கென்யா- நைரோபியில் ஸ்ரீ கல்யாண வேங்கடஸ்வரர் ஆலயத்தில் திருப்பாவை பாசுரம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கென்யா- நைரோபியில் ஸ்ரீ கல்யாண வேங்கடஸ்வரர் ஆலயத்தில் திருப்பாவை பாசுரம்

ஜனவரி 17,2019  IST

Comments

மாதங்களுள் நான் மார்கழி’’ என்று கண்ணபிரான் கீதையில் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார். இதை தனுர் மாதம் என்றும் கூறுவர். இம்மாதம் சிறந்த புண்ணிய காலமாகும்.மார்கழித்திங்கள் தேவர்களுக்கு வைகறைப் பொழுது. இந்த மாதம் முழுவதும் நாம் செய்யும் தெய்வ வழிபாடுகள்பண்மடங்கு பலனைப் பெற்றுத் தரும். மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பை பெறுவர். திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும்.

மார்கழி மாதங்களில் வீட்டு முன்பு கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவார் என்பது நம்பிக்கை.

கென்யா -நைரோபி ஸ்ரீ கல்யாண வேங்கடஸ்வரர் கோயிலில் மார்கழி மாதம் முழுவதும் தினமும் காலை 6 மணி முதல் 7.30 மணிவரையிலும் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாசுரம், திருப்பல்லாண்டு பாடல்கள், அர்ச்சகர் கிருஷ்ணமாச்சாரி, சேஷு தலைமயில், ஆடிட்டர் இரகுநாதன், மற்றும் ஸ்ரீதர், நரேஷ் கண்ணபிரான், ஜலஜா, பிரகாஷ் , யூவராஜ், மோகன், மதுசூதனன்., ராஜ்குமார், சச்சின் , மற்றும் பலர் ஒன்றாக பாடி, அர்ச்சனை மற்றும் அலங்காரம் செய்து பொங்கல் வினியோகம் செய்யப்பட்டது.

மார்கழி 1-தேதி முதல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஜனவரி 6 ஆம் நாள் மாதாந்திர திருக்கல்யாண உற்ஸவம், சிறப்பாக நடைபெற்றது. மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி அன்று 18/12/18, திருப்பல்லாண்டு , வெங்கடச்வர சகஸ்ரநாமம் படிக்கப்பட்டு பரமபதவாசல் திறக்கப்பட்டது ,பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ரு இறவனை தரிசித்தனர், அன்று மாலை பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மார்கழி மாத நிறைவு நாளளன 14/1/19, கோதை கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது

- தினமலர் வாசகர்ஸ்ரீதர் கணேசன்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்., 21 முதல் பிளானோ-டெக்சாஸில் புதியதோர் ஷீர்டி சாய்பாபா கோவில்

பிப்., 21 முதல் பிளானோ-டெக்சாஸில் புதியதோர் ஷீர்டி சாய்பாபா கோவில்...

மார்ச் 2 முதல் மகா சிவராத்திரி கொண்டாட்டம்

மார்ச் 2 முதல் மகா சிவராத்திரி கொண்டாட்டம்...

மல்லிகை மலர்- 3

மல்லிகை மலர்- 3...

பிப்., 17ல் சிங்கப்பூரில் கவிதைநூல்கள் அறிமுக விழா

பிப்., 17ல் சிங்கப்பூரில் கவிதைநூல்கள் அறிமுக விழா...

Advertisement
Advertisement

சந்தா கோச்சாருக்கு லுக்அவுட் நோட்டீஸ்

புதுடில்லி : வீடியோகான் நிறுவனத்திற்கு விதிகளை மீறி வங்கி கடன் வழங்கியது தொடர்பாக வழக்கில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓ சந்தா கோச்சாருக்கு எதிராக சிபிஐ ...

பிப்ரவரி 22,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us