வடஅமெரிக்க 'ரஜினி மக்கள் மன்ற' ஓராண்டு நிறைவு விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

வடஅமெரிக்க 'ரஜினி மக்கள் மன்ற' ஓராண்டு நிறைவு விழா

ஜனவரி 10,2019  IST

Comments

   

ரஜினி மக்கள் மன்றம் வடஅமெரிக்கா சார்பில் 'ரஜினி மக்கள் மன்றம்' ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, அமெரிக்காவின் டெக்ஸ்சாஸ் மாநிலத்தில் டல்லாஸ் பகுதியில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் டெக்ஸ்சாஸ் மாநிலத்தில் இருக்கும் தலைவரின் காவலர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துக் கொண்டனர். நிகழ்வில் தலைவரின் பேட்ட படத்தின் கொண்டாட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் அமெரிக்காவில் விநியோகிக்கும் Think Big production unit குழுவும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

ரஜினி மக்கள் மன்றம் வடஅமெரிக்கா செயலாளர் நாராயணன், இணைச்செயலாளர் ரமேஷ்குமார், கோபால் விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்று, புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தனர்.

மேலும் கஜா புயலில் நம் ரஜினி மக்கள் மன்றம் மேற்கொண்ட சிறப்பானதொரு நிவாரண பணிகளில், அமெரிக்காவில் இருக்கும் தலைவரின் காவலர்களும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை வழங்கியமைக்கு அனைவருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. இப்பணியை சிறப்பாக முன்னெடுத்து முடித்த 32 வடஅமெரிக்க மக்கள் மன்ற பகுதி செயலாளர்களையும் பாராட்டினர்.

ரஜினி மக்கள் மன்றம் தலைமை எடுக்கும் அனைத்து மக்கள் பணிக்கும் 'ரஜினி மக்கள் மன்றம் வடஅமெரிக்கா' தங்களது ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் 'பேட்ட' t -shirt வழங்கப்பட்டது. 'பேட்ட' படம் மாபெரும் வெற்றியடைய படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து 'பேட்ட பராக்' கேக் வெட்டப்பட்டது. இன்னிசை நிகழ்ச்சியுடன், சுவையான இரவு உணவு வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.

டல்லாஸில் இந்த குளிர் காலத்திலும் பேட்டயின் அனல் அடிக்க ஆராம்பித்ததில் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியே!!!! 


- நமது செய்தியாளார் லக்குரெட்டி அழகர்சாமிAdvertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்ரவரி 2ம் தேதி சான் ஆண்டோனியோவில் குதூகலமான பொங்கல் திருவிழா

பிப்ரவரி 2ம் தேதி சான் ஆண்டோனியோவில் குதூகலமான பொங்கல் திருவிழா...

ஜனவரி 18, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்

ஜனவரி 18, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்...

ஜனவரி 20ல் புக்கிட் பாஞ்சாங் பொங்கல் விழா மற்றும் ரத்ததான முகாம் 2019

ஜனவரி 20ல் புக்கிட் பாஞ்சாங் பொங்கல் விழா மற்றும் ரத்ததான முகாம் ...

ஜனவரி 12ல் ஐயப்ப பூஜை

ஜனவரி 12ல் ஐயப்ப பூஜை...

Advertisement
Advertisement

போலிசான்றிதழ் பேராசிரியர்கள் கைது

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைகல்லுாரியில் போலியாக கல்வி சான்றிதழ்கள் கொடுத்த உதவி பேராசிரியர்கள் நாகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டனர். ...

ஜனவரி 20,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)