சிங்கப்பூரில் கதைக்களம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் கதைக்களம்

பிப்ரவரி 13,2019  IST

Comments

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் நடத்தும் கதைக்களத்தின் பிப்ரவரி நிகழ்வு மன்ற அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் தலைமை ஏற்று உரையாற்றுகையில் நிகழவிருக்கின்ற கழகத்தின் முத்தமிழ் விழா பற்றி எடுத்துக் கூறினார். முதல் அங்கமாக மாணவர் பிரிவுக்கான “ சான்றிதழ் “ என்ற சிறுகதையை தருண் வாசித்தார். பொதுப்பிரிவுக்கு வந்த கதையை இந்துமதி வாசித்தார். சிறந்த கதை விமர்சனத்தை உமா சங்கர் வாசித்தார். சிங்கை மூத்த எழுத்தாளர் ஏ.பி.ராமன் பற்றி சிங்கை எழுத்தாளர் அறிமுகம் அங்கத்தில் மலையரசி வழிநடத்திட சமூக அறிவியல் பல்கலைக் கழக மாணவர் அஷ்ரப் எடுத்துரைத்தார். கதைக் களத்தை 2013 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆண்டு வரை மிகச் சிறப்பாக நடத்தியவரும் நூலாசிரியருமான – கவிஞர் இராம.வைரவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு “ இன்னும் எழுதப்படாத சிறுகதைகள் “ என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இம்மாத சிறுகதைப் போட்டியில் மலையரசி முதற் பரிசும் மணிமாலா இரண்டாவது பரிசும் இந்துமதி மூன்றாவது பரிசும் பெற்றனர். சிறந்த விமர்சனத்திற்கான முதற் பரிசு இந்துமதிக்கும் இரண்டாவது பரிசு விமலா ரெட்டிக்கும் கிடைத்தன. இவர்களுக்கு சிறப்பு விருந்தினர் கவிஞர் வைரவன் பரிசளித்து கவுரவித்தார். முகநூல் குழுவில் போட்டிச் சிறுகதைகளுக்கான சிறந்த கருத்தைப் பதிவு செய்த உமாசங்கருக்கு கீழை.அ.கதிர்வேலு பரிசளித்துச் சிறப்பித்தார். கழக துணைச் செயலாளர் கிருத்திகா முன்னதாக வரவேற்றும் நிறைவாக நன்றி நவின்றும் நிகழ்வினை நிறைவு செய்தார்.



- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்




Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்., 21 முதல் பிளானோ-டெக்சாஸில் புதியதோர் ஷீர்டி சாய்பாபா கோவில்

பிப்., 21 முதல் பிளானோ-டெக்சாஸில் புதியதோர் ஷீர்டி சாய்பாபா கோவில்...

மார்ச் 2 முதல் மகா சிவராத்திரி கொண்டாட்டம்

மார்ச் 2 முதல் மகா சிவராத்திரி கொண்டாட்டம்...

மல்லிகை மலர்- 3

மல்லிகை மலர்- 3...

பிப்., 17ல் சிங்கப்பூரில் கவிதைநூல்கள் அறிமுக விழா

பிப்., 17ல் சிங்கப்பூரில் கவிதைநூல்கள் அறிமுக விழா...

Advertisement
Advertisement

விதிமீறல் பேனர் : ஐகோர்ட் கண்டனம்

சென்னை : கோவையில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக அமைச்சர்களை வரவேற்று, கடந்த ஒரு வாரமாக விதிகளை மீறி பேனர் வைக்கப்பட்டதாக டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் ...

பிப்ரவரி 18,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us