மஸ்ஸாசூசெட்ஸில் 17 ஏக்கரில் இந்து கோயில் வளாகம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மஸ்ஸாசூசெட்ஸில் 17 ஏக்கரில் இந்து கோயில் வளாகம்

பிப்ரவரி 22,2019  IST

Comments

 




மஸ்ஸாசூசெட்ஸ்: அமெரிக்கா, மஸ்ஸாசூசெட்ஸ், பெல்லிங்ஹாமில் புதிய இந்து கோயில் வளாகம் கட்ட 17 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது.


இந்த கோயில் 2 கட்டமாக கட்டப்பட உள்ளது. கோயில் முழுமையானதும், அதில் கருவறை, சமுதாய அரங்கம், வகுப்பறைகள், பணியாளர்கள் குடியிருப்பு போன்றவை அமைந்திருக்கும். இந்த கோயில் வளாகத்தூடே ஒரு சிற்றோடை ஓடுகிறது. தற்போதைய கோயிலில் வழங்கப்படும் சேவைகள் மட்டுமல்லாமல், மதம், பல்வேறு இந்திய மொழிகள், இசை, நடனம் போன்ற வகுப்புகளும் புதிய கோயிலில் கற்றுத் தரப்படும்.



இந்த கோயில் வளாக நிலத்தை வாங்குவதற்கு, கோயில் நிர்வாகிகளும், அந்த பகுதி சமுதாயத்தினரும் எடுத்த முயற்சிகளை, பிரபஞ்ச இந்து சமுதாயத் தலைவர் ராஜன் ஜெட் பாராட்டியுள்ளார்.


பெல்லிங்ஹாமில் தற்போதைய பாஸ்டன் ஶ்ரீ காளிகாம்பாள் சிவன் கோயில், தினந்தோறும் திறக்கப்பட்டு, வழிபாட்டு சேவைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன; சமஸ்கிருத வகுப்புகள் நடத்தப்படுகின்றன; கல்வி நிதி உதவி வழங்கப்படுகிறது. கோயில் தலைவராக மங்களம் சாம்பமூர்த்தியும், அர்ச்சகராக சிவாச்சாரியார் பைரவிஜியும் உள்ளனர்.

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பாரதீய மந்திர், ஆக்லாந்து

பாரதீய மந்திர், ஆக்லாந்து...

மார்ச் 23 முதல் ஏப்ரல் 28 வரைதமிழ் மொழி விழா

மார்ச் 23 முதல் ஏப்ரல் 28 வரைதமிழ் மொழி விழா...

மார்ச் 23ம் திருக்குறள் விழா

மார்ச் 23ம் திருக்குறள் விழா...

ஏப்ரல் 27ல் ஆல்பனி தமிழ் சங்கத்தின் சித்திரைத் திருநாள் கொண்டாட்டம்

ஏப்ரல் 27ல் ஆல்பனி தமிழ் சங்கத்தின் சித்திரைத் திருநாள் கொண்டாட்டம்...

Advertisement
Advertisement

மீனாட்சி கல்யாணம்; இலவச அனுமதி

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாணத்தை காண உயர்நீதிமன்றம் உத்தரவுபடி வி.ஐ.பி., பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதலில் வரும் 3200 பேருக்கு இலவச அனுமதி ...

மார்ச் 23,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us