சிங்கப்பூர் : சிங்கப்பூர் என்.பி.எஸ்.சர்வ தேசப்பள்ளியில் ஜனவரி 19 ஆம் தேதியன்று மாணவ – மாணவியர் பங்கேற்ற வார்த்தை விளையாட்டு , பட்டி மன்றம் , சிறப்புரை எனும் பல்சுவைத் தமிழ் விழா - “ இமயம் “ மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் வாழ்த்துடன் விழா தொடங்கியது. தலைமை ஆசிரியர் மாத்யுசல்லியன் தொடக்கவுரை ஆற்றினார். தேசிய கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆசிய மொழிகள் மற்றும் கலாச்சாரக் குழு இணைப் பேராசிரியர் முனைவர் சீதாலட்சுமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் தமதுரையில் மாணவர்கள் தங்கள் இல்லங்களில் தமிழ் மொழியிலேயே உரையாட உறுதி மொழி ஏற்றுக் கெள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
வார்த்தை விளையாட்டுப் போட்டியில் விக்டோரியா பள்ளி , ஏ.சி.எஸ் ( பார்க்கர் தெரு ) பள்ளி , என்.பி.எஸ் சர்வ தேசப் பள்ளி , குளோபல் இந்தியன் சர்வதேசப் பள்ளி ( கிழக்கு ) யுவ பாரதி சர்வ தேசப் பள்ளி, குளோபல் இந்தியன் சர்வ தேசப் பள்ளி ( புங்கோல் ) செயின்ட் ஜோஸப் பள்ளி , பிராட்ரிக் பள்ளி , செயின்ட் பேட்ஸ் பள்ளி மற்றும் பிங் யீ பள்ளிகள் பங்கேற்றன. இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தனிச் சுற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தனிச் சுற்றும் நடத்தப்பட்டன. பாரதியார் மன்றத்தைச் சேர்ந்த பூவேந்தன் நடராஜன் வழி நடத்தினார். அடுத்த அங்கமாக பட்டி மன்றம் மிகச் சுவையோடு நடைபெற்றது. சிங்கப்பூரின் பிரபல பட்டி மன்ற நாயகர் முனைவர் மன்னை ராஜகோபாலன் இசையோடு பாடியும் கருத்து மிக்க மேற்கோள் காட்டியும் நடுவராக அமர்ந்து சூடும் சுவையுமாக பட்டி மன்றத்தை நடத்தினார். “
மாணவர்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் துணை புரிபவர் பெற்றோரே – ஆசிரியரே “ என்பது பட்டி மன்றத்தின் தலைப்பு. பெற்றோர்களே என்ற அணியில் பிங் யீ பள்ளி மாணவி அலியாஷப்ரீன் , யுவ பாரதி பள்ளி மாணவி சஞ்சனா , குளோபல் இந்திய சர்வ தேசப் பள்ளி ( கிழக்கு ) மாணவர் வெங்கட்சாய் மற்றும் புங்கோல் சர்வ தேசப் பள்ளி பிரித்வியும் பங்கேற்று வாதிட்டனர். ஆசிரியர்களே என்ற அணியில் செயின்ட் பேட்ஸ் பள்ளியின் திவியன், என்.பி.எஸ். பள்ளி மாணவி ஐஸ்வர்யா , பிராட்ரிக் பள்ளி மாணவி ஷபிரா மற்றும் செயின்ட் ஜான்ஸ் பள்ளி மாணவன் அலனும் எதிர் வாதிட்டு அசத்தினர். இரு தரப்பு வாதங்களையும் உன்னிப்பாக ஆய்ந்த நடுவர் ராஜகோபாலன் பெற்றோர் - ஆசிரியர் இருவருமே கண்போன்றவர்கள் எனத் தீர்ப்பளித்தார். வார்த்தை விளையாட்டுப் போட்டி தொடக்க நிலைப் பிரிவில் முதற் பரிசினை ஏ.சி.எஸ்.பள்ளி மாணவர்கள் செல்வநிதிபரிநீலேசும் ஸ்ரீநிவாசன் ஸ்ரீஹரிஹரனும் – இரண்டாவது பரிசை யுவ பாரதி பள்ளி மாணவர்கள் பிரணவ் ராமகிருஷ்ணனும் பிரபாகரன் சுபிக்ஷாவும் மூன்றாவது பரிசை பிராட்ரிக் பள்ளி மாணவர்கள் செல்வகுமார் பிரகதீஸ்வரனும் முகமது பரூக் முகமது பயீசும் பெற்றனர். உயர் நிலைப் பிரிவில் முதல் பரிசை பிங் யீ பள்ளி மாணவிகள் ஷரிபா பதுல் பின்டிஷாகிர் ஹீஷேன் – நபீஷா பானு பிடி ரஹ்மான் ஆகியோர் பெற்றனர் . இரண்டாவது பரிசு பிராட்ரிக் பள்ளி மாணவிகள் பொன் வினிதா ராமச்சந்திரன் மற்றும் இஷ்தியாக் அஹமதுக்கு வழங்கப்பட்டது. மூன்றாவது பரிசினை குளோபல் இந்தியன் சர்வ தேசப் பள்ளி மாணவர்கள் நகரீஷ் குமாரும் சஞ்செய் அசோக் குமாரும் பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு என்.பி.எஸ்.பள்ளி தலைமை ஆசிரியர் கிரிஸ் பட் பரிசுக் கோப்பைகளை வழங்கிச் சிறப்பித்தார். பட்டி மன்றத்தில் சிறப்பாகப் பேசிய பிருத்வி விஜயகுமாருக்கும் ஐஸ்வர்யாவுக்கும் சிறப்பு விருந்தினர் சீதாலட்சுமி பரிசுக் கோப்பைகளை வழங்கி கவுரவித்தார். நிகழ்வினை என்.பி.எஸ்.பள்ளி மாணவன் வியாஸ் நாகேஸ்வரன் மாணவி ஜனனி அருண் ஆகியோர் நெறிப்படுத்தினர்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
பிப்., 17ல் சிங்கப்பூரில் கவிதைநூல்கள் அறிமுக விழா...
பிப்., 24 ல் 'அன்பே,ஆருயிரே' -ஹூஸ்டனில் காதலர் தினக்கொண்டாட்டங்கள்....
சென்னை: காஷ்மீரில் நடந்த கொடூர தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களில், தமிழகத்தை சேர்ந்த சிவசந்திரன், சுப்ரமணியன் ஆகியோரும் வீரமரணம் ...
பிப்ரவரி 16,2019 IST
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.