திருத்தலத்திலிந்து சுமார் 5 நிமிடத்தில் நடந்து செல்லும் தூரத்தில் அமைந்துள்ளது. ஜனசந்தடி அதிகம் உள்ள பஜார் வீதியில், பேரூந்து மற்றும் அனைத்து வகை ஊர்திகளின் போக்குவரத்து அதிகம் உள்ள இடத்தில் திருக்கோவில் அமைந்திருந்தாலும், கோவிலுக்கு சற்றுத் தூரத்தில் சிற்றுந்துகள் நிறுத்துவதற்கு இடவசதிகள் உள்ளன. இத்திருத்தலம் பற்றி மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள அணுக வண்டிய கையகப்பேசி எண் 020 8318 9844.

- தினமலர் வாசகர் ச.பொன்ராஜ்


Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பஹ்ரைனில் இலவச மருத்துவ முகாம்; தேசிய மருத்துவர்கள் தின கொண்டாட்டம்

பஹ்ரைனில் இலவச மருத்துவ முகாம்; தேசிய மருத்துவர்கள் தின கொண்டாட்டம்...

இஸ்ரேலில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி

இஸ்ரேலில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி...

துபாய் நூலகத்துக்கு வழங்கப்பட்ட முதல் தமிழ் நூல்

துபாய் நூலகத்துக்கு வழங்கப்பட்ட முதல் தமிழ் நூல்...

அமெரிக்காவில் தமிழர் கலை விழா

அமெரிக்காவில் தமிழர் கலை விழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us