சிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா

மார்ச் 11,2019  IST

Comments

சிங்கப்பூர் 200 கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக கவிமாலை ஏற்பாட்டில் கவிஞர் மா.அன்பழகன் எழுதிய “ சிங்கப்பூர் சொல்வெட்டு 555 “ எனும் நூல் வெளியீட்டு விழா தேசிய நூலக வளாக அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 200 ஆண்டுக் கால சிங்கப்பூர் முன்னோடிகளின் அரிய பதிவு இந்நூலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத் தகுந்ததாகும். விழாத் தலைமை - பொன்னாடை போன்ற சம்பிரதாய சடங்குகளின்றி விழா நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சிங்கப்பூரின் ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் எம். பாலசுப்பிரமணியம் 103 ஆவது பிறந்த நாளில் இவ்வரலாற்று ஆவணப் பதிவேடு வெளியிடப்பட்டது. விழாவில் வாழ்த்துரை வழங்கிய தமிழறிஞர் சுப. திண்ணப்பன் – சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலிலும் – லிட்டில் இந்தியா ஆர்க்கேட் பகுதியிலும் உள்ள கல்வெட்டைக் குறிப்பிட்டு அவைகளில் சிங்கம் – சிவ லிங்கம் – முருகன் வேல் – விஷ்ணு – நாமம் – சூலம் – இந்து சமயக் கடவுளர் – தமிழ்ப்போர் – தோட்டம் – படித்துறை – சேர சோழ பாண்டிய தேசத்தைச் சேர்ந்த தமிழர்களால் தோற்றுவிக்கப்பட்டதற்கான குறிப்பு – 1827 – 29 ஆங்கில வடிவமும் காணப்படுகிற அரிய செய்திகளை வெளியிட்டார்.

விழாவில் சிங்கப்பூர் இந்து அறநிலைய வாரியத் துணைத் தலைவர் இரா.தினகரன் மற்றும் கேசவபாணி ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர். விழாவில் வயது முதிர்ந்த ( 103 ) பெரியவர் நூலை வெளியிட அரங்கிலேயே குறைந்த வயதுடைய ( ஐந்து வயது ) குழந்தை நித்திலா முதல் நூலைப் பெற்றிட அரங்கமே அதிருமாப் போலே கரவொலி எழுந்தது. 103 ஆவது பிறந்த நாளை எம்.பாலசுப்பிரமணியம் தம்பதி சமேதராகக் கேக் வெட்டிக் கொண்டாடினார். “ லிஷா “ சார்பாக சீர் வரிசை எடுத்து வரப்பட்டது. நீண்ட கரவொலியால் பெரியவர் பல்லாண்டு வாழ வாழ்த்தப்பட்டது.

நூலாசிரியர் மா.அன்பழகன் இந்நூலில் இடம் பெறத் தகவல் தந்தவர்கட்கும் பல்வேறு வகையில் துணை நின்றோருக்கும் தக்க வகையில் தமது ஏற்புரையில் நன்றி கூறினார். அரங்கம் நிறைந்த இவ்விழாவில் பங்கேற்ற அனைவரும் இவ்வரலாற்று நூலைப் பெற்றுச் சென்றனர். ஒரு மணி நேரத்தில் விழா நிறைவு பெற்றது ஒரு சாதனைதான்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பாரதீய மந்திர், ஆக்லாந்து

பாரதீய மந்திர், ஆக்லாந்து...

மார்ச் 23 முதல் ஏப்ரல் 28 வரைதமிழ் மொழி விழா

மார்ச் 23 முதல் ஏப்ரல் 28 வரைதமிழ் மொழி விழா...

மார்ச் 23ம் திருக்குறள் விழா

மார்ச் 23ம் திருக்குறள் விழா...

ஏப்ரல் 27ல் ஆல்பனி தமிழ் சங்கத்தின் சித்திரைத் திருநாள் கொண்டாட்டம்

ஏப்ரல் 27ல் ஆல்பனி தமிழ் சங்கத்தின் சித்திரைத் திருநாள் கொண்டாட்டம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us