மகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா ! | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா !

நவம்பர் 07,2018  IST

Comments

சுவிற்சர்லாந்தில் தமிழ் மக்களின் மூன்று தசாப்த காலப் புலம் பெயர்வாழ்வில், மகத்தான திருநாளாக அமைந்தது, பேர்ன் மாநகரில், சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா நிகழ்வுகள் நடைபெற்ற ஞாயிறு. சுவிற்சர்லாந்திலுள்ள 23 இந்து சைவத் திருக் கோவில்கள் இணைந்துள்ள, இந்து சைவத் திருக்கோவில்களின் ஒன்றியம் நடாத்திய  இப் பெருவிழாவில், மூவேந்தர் கொடி அம்பும் வில்லும், புலியும், மீனும் அசைந்தாட, சிறப்பழைப்பாளர்கள், பல் சமயத் தலைவர்கள், அந்தணப் பெருமக்கள், செந்தமிழ் அருட்சுனைஞர்கள், ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் சூழ்ந்து வர, மங்கல வாத்திய சகிதம் , சமயகுரவர் நால்வரது திருவுருங்கள், மண்டபத்திற்கு எழுந்தருளிதோடு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தொடர்ந்து, தேவாரத் திருமுறையும், திருக்குறளும், சிறார்கள் ஓதிநிற்க, பல்சமயங்களின் தலைவர்களும், சிறப்பழைப்பாளர்களும், மங்கல விளக்கேற்றி, நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்கள்.

சில றப்பழைப்பாளர்களும், மதத்ததலைவர்களும், பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கலவாத்திய இசையும், வரவேற்பு நடனமும் இடம்பெற்றன. ஒன்றியச் செயலர் சின்னராசா இராதாகிருஷ்ணனின் வரவேற்புரை, உறுப்பினர் செல்லையா தர்ணனின் ஜேர்மன் மொழியிலான வரவேற்புரையைத் தொடர்ந்து, சிறப்பழைப்பாளர்களினதும், மதகுருமார்களினதும், வாழ்த்துரைகள் இடம்பெற்றன. சுவிற்சர்லாந்தின் தமிழ் கல்விச் சேவைப் பொறுப்பாளர் பார்த்திபன் நிகழ்வில் கலந்து வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார். ஒன்றியத்தின் தலைவர் தர்மலிங்கம் சசிகுமார் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து , ஒன்றியத்தின் தோற்றம், மற்றும் நோக்கம் குறித்து தெளிவுரையாற்றினார்.

மதிய போசன இடைவேளையைத் தொடர்ந்து இனிமையான வீணை, மற்றும் இன்னிசையுடன் பிற்பகல் நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிழ்வுகளின் சிறப்பாக, ஒன்றிய உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்ட கருத்தாய்வு நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில், அடுத்து வரும் பத்தாண்டு காலத்தில் இந்து ஆலயங்களின் செயல்நிலை எவ்வாறிருக்கும் எனும் நோக்கில் நடைபெற்ற இக்கருத்தாய்வு நிகழ்வினை, சிவகீர்த்தி நெறியாள்கை செய்தார். பார்வையாளர் பலரையும் கவனமீர்த்த நிகழ்வாக இது அமைந்திருந்தது.

ஒன்றியத்தின் உபதலைவர் நா. கஜேந்திரக்குருக்கள் சிறப்புரை ஆற்றுகையில், சுவிற்சர்லாந்தில் இயங்கும் இந்து சைவத் திருக்கோவில்கள் ஒன்றிணைய வேண்டியதன் அவசித்தினையும், தேவையினையும், வலியுறுத்தி, அதற்கான துவக்கமாகவும், தொடராகவும் இந் நிகழ்வு அமைந்திருப்பதாகவும், நமது தனித்துவங்களைப் பேணவும், இளைய தலைமுறையினரை, ஆன்மீக வழியில் ஈடுபாடு கொள்ளச் செய்யவும், எண்ணற்ற பணிகளும், தேவைகளும், இருப்பதாகவும், அவற்றை அனைவரும் ஒன்றாக இருந்து பேசவும், சிந்திக்கவும், செயலாக்கவும், தேவையானவற்றைப் பகிர்ந்து கொள்வதற்குமான ஒரு பொதுத் தளமாக சுவிஸ் இந்து சைவத் திருக்கோவில்களின் ஒன்றியம் அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வுகளை மேலும் சிறப்புச் சேர்க்க சுவிற்சர்லாந்தின் பல்வேறு நடன ஆசிரிகைகளின் மாணவிகள், நடன ஆற்றுகைகளை வழங்கியிருந்தார்கள்.

