சான் ஆண்டோனியோவில் தேவதைகளின் சந்திப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சான் ஆண்டோனியோவில் தேவதைகளின் சந்திப்பு

பிப்ரவரி 19,2019  IST

Comments (3)

 “அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்

அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை

உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்

உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;” -பாரதியார்.

பெண்கள் என்றாலே எவ்வயதினராயினும் 'தேவதைகள்' தான். வீட்டில் தந்தையோ,கணவரோ போற்றி பேணும் பெண்கள்,என்னதான் இருந்தாலும் தங்கள் தோழிகளைக் கண்டால் அந்த உற்சாகமே வேறு !

இந்தியாவாக இருந்தால் அடிக்கடி திருமண நிகழ்ச்சிகளிலோ, உறவினர் வீடுகளிலோ பெண்கள் சந்தித்துக் கொள்ள ஏகப்பட்ட வாய்ப்புகள் உண்டு. அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் பெண்களுக்கு அத்தகைய வைபவங்கள் மிகக்குறைவு.

ஒரு நாள்,ஒரு பொழுது பெண்கள் மட்டுமே கூடி மகிழ்ந்தால் என்ன, என்ற (தோழி வித்யா வாழ்க ) அற்புத எண்ணத்தின் முடிவு தான் இந்த சான் ஆண்டோனியோ 'தேவதைகளின் சந்திப்பு'. பெண்கள் நினைத்தால் சாதிக்க முடியாதது என ஏதும் உண்டோ !

'ஸ்பைஸ் ரெஸ்ட்டாரெண்ட்' அமர்க்களப்பட்டது அன்று- பிப்ரவரி 15 ,2019 !

குடும்பத் தலைவிகள்,வேலைக்குச் செல்லும் பெண்கள் என தினமும் உழைக்கும் அனைத்து பெண்களும், தங்களுக்கு விரும்பிய உடையில், பிடித்த அணிகலன்களில், 'ஒரு நாள் முதல்வர்' என்ற ரீதியில் வந்து கலந்து கொண்டு, இசையும் நடனமுமாக அங்குள்ள கேளிக்கை அறையில் தங்கள் மனம் திருப்தி அடையும் வரை ஆடிப்பாடி உற்சாகமாக, இரவு உணவை சேர்ந்தே சாப்பிட்டு அகமகிழ்ந்தனர்.

அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சந்திக்கும் ஆசைத் தோழிகளை ஒருசேர,ஓரறையில் சந்தித்து பேசி,சிரித்து,விரும்பிய இசையில்,விரும்பிய நடனமாடி என ஓர் அன்புப்பாலம் அமைத்து, தங்கள் நட்பை விசாலமாக்கிக் கொண்டார்கள் என்றே சொல்லலாம்.

தாங்கள் அனுபவித்த அந்த உற்சாக நேரத்தைப் பகிர்ந்து கொண்டபோது,வீட்டிலுள்ளோர் மனமகிழ்ந்து ஊக்கமளித்தது மிகச் சிறப்பு.

தங்கள் குடும்பத்தையும்,பணியையும் சதா சிந்தித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு இத்தகைய அவுட் லெட்- தோழிகளுடனான சந்திப்புகள் மிகவும் அவசியமானதே.

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்


Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பாரதீய மந்திர், ஆக்லாந்து

பாரதீய மந்திர், ஆக்லாந்து...

மார்ச் 23 முதல் ஏப்ரல் 28 வரைதமிழ் மொழி விழா

மார்ச் 23 முதல் ஏப்ரல் 28 வரைதமிழ் மொழி விழா...

மார்ச் 23ம் திருக்குறள் விழா

மார்ச் 23ம் திருக்குறள் விழா...

ஏப்ரல் 27ல் ஆல்பனி தமிழ் சங்கத்தின் சித்திரைத் திருநாள் கொண்டாட்டம்

ஏப்ரல் 27ல் ஆல்பனி தமிழ் சங்கத்தின் சித்திரைத் திருநாள் கொண்டாட்டம்...

Advertisement
Advertisement

அரசியல் கட்சிகளுக்கு அதிகாரி கடிதம்

சென்னை, 'தேர்தல் பிரசாரம் ஓய்ந்த பின், தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது' என, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹூ கடிதம் எழுதி ...

மார்ச் 23,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
sahayadhas - chennai,India
21-பிப்-201916:09:21 IST Report Abuse
sahayadhas Welcome dear Sis
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
sahayadhas - chennai,India
20-பிப்-201914:24:17 IST Report Abuse
sahayadhas நல்ல செய்தி.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Sheela Ramanan - San Antonio,Texas,
21-????-201907:03:47 IST Report Abuse
Sheela RamananThank u Sahayadhas -Sheela Ramanan....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us