ஸ்ரீ கணேஷ் கோயில் ஆக்லாந்தில் உள்ள மிக உன்னதமான ஆகமவிதிகளின் படி கட்டப்பட்ட தென்னிந்திய சம்பிரதாயப்படி காட்டிய திருக்கோயில். இதன் தலைமை அர்ச்சகர் சந்த்ரு குருக்கள். நன்றாக வேதம் படித்தவர். கோயிலை மிக திறம்பட எல்லா விதமான பூஜைகளும் வைபவங்களும் செய்து மக்களுக்கு சிறந்த சேவை செய்து வருகிறார்.
இங்கு முதன்மை கடவுளான விநாயகருக்கு பிரதான சன்னதி அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் மற்ற தெய்வங்களுக்கும் தனி தனியாக சன்னதி அமைக்கப்பட்டுள்ளன முறையே சிவன், அம்பாள், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணிய ஸ்வாமி, பெருமாள் சன்னதி, பைரவர் சன்னதி மற்றும் நவகிரஹங்கள் அமைக்கப்பட்டுள்ளன .
இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் திருவிழா கொண்டாடப்படுகிறது. 9 நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்பட்டு அதில் திருத்தேர் உற்சவமும் சேர்த்து மிகச்சிறப்பான முறையில் நடக்கிறது. அதை தவிர விநாயகர் சதுர்த்தி உற்சவம், தைப்பூச திருவிழா என்று அனைத்து விசேஷங்களும் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது..
அபிஷேக ஆராதனை நடைபெற்று காண வரும் பக்தர்களுக்கு தினமும் மகா பிரசாதமும் வழங்கப்படுகிறது.
இக்கோயிலின் முகவரி
Auckland Sri Ganesh Temple Trust,
No 4 Dent Place,
Papakura,
New Zealand.
Ph:6492988640.
Pooja timings:
காலை 10 am - 1 pm :மாலை 6 -9 pm
- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்
தமிழ் இருக்கைக்கு நிதி : தமிழக அரசுக்கு கனடியத் தமிழ் பேரவை நன்றி...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.