சிங்கப்பூரில் நூல் வெளியீடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் நூல் வெளியீடு

பிப்ரவரி 19,2019  IST

Comments

சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் பிப்ரவரி 17 ஆம் தேதி தேசிய நூலக அரங்கில் பாவலர் இரா.வேங்கடாசலம் எழுதிய கவிதை நூல்களான “ தாய்மைத் தவிப்பு – தழுவும் பார்வை – மௌன விழிகள் “ ஆகிய நூல்கள் வெளியீட்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்தியது. இலக்கியக்களத் தலைவர் முனைவர் இரத்தின வேங்கடேசன் நிகழ்வுக்குத் தலைமை ஏற்றார். செல்வி இனியாள் ஸ்ரீநிதி இராஜகோபாலன் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்வு தொடங்கியது. எலும்பு மூட்டு சிறப்பு சிகிச்சை மைய இயக்குநர் டாக்டர் எஸ்.எஸ்.சாத்தப்பன் – சத்யா அன்பழகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி வெற்றித் தமிழர் பேரவைத் தலைவர் கவிஞர் தி.கோவிந்தராசு நூலாய்வு செய்து சிறப்புரை ஆற்றினார். அவர் தமதுரையில் கவிதை எப்படி இருக்க வேண்டும் – கவிதையின் தாக்கம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை தேசியக்கவி பாரதியார் – பாரதிதாசன் ஆகியோர் கவிதைகளை மேற்கோள் காட்டி பாவலர் வேங்கடாசலத்தின் நூல்களிலுள்ள நயங்களை நூலாசிரியரே வியக்கும் வண்ணம் எடுத்துரைத்தார். கண்ணதாசனையும் வைரமுத்துவையும் விட்டு வைக்காத கோவிந்தராசனார் வளரும் கவிஞர்களுக்கு வகுப்பெடுக்கும் விதமாக சிறப்புரை ஆற்றினார்.

மூத்த பத்திரிகையாளரும் இலக்கியக் கள மதியுரைஞருமான வெ.புருஷோத்தமன் இறையுணர்வோடு வாழ்த்துரை ஆற்றியதோடு தினமலர் நாளேடு இணையவழி இருபது இலட்சம் வாசகர்ளிடை உலா வந்து உலகத் தமிழர்களிடை உறவுப் பாலமாக விளங்கி வருவதைச் சுட்டிக் காட்டியதோடு நவீன தொழில் நுட்ப அறிவியலைப் பயன்படுத்தி தினமலர் செய்து வரும் புதுமைகளை விளக்கினார். விரைவில் தொடங்கவிருக்கின்ற புதிய பகுதியான தமிழ் அமைப்புக்களின் – ஆலயங்களின் விபரங்களையும் தெரிவித்து ஒத்துழைக்க வேண்டுகோள் விடுத்தார்.

கவிமாலை அமைப்பின் தலைவர் கவிஞர் இறைமதியழகன் வாழ்த்துரை வழங்கினார். டாக்டர் சாத்தப்பன் நூல்களை வெளியிட முதற் பிரதியை வள்ளல் ஜோதி மாணிக்கவாசகம் பெற்றுக் கொண்டார். பெரியார் சமூக மன்றத் தலைவர் வீ.கலைச்செல்வம் உள்ளிட்ட தமிழ் அமைப்புக்களின் தலைவர்கள் தொடர்ந்து பெற்றுக் கொண்டனர். கவிஞர் இரா.அசோக்குமார் திரைப்படப் பாடல்களைப் பாடி அசத்தினார். நவபாவாஸ் நாட்டியப் பள்ளி மாணவிகள் சீமா ராணி கோயல் – இந்திரா ஆகியோரின் பரத நாட்டியம் நிகழ்விற்குச் சுவை கூட்டியது.

நூலாசிரியர் தக்க வகையில் ஏற்புரை நல்கினார். முன்னதாக சரளா தேவி தங்கதுரை வரவேற்புரை ஆற்றினார். கவிஞர் ந.வீ.விசயபாரதி கவிநயத்தோடு நிகழ்வினை நெறிப்படுத்தினார். நிகழ்வினை கவிஞர் உஷா – கோ.மெய்யப்பன் –வெ.தங்கதுரை – அ.குணரத்தினம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். கண்ணன் சேஷாத்திரி நன்றி நவில விழா இனிதே நிறைவேறியது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பாரதீய மந்திர், ஆக்லாந்து

பாரதீய மந்திர், ஆக்லாந்து...

மார்ச் 23 முதல் ஏப்ரல் 28 வரைதமிழ் மொழி விழா

மார்ச் 23 முதல் ஏப்ரல் 28 வரைதமிழ் மொழி விழா...

மார்ச் 23ம் திருக்குறள் விழா

மார்ச் 23ம் திருக்குறள் விழா...

ஏப்ரல் 27ல் ஆல்பனி தமிழ் சங்கத்தின் சித்திரைத் திருநாள் கொண்டாட்டம்

ஏப்ரல் 27ல் ஆல்பனி தமிழ் சங்கத்தின் சித்திரைத் திருநாள் கொண்டாட்டம்...

Advertisement
Advertisement

ஒடிசாவில் பள்ளிகள் நேரம் மாற்றம்

புவனேஸ்வர் : அடுத்த சில நாட்களில் ஒடிசாவில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் நேரங்களை மாற்ற ஒடிசா அரசு அறிவுறுத்தி உள்ளது. ...

மார்ச் 24,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us