ஹாங்காங்கில் இளைஞர்கள் திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஹாங்காங்கில் இளைஞர்கள் திருவிழா

பிப்ரவரி 03,2019  IST

Comments

ஹாங்காங்: ஹாங்காங்கில் குழந்தைகள் கலை குழு, ஹிந்து ஸ்வயம் சேவாக் சங்கம், விஸ்வ ஹிந்து பரிஷத் ஆகியவை இணைந்து வழக்கம்போல் இந்த ஆண்டும் நடத்திய இளைஞர்கள் திருவிழாவில் அனைவரும் உற்சாகமாக பங்கேற்றனர்.

ஸ்வாமி விவேகானந்தர் பிறந்த நாள், இந்திய குடியரசு தினம் மற்றும் சீன புத்தாண்டை ஒட்டிஹ் இது கொண்டாடப்பட்டது. 300க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில், 100க்கும் மேற்பட்டவர்கள் நிகழ்ச்சிகளை அளித்தனர். பரதநாட்டியம், கதக், குச்சிப்புடி, பாலிவுட், யோக, கிராமியம், கலவை என அனைத்து வகை நிகழ்வுகளையும் காண முடிந்தது. நிகழ்வின் துவக்கத்திலும் நிறைவிலும் தேச பக்தி பாடல்கள் பாடப்பட்டன. சீன நடனமும் நடைபெற்றது. விவேகானந்தர் வேடமிட்டு வந்து உரையாற்றியது, ஹாங்காங்கிலும் நிலவும் இந்திய உணர்வை பறை சாற்றுவதாக இருந்தது.



கணித மாணவர்களுக்கு பயன் தரும் வகையில் குழந்தைகள் கலை குழுவைச் சேர்ந்த நீலாப் குமார் எழுதிய நூலை பி.ஜி.ஶ்ரீனிவாஸ் வெளியிட்டார். உறுப்பினர்கள் தொடர்பு கொள்ள வசதியாக ஒரு செயலி ( ஆப்) வெளியிடப்பட்டது.


ஹூங் ஹாம், துங் சுங் நகர்களில் 2 வயது முதல் 70 வயது வரையானவர்களுக்கான 12 போட்டிஹ்களில் 60க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை பி.ஜி.ஶ்ரீனிவாஸ், பூனம் மேத்தா வழங்கினர்.


ஹாங்காங் ஹிந்து ஸ்வயம் சேவாக் சங்கம் வழங்கும் சேவைகள் குறித்து அதன் தலைவர் கோயெல் விளக்கினார். ஹிந்து ஸ்வயம் சேவாக் சங்க உற்ப்பினர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து ஸ்வாமி விவேகனந்தர் தொடர்பாக அற்புதமான வினா- விடை நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.


நமது கலாச்சார்த்தை நமது இந்திய குழந்தைகள் அறிய இந்த நிகழ்வுகள் பெரும் உதவியாக இருந்தது கண்டு, இதில் பங்கேற்றவர்களும், கலந்து கொண்டவர்களும், ஏற்பாட்டாளர்களும் மிகவும் மகிழ்ச்சி கொண்டனர்.


- நமது செய்தியாளர் சித்ரா சிவகுமார்

Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us