சிங்கப்பூரில் ஸ்ரீ ஹனுமந்த் ஜெயந்தி மஹோற்சவம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் ஸ்ரீ ஹனுமந்த் ஜெயந்தி மஹோற்சவம்

ஜனவரி 08,2019  IST

Comments

 

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ விஸ்வரூப மகா ஆஞ்சநேய சுவாமி ஜெயந்தி மஹோற்சவம் ஆங்கிலப் புத்தாண்டு – மகோன்னதத் திருவிழாவாக கோலாகலமாக நடைபெற்றது. டிசம்பர் இருபத்தேழாம் தேதி தொடங்கிய பத்து நாள் ஜெயந்தி மஹோற்சவம் ஜனவரி ஐந்தாம் தேதி ஆயிரக் கணக்கோனோர் கூடித் தொழ நிறைவு பெற்றது.

மாதங்களில் புனிதமான மார்கழியில் வைகறையில் ஐந்து மணிக்கு விஸ்வரூபத் திருக்காட்சியும் திருப்பள்ளி எழுச்சியும் திருப்பாவைப் பாடலும் தெய்விகமாய் அமைந்தது. முதல் நிகழ்ச்சியாக எஜமான சங்கல்பம் தொடர்ந்து விஸ்வக்சேனா பூஜை நடைபெற்றது. ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயர் சிறப்பு மூல மந்திர ஹோமம் கண்கொள்ளாக் காட்சியாகும். வேத விற்பன்னர்களின் பக்திபூர்வ இலட்சார்ச்சனை மெய் சிலிர்க்க வைத்தது. ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமிக்கு பக்தர்கள் சமர்ப்பித்த 1008 குடம் பசும்பால் திருமஞ்சனம் மறக்கவொண்ணா நிகழ்ச்சியாகும். தொடர்ந்து வாசனாதித் திரவியத் திருமஞ்சனம் நடைபெற்றது.

சிறப்பு மூல மந்திர ஹோமம் நிறைவு பெற்று பிரதான கடம் புறப்பட்டு ஆலயம் வலம் வந்து கலசாபிஷேகம் – மகா பூர்ணாஹீதி நடைபெற்றபோது பக்தர்களின் “ வாயு புத்திரனே போற்றி...போற்றி – அஞ்சலை மைந்தா போற்றி ...போற்றி – விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமியே போற்றி ...போற்றி “ என்ற முழக்கம் அடங்க வெகு நேரமாயிற்று. மாலையில் விசேஷ ஆராதனம் நடைபெற்றது. ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி சந்தணக் காப்பில் எழுந்தருளி அருள்பாலித்தார். நாள்தோறும் மலர்களாலும் பழங்களாலும் வடை மாலைகளாலும் அலங்காரத்தில் எழுந்தருளிக் காட்சியளித்த வீர பக்த ஹனுமான் இன்று சந்தனக் காப்பில் ஜொலித்தது அற்புதமாகும்.

மாலையில் உற்சவர் சர்வ அலங்கார நாயகராக அமர்ந்த திருக் கோலத்தில் ஆலயம் வலம் வந்து அருள்பாலித்தார். மகேஸ்வர பூஜைக்குப் பின் சுமார் இரண்டாயிரம் பக்தர்கள் கலந்து கொண்ட அறுசுவை அன்னதானம் நடைபெற்றது. தலைமை அர்ச்சகர் வைகானஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் தலைமையில் நடைபெற்ற பத்து நாள் மஹோற்சவம் ஆலய வரலாற்றில் சிறப்பானதொரு அத்தியாயமாகும் ஆலய மேலாண்மைக் குழுவினர் பத்து நாட்களும் பக்தர்களுக்கு வேண்டிய அனைத்துத் தேவைகளையும் எவ்வித சிரமுமின்றி செய்து கொடுத்தது பாராட்டுக்குரியதாகும். சிங்கப்பூரிலேயே மிக உயரமான இருபத்தோரடி ஆஞ்சநேய சுவாமி திருவுருவம் இவ்வாலயத்தில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத் தகுந்ததாகும். பத்து நாள் உற்சவம் முத்தாய்ப்பாய் ஜனவரி ஐந்தாம் தேதி நிறைவு பெற்றது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 2ம் தேதி சான் ஆண்டோனியோவில் குதூகலமான பொங்கல் திருவிழா

பிப்ரவரி 2ம் தேதி சான் ஆண்டோனியோவில் குதூகலமான பொங்கல் திருவிழா...

ஜனவரி 18, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்

ஜனவரி 18, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்...

ஜனவரி 20ல் புக்கிட் பாஞ்சாங் பொங்கல் விழா மற்றும் ரத்ததான முகாம் 2019

ஜனவரி 20ல் புக்கிட் பாஞ்சாங் பொங்கல் விழா மற்றும் ரத்ததான முகாம் ...

ஜனவரி 12ல் ஐயப்ப பூஜை

ஜனவரி 12ல் ஐயப்ப பூஜை...

Advertisement
Advertisement

போலிசான்றிதழ் பேராசிரியர்கள் கைது

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைகல்லுாரியில் போலியாக கல்வி சான்றிதழ்கள் கொடுத்த உதவி பேராசிரியர்கள் நாகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டனர். ...

ஜனவரி 20,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)