ஜனவரி 20, 21ல் மலேசியாவில் தைப்பூச விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஜனவரி 20, 21ல் மலேசியாவில் தைப்பூச விழா

டிசம்பர் 27,2018  IST

Comments

  பினாங் : மலேசியாவில் பினாங் தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச திருவிழா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.
தைப்பூசம்: தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது.
ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவில் வரலாறு: மலேசிய பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி முருகர் கோவில் உலகளவில் பழமையான மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலம்.

மக்கள் நேர்த்திக்கடன்: ஏராளமான மக்கள் முருகருக்கு காவடிகள் பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்த ஆயத்தமாகிவருகின்றனர்.
மலேசியா பினாங்கில் தைப்பூசம்: மலேசியாவில் இந்தியர்களிடையே தைப்பூச திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. விஷேமான கொண்டாடப்படும் இந்நாளை அரசுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவாரத்திற்கு முன்பே கொண்டாட்டங்கள் தயாராகும் மக்கள். இங்கு இவ்வாண்டு 233-ஆவது தைப்பூச திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
தைப்பூச திருவிழா நிகழ்ச்சிகள்: 2019-ம் ஆண்டிற்கான தைப்பூசம் 21ம் தேதி திங்கட் கிழமை வரவுள்ளது. விழா ஜனவரி மாதம் 20-ம் தேதி ஞாயற்று கிழமை காலை 6 மணியளவில் துவங்க உள்ளது. விழாவிற்கான அழைப்பிதழ் மற்றும் பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- நமது செய்தியாளர் வெங்கடேசன்


Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மலேசியாவில் தைப்பூச விழா கொண்டாட்டம் துவக்கம்

மலேசியாவில் தைப்பூச விழா கொண்டாட்டம் துவக்கம்...

பஹ்ரைனில் உழவர் திருவிழா

பஹ்ரைனில் உழவர் திருவிழா ...

கோலாகலமாக கொண்டாடப்பட்ட தைவான் தமிழ்ச் சங்க 7ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா

கோலாகலமாக கொண்டாடப்பட்ட தைவான் தமிழ்ச் சங்க 7ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா...

அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) மக்கள் சேவை உறுதிமொழி

அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) மக்கள் சேவ...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us