'ஆம்பலாப்பட்டும் சான் ஆண்டோனியோவும்” | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

'ஆம்பலாப்பட்டும் சான் ஆண்டோனியோவும்”

டிசம்பர் 11,2018  IST

Comments

தஞ்சாவூர் மாவட்டம்,ஒரத்தநாடு தாலுகாவில் இருக்கும் 'ஆம்பலாப்பட்டு' என்ற கிராமத்திற்கும், அமெரிக்காவில் உள்ள சான் ஆண்டோனியோவிற்கும் என்ன சம்பந்தம்?

'தான் ஆடாவிட்டாலும்,தன் தசை ஆடும்' என்பார்களே, அதுதாங்க.

'காஜா' புயல் கோரைத்தாண்டவமாடிச் சென்ற தமிழ்நாட்டின் பல கிராமங்களில் 'ஆம்பலாப்பட்டு' கிராமமும் ஒன்று. உலகத் தமிழர்கள் எல்லாம் தங்களால் முடிந்தளவு கைகொடுத்ததைப் போலவே, அக்கிராமத்தை பூர்விகமாகக் கொண்ட ஒரு இளைஞர், இக்கிராமத்தின் பேரிழப்பைப் பற்றிக் கூற, சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் பேருதவியால், கடந்த வாரம் இரண்டாயிரம் டாலர்களுக்கும் மேலாக நிதி அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் நிதி திரட்டும் பணி நடந்துகொண்டுள்ளது. தொடர்ந்து அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.

'ஆம்பல்' என்ன ஒரு அழகானப் பெயர் ! அல்லிமலர் வகைதான் 'ஆம்பல்'. பெயரைப் போலவே 'ஆம்பலாப்பட்டு' கிராமமும் அழகான ஊர். விவசாயமும், மா, தென்னை அளிக்கும் கொடையும் தான் மக்களின் வாழ்வாதாரம். இங்குள்ள ஆண்-பெண் இருபாலாரும் தைரியத்திற்குப் பெயர் போனவர்கள். இவர்களின் அடுத்த தலைமுறையினர் கல்வியில் முன்னேறி வெளிநாடுகளில் பணிபுரிகிறார்கள்.

அமைதியான இச்சூழ்நிலையில் 'காஜா'புயல் ஊரையே சின்னாபின்னமாகியது. எண்ணற்ற மரங்கள் வேரோடு சாய்ந்தன. தினசரி வாழ்க்கைக்கு ஆதாரமான கால்நடைகள் உயிரிழந்தன. ஓலைக்குடிசைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. ஏழை-பணக்காரர் என்ற வித்தியாசமின்றி அனைத்தையும் இழந்து தெருவுக்கு வந்துவிட்ட நிலைமை!

அதிர்ச்சியும்,அழுகையும் ஒருபுறமிருக்க, 18 மிக நீண்ட தெருக்களை உடைய இக்கிராமத்தில், தெருவுக்கு ஒரு இளைஞர் என வாட்ஸ் அப் குரூப் உருவாக்கி,100 இளைஞர்களுக்கும் மேலாக ஒன்றிணைந்து, ஊர் பெரியவர்களின் ஆலோசனைகளுடன், தங்கள் கிராமத்தை மீட்டெடுக்கும் பணியில் இறங்கினர்.

இக்கிராமத்தைச் சேர்ந்தவர் தான், தேசியவிருதும், பல விருதுகளும் பெற்ற சிறந்த படமான, 'வாகை சூட வா' திரைப்படத்தின் டைரக்டர் சற்குணம். இருக்கும் வேலைகளை அப்படியே விட்டுவிட்டு, தன் கிராமம் நோக்கி ஓடிவந்தவர், துடிப்புடன் செயலாற்றும் இளைஞர்களுடன், தீவிரமாகத் தன்னை இணைத்துக்கொண்டார். பிறருடைய உதவிகளை எதிர்பார்க்காது, அத்தியாவசிய பணிகளை முதலில் துவங்கினர். உடைந்த வீடுகளை சரிப்பார்த்தல், தண்ணீர் தொட்டிகள் சரிசெய்தல், மின்சாரத்தை உயிரூட்ட வேண்டிய நடவடிக்கைகள் என சுறுசுறுப்பாக செயல்படத்துவங்கினர்.

இத்துடன், வெளிநாட்டு நண்பர்களின் உதவிக்கரங்களும் கிடைக்கவே, அதனை முறையாய் வகைப்படுத்தி, வரவு-செலவுக் கணக்கை, தினமும் இரவு ஏழு மணியளவில், ஊர் பொதுவில் கணக்கிட்டுக் காட்டும், மிக நேர்மையான பணியை சற்குணம் அவர்கள், அந்த இளைஞர்களுடன் செய்து வருவது மிகவும் பாராட்டுகுரியதே ! அவ்வகையே இன்றும் களப்பணி நடந்து கொண்டிருக்கிறது.

சற்குணம் தொலைபேசியில் பேசியபோது, தாங்கள் இதுநாள் வரை செயல் படும் விதங்களைக் கூறிவிட்டு, மேலும் அவர் கூறிய கருத்துக்கள்,' இத்தகைய மேன்மையும், பெருந்தன்மையும்,இரக்கசுபாவமும்,ஒற்றுமையும் உள்ள இளைஞர்கள் இருக்கும்வரை, எத்தகைய இயற்கை சீற்றம் வந்தாலும் எதிர்கொள்ளும் தைரியம் கிடைத்திருக்கிறது. அக்கைறையுடனும்,அன்புடனும் நிதிஉதவி அளித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்'.

சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்க நிதியுதவியும் சற்குணத்திடமே அனுப்பிவைக்கப்பட்டு, முறையாகச் செயல் பட்டு வருகிறது.

மிக விரைவில் 'ஆம்பலாப்பட்டு'கிராமமும் சரி, பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களும் நல்ல நிலைக்குத் திரும்ப நாம் கைகொடுப்போம்.

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்


Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 2ம் தேதி சான் ஆண்டோனியோவில் குதூகலமான பொங்கல் திருவிழா

பிப்ரவரி 2ம் தேதி சான் ஆண்டோனியோவில் குதூகலமான பொங்கல் திருவிழா...

ஜனவரி 18, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்

ஜனவரி 18, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்...

ஜனவரி 20ல் புக்கிட் பாஞ்சாங் பொங்கல் விழா மற்றும் ரத்ததான முகாம் 2019

ஜனவரி 20ல் புக்கிட் பாஞ்சாங் பொங்கல் விழா மற்றும் ரத்ததான முகாம் ...

ஜனவரி 12ல் ஐயப்ப பூஜை

ஜனவரி 12ல் ஐயப்ப பூஜை...

Advertisement
Advertisement

போலிசான்றிதழ் பேராசிரியர்கள் கைது

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைகல்லுாரியில் போலியாக கல்வி சான்றிதழ்கள் கொடுத்த உதவி பேராசிரியர்கள் நாகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டனர். ...

ஜனவரி 20,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)