அயோவா தமிழ்ச்சங்கத்தில் “நம்ம வீட்டு பொங்கல்” விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அயோவா தமிழ்ச்சங்கத்தில் “நம்ம வீட்டு பொங்கல்” விழா

ஜனவரி 24,2019  IST

Comments

அயோவா : அயோவா தமிழ்ச்சங்கம், அமெரிக்காவின் அயோவா மாகாணம் டெ மோய்ன் நகரில் 2011ல் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பராமரிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் ஒரு மன்றத்தை வழங்கவும், இளைய தலைமுறையினருக்கு கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கல்வி கற்பித்தல், ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான ஒரு நோக்கத்துடன் மற்ற சமூகங்களுடன் தொடர்பு கொள்ளுதல். பல்வேறு கலாசார நிகழ்வுகள் மற்றும் சமூக நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் நட்பையும் வளர்ப்பது மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக அயோவா தமிழ் சங்கம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அயோவா தமிழ்ச்சங்கம் ஜனவரி 19ம் தேதி நடத்திய “நம்ம வீட்டு பொங்கல்” விழாவில் 170-க்கும் மேலான அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர். கண்கவர் அலங்காரங்கள் மற்றும் 110-க்கும் மேற்பட்டோர் பங்குகொண்ட அற்புதமான நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன. பொங்கல் விழாவின் முக்கியமான அம்சங்களை இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு கிராமிய மணம் வீசும் பல போட்டிகள் நடத்தப்பட்டன. சிறுவர்களுக்கு 'கன்று குட்டிகளின் மோதல்' என்ற தலைப்பில் தவளை ஓட்டம், கல் சேர்த்தல், சாக்கு ஓட்டம், வண்ணம் தீட்டுதல், பொங்கல் பற்றிய படம் வரையும் போட்டி போன்றவை நடத்தப்பட்டன. பெரியவர்களுக்கு 'திறமைக்கு ஒரு சவால்' என்ற தலைப்பில், நவ தானிய பொங்கல் சமைக்கும் போட்டி, கோல போட்டி மற்றும் வார்த்தை விளையாட்டு போட்டு நடந்தேறியது. தமிழ் பாரம்பரிய வீர விளையாட்டுகளான கபடி மற்றும் உறியடி போட்டிகளில் சிறுவர்களும் பெரியவர்களும் கலந்து கொண்டு களிப்படைந்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியில் அங்கத்தினர் அனைவரும் சேர்த்து சமைத்த கூட்டாஞ்சோறு பரிமாறப்பட்டது. மேலும் சங்கத்துடன் இணைந்து நடைபெறும் தமிழ்ப்பள்ளி, 120 மாணாக்கர்கள் மற்றும் 40 தன்னார்வல ஆசிரியர்களுடனும் சிறப்புற நடைபெற்று வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தி.

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்., 21 முதல் பிளானோ-டெக்சாஸில் புதியதோர் ஷீர்டி சாய்பாபா கோவில்

பிப்., 21 முதல் பிளானோ-டெக்சாஸில் புதியதோர் ஷீர்டி சாய்பாபா கோவில்...

மார்ச் 2 முதல் மகா சிவராத்திரி கொண்டாட்டம்

மார்ச் 2 முதல் மகா சிவராத்திரி கொண்டாட்டம்...

மல்லிகை மலர்- 3

மல்லிகை மலர்- 3...

பிப்., 17ல் சிங்கப்பூரில் கவிதைநூல்கள் அறிமுக விழா

பிப்., 17ல் சிங்கப்பூரில் கவிதைநூல்கள் அறிமுக விழா...

Advertisement
Advertisement

ஒரிரு நாளில் கூட்டணி அறிவிப்பு:ஸ்டாலின்

வேலூர்: இன்னும் ஒரிரு நாளில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். இது குறித்து வேலூர் பொன்னப்பந்தாங்கலில் அவர் கூறியதாவது: ...

பிப்ரவரி 19,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us