ஒன்றியத்தின் உறுப்பினர்கள், விக்கி, சபாரஞ்சன் ஆகியோர் நேர்த்தியான தொகுப்பினால், நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்த்தார்கள்.

சிவன் தொலைக்காட்சி, முருகன் தொலைக்காட்சி ஆகியன விழாநிகழ்வுகளை நேரலை செய்தன.

பெருமளவிலான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்த, சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா, இணைவினாலான மகிழ்ச்சியையும், செயலாற்றலுக்கான நம்பிக்கையினையும், அனைவருக்கும் தந்த பெருமையுடன் மன்ற உறுப்பினர் சண்முகலிங்கம் நன்றியுரையுடன்  நிறைவு கண்டது.

ஒவ்வொரு கோவிலுக்கும் அதன் மன்றங்களுக்கும் ஒரு தனியான வரலாறு, பின்னணி, தனித்துவம், கொள்கை உண்டு. ஈழத்தமிழர்களால் அறங்காவல் செய்யப்படும் கோவில்கள் எனும் போது அதன்பால் ஒரு ஒற்றுமையும் ஏற்படுகிறது. இவ்வொற்றுமை வேற்றுமைகளைக் கடந்து ஒரு பொது இணக்கம் காண வழியாகவும் உள்ளது. ஒவ்வொரு கோவிலும் கடந்துவந்த பாதை தனித்தனியானதாக இருப்பினும் எதிர்காலத்தில் எமது தமிழ்ச் சமூகத்திற்கு அளிக்கப்போகும் அறிவுச்சொத்து பொதுவானது ஆகும்.

எதிர்வரும் காலங்களில் வலுவான சமூகப்பங்களிப்பினை சுவிற்சர்லாந்தில் ஆற்றுவதற்கும், சுவிற்சர்லாந்து ஊராட்சி, மாநில நடுவன் அரசுகளின் நடுவில் இந்து- சைவத்தமிழ் மக்களின் தேவைகளை எடுத்து விளக்கி உரிய உரிமையினை பெற்றுக்கொடுக்கவும் உழைக்கும் எனும் நம்பிக்கையினை இந்நிகழ்வு ஏற்படுத்தியிருக்கிறது.

- தினமலர் வாசகர் தில்லையம்பலம் சிவகீர்த்தி

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 2ம் தேதி சான் ஆண்டோனியோவில் குதூகலமான பொங்கல் திருவிழா

பிப்ரவரி 2ம் தேதி சான் ஆண்டோனியோவில் குதூகலமான பொங்கல் திருவிழா...

ஜனவரி 18, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்

ஜனவரி 18, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்...

ஜனவரி 20ல் புக்கிட் பாஞ்சாங் பொங்கல் விழா மற்றும் ரத்ததான முகாம் 2019

ஜனவரி 20ல் புக்கிட் பாஞ்சாங் பொங்கல் விழா மற்றும் ரத்ததான முகாம் ...

ஜனவரி 12ல் ஐயப்ப பூஜை

ஜனவரி 12ல் ஐயப்ப பூஜை...

Advertisement
Advertisement

கார்த்தி வழக்கில் கோர்ட் உத்தரவு

புதுடில்லி : கார்த்தி சிதம்பரம் பிப்ரவரி 21 முதல் 28 ம் தேதி வரை வெளிநாடு செல்ல அனுமதிகோரிய வழக்கில் ஜனவரி 28 ம் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் ...

ஜனவரி 21,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us