ஆலய விபரம் : வட அமெரிக்காவில் ஸ்ரீ நவகிரக தேனஸ்தானம் லாப நோக்கமற்ற அமைப்பாக செயல்பட்டு வருகிறது. நியூயார்க்கில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, வட அமெரிக்காவில் ஆலய வேத கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய ஆன்மிக தத்துவத்தை வளர்ப்பதற்காக அமைக்கப்பட்டதாகும்.
இந்த அமைப்பின் சார்பில் வடஅமெரிக்காவில் உள்ள 9 முக்கிய நகரங்களில் கோயில்களை அமைத்து வருகிறது. முதலாவதாக நியூயார்க்கில் ஸ்ரீ சனீஸ்வரர் ஆலயம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்து மதத்தை போதிப்பதால் ஏற்படும் ஆற்றல்கள், பண்டைய மக்களின் வாழ்க்கை முறையை கற்றுத்தருவதற்காக அமைக்கப்பட்டு வருகிறது. எதிர்கால சந்ததியினரிடம் ஆன்மிக சிந்தனைகளை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த ஆலயம் அமைய உள்ளது.
9 நவகிரக தேவஸ்தான கோயிலில்களில் முதலாவதாக சனீஸ்வரர் ஆலயம் அமைக்கப்படுகிறது. நியூயார்க்கில் அமைக்கப்பட்டு வரும் இக்கோயில் தான் உலகிலேயே முதல் முறையாக இந்தியாவுக்கு வெளியே அமைக்கப்படும் சனீஸ்வரர் ஆலயமாகும்.
ஆலய முகவரி : SHRI SANEESWARA TEMPLE,SHRI NAVAGRAHA DEVASTHANAM OF NORTH AMERICA INC,1616 HILLSIDE AVENUE TEMPLE SUITS, NEW HYDE PARK,NEWYORK - 11040
Phone: 718 740 9400 / 516 358 9400Email: Temple.Navagraha@Gmail.ComWebsite : http://www.navagrahausa.com/
தமிழ் இருக்கைக்கு நிதி : தமிழக அரசுக்கு கனடியத் தமிழ் பேரவை நன்றி...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.