என்று தணியும் இந்த ரத்த தாகம்- புல்வாமா பயங்கரம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

என்று தணியும் இந்த ரத்த தாகம்- புல்வாமா பயங்கரம்

பிப்ரவரி 20,2019  IST

Comments

பிப்ரவரி 14 ஆம் தேதி, ரத்தத்தை உறைய வைத்தது புல்வாமாவில் நடந்த மறக்கவோ மன்னிக்கவோ முடியாத அதிபயங்கரம். நம் ராணுவ வீரர்களை சுக்குநூறாக தூக்கியெறிந்த, ரத்தத்தை கொதிக்க வைத்த சம்பவம். ஒரு ராணுவ வீரர் என்பவர் தனி ஆள் இல்லை, சிலந்திவலை போல குடும்ப உறவுகளால் பின்னப்பட்டவர். ஒரு மகனாக,சகோதரனாக, கணவனாக, தந்தையாக அவர் பெரும் பொறுப்புகளை சுமந்துகொண்டே அங்கு எல்லைப்பணியில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் யாரும் இறந்தாலும், பிறந்தாலும் உடனே வர இயலாது. அவரே குடும்பத்தின் ஆணிவேராகவும் இருப்பார்.

அப்படி ஒரு வீரர் இல்லை,நாற்பது வீரர்களை அவரவர் குடும்பத்தினர் இழந்து நிற்கின்றனர், பயங்கரவாதத் தாக்குதலால்.இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் மக்கள் கொதித்துப் போய் உள்ளனர். என்ன செய்வதென்றே தெரியாத நிலையில், இறந்த நம் சகோதரர்களுக்கு ஆத்மா சாந்தி அடையவும், அவர்கள் குடும்பங்களுக்கு மனதைரியம் அளிக்கவும் சாதி,மத பேதமின்றி பிரார்த்தித்து,மௌன அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

பிப்ரவரி 17 ஆம் தேதி,மாலையில் சான் ஆண்டோனியோவில் உள்ள பிரபலமான குரோசரி ஸ்டோர் முஸ்தபா, அதன் உரிமையாளர் திரு.சையது அவர்களின் ஏற்பாட்டில் அனைத்து இந்திய சமூகங்களையும் ஒன்றுகூடி, ஒரு இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தொலைதூரத்தில் வாழ்ந்தாலும், நம் மண்ணில் ஒரு துயரம் ஏற்படின், நம் மனம் துடித்துப்போகிறது, அதுதான் நம் மண்ணின் பந்தம் ! நாட்டுக்காக உயிர் இழந்த அத்தனை உயிர்களுக்கும் ஆத்மா அமைதியடையட்டும்.

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு...

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

ஏப்ரல் 28ல் நிழல்- நடன அரங்கம்

ஏப்ரல் 28ல் நிழல்- நடன அரங்கம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)