சான் ஆண்டோனியோவில் ஜமாய்த்த பொங்கல் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சான் ஆண்டோனியோவில் ஜமாய்த்த பொங்கல் விழா

பிப்ரவரி 16,2019  IST

Comments

  

இந்தியாவில் தைப் பொங்கல் நான்கு நாட்கள் தான், ஆனால் அமெரிக்காவில் தை மாதம் முழுவதும் பொங்கல்,கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுவதுதான் இங்கு சிறப்பு !

டெக்சாஸ்,சான் ஆண்டோனியோவில் பிப்ரவரி 2 ஆம் தேதி, இங்குள்ள இந்துக்கோவில் வளாகத்தில் உள்ள மஹாலட்சுமி ஹாலில் பொங்கல் விழா மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

மனதை மயக்கிய பியானோ இசையும், கண்ணுக்கினிய பரத நாட்டியங்கள் முதல் வெஸ்டர்ன் நடனங்கள் வரை, கர்நாடகப் பாடல்கள் முதல் ஹிப்-ஹாப் வரை, நகைச்சுவையுடன் யதார்த்தம் கலந்த நாடகம் என சிறுவர்-சிறுமியர்கள் முதல் பெரியவர்கள் வரை அட்டகாசமான நிகழ்ச்சிகள் அளித்து அசத்திவிட்டனர்.


நம் நடனங்களில் அமெரிக்கர்களும் ஆர்வத்தோடு கலந்து கொண்டது சிறப்பான விஷயம். நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அத்தனைபேருக்கும் தமிழ்ச் சங்கத்தின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் சங்க உறுப்பினர்களுக்கு, இவ்வருட நாட்காட்டியும், கரும்பும் வழங்கப்பட்டது. 2019 -2020 ற்கான தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் தேர்வு முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

அங்கே -கிப்ட் கார்டு ஜோன் மற்றும் 'நட்சத்திரா ஸ்நாக்ஸ்' ஸ்டால்கள், மல்லிகைப்பூ ஸ்டால், பெண்களின் மனம்கவர்ந்த ஆர்டிஃபீஷியல் ஜுவல்லரி ஸ்டால் போன்றவை ஹாலின் முகப்பில் அமைக்கப் பட்டிருந்தன.

தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 'மதுரை மெஸ்' உணவகத்தின் இரவு உணவு அனைவருக்கும் ஏற்புடையதாகவே இருந்தது- சக்கரைப் பொங்கல்,வெண்பொங்கல், இட்லி-வடை, சேமியா கிச்சடி, சட்னி-சாம்பார் என சுவையான உணவு அளிக்கப்பட்டது.

தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.ராஜகுரு, செயலாளர் திரு.கார்த்திகேயன் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரது கடின உழைப்பும், ஒற்றுமையுமே இத்தகைய பொது நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைய முக்கிய காரணங்களாகும்.

வந்திருந்த அனைவரும் குடும்பவிழா போல பங்குகொண்டு,மகிழ்வோடு விடைபெற்றனர்.



 -நமது செய்தியாளர்ஷீலா ரமணன்


Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்., 21 முதல் பிளானோ-டெக்சாஸில் புதியதோர் ஷீர்டி சாய்பாபா கோவில்

பிப்., 21 முதல் பிளானோ-டெக்சாஸில் புதியதோர் ஷீர்டி சாய்பாபா கோவில்...

மார்ச் 2 முதல் மகா சிவராத்திரி கொண்டாட்டம்

மார்ச் 2 முதல் மகா சிவராத்திரி கொண்டாட்டம்...

மல்லிகை மலர்- 3

மல்லிகை மலர்- 3...

பிப்., 17ல் சிங்கப்பூரில் கவிதைநூல்கள் அறிமுக விழா

பிப்., 17ல் சிங்கப்பூரில் கவிதைநூல்கள் அறிமுக விழா...

Advertisement
Advertisement

விதிமீறல் பேனர் : ஐகோர்ட் கண்டனம்

சென்னை : கோவையில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக அமைச்சர்களை வரவேற்று, கடந்த ஒரு வாரமாக விதிகளை மீறி பேனர் வைக்கப்பட்டதாக டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் ...

பிப்ரவரி 18,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us