ஹெலிகாப்டரில் இருந்து 'பூ மழை'- சான் ஆண்டோனியோவில் இந்துக் கோவிலில் 30 ஆம் வருட கும்பாபிஷேகம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஹெலிகாப்டரில் இருந்து 'பூ மழை'- சான் ஆண்டோனியோவில் இந்துக் கோவிலில் 30 ஆம் வருட கும்பாபிஷேகம்

மார்ச் 16,2019  IST

Comments

விண்ணுலகில் இருந்து தேவர்களும் கடவுள்களும் ஆசிர்வதிக்க, மண்ணுலக மாந்தர்கள் புடை சூழ, சங்குசக்ரதாரிக்கு சர்வாலங்கார பூஜைகள் நடக்க, சிவனும்,இன்ன பிற தெய்வங்களும் அதனை ரசிக்க, கொட்டுமேளம் முழங்க, மஹாமந்திரங்கள் உச்சரிக்க, மங்களகரமான சுபமுகூர்த்த வேளையிலே, பொற்கலசங்களுக்கு புண்ணிய தீர்த்தாபிஷேகம் நிகழ, ஆஹா,,! என்ன தவம் செய்தோமோ !

பாக்கியம் பெற்ற சான் ஆண்டோனியோ பெருமக்கள் என்ன தவம் செய்தீர்களோ ! காணக் கண்கொள்ளா பேரின்பத் திருநாளாம் அந்த ஐந்து நாட்கள் ! இக்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெறும். இம்முறை அவ்விழாவும், 30 ஆம் வருட விழாவும் இணைய, மிகச் சிறப்பானதொரு பெருவிழாவாக மாறியது !

ஐந்து நாட்கள்- காலையும்,மாலையும் சர்வ அலங்காரங்கள், அபிஷேகங்கள்,ஆராதனைகள், அர்ச்சனைகள் என களை கட்டியது. இரு நேரமும் பிரசாதங்கள் வழங்கப் பட்டன. தினமும் குறைந்தது நூறு பேர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.

விழாவின் இறுதி நாளில் திருக்கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம். இக்கோவிலின் பிரதான குருக்கள்கள்-திரு. கிருஷ்ணசாமி பட்டர் மற்றும் ராமலிங்க சாஸ்திரி, இவர்கள் இருவரின் மேன்மையான கடின உழைப்பும், அக்கறையுமே சான் ஆண்டோனியோவில் இப்படியொரு மலைக்கோவில் சிறக்கக் காரணம் என்றால் மிகையாகாது. இக்கும்பாபிஷேகத்திற்கு, மேலும் இரு குருக்கள்கள் வந்திருந்து சிறப்பித்தனர். மகேஸ்வர பிரசாத் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.

சான் ஆண்டோனியோவில் சமீபத்தில் ஒன்பதாம் ஆண்டு விழாவினை சிறப்பாகக் கொண்டாடிய 'கலாலயா' பள்ளியின் பாட்டும் நடனங்களும், டான்சர் பிரேம் அளித்த அற்புதமான சிவதாண்டம், பாலவிகாஸ் குழந்தைகளின் நிகழ்ச்சிகள், காவேரிநாட்டிய யோகாவின் சிறந்த நாட்டியங்கள் மற்றும் ஹூஸ்டன் இசைப்பள்ளியிலிருந்து வந்து பங்குகொண்டது என ஒப்பற்ற கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடந்தது.

ஐந்தாம் நாள் அன்று சுமார் நானூறுக்கும் மேற்பட்டோர் வந்திருந்து, குடமுழக்கைக் கண்டுகளித்தனர். புது வாகனங்களில் உற்சவ மூர்த்திகள் பேரானந்தமாய் கோவிலை உலா வர, பக்தர்களின் மகிழ்ச்சி கோஷத்தில் தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர். நிறைய இளைஞர்களின் தன்னார்வலத் தொண்டு மிகவும் பாராட்டத் தக்கது. கோவில் நிர்வாக அதிகாரிகளின் சிறந்த அணுகுமுறை, இப்பெரும் விழாவினை அழகாக கொண்டுசெல்ல முடிந்தது. புதிய உறுப்பினர்களின் அறிமுகவிழாவும் நடைபெற்றது.

ஆண்கள் அனைவரும் கட்டாயமாக வேஷ்டி- சட்டை, அங்கவஸ்த்திரம் என உடுத்தி, பெண்கள் வித விதமான வண்ணங்களில் தங்கள் கலாச்சார உடைகள் அணிந்து வந்திருந்தனர். அனைவருக்கும் ஆச்சரியம் ஊட்டும் வண்ணம், குடமுழுக்கு நடந்த வினாடிகளில் வானில் ஹெலிகாப்டர் பறந்து வந்து, மலர்கள் பெருவாரியாகத் தூவி, காண்போரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.

இப்பேரானந்த பெருவிழாவினைக் கண்டு அருள் பெற்று, விருந்துண்டு, மனமும்,வயிறும் குளிர மக்கள் ஆனந்தமாய் விடைபெற்றனர் !

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பாரதீய மந்திர், ஆக்லாந்து

பாரதீய மந்திர், ஆக்லாந்து...

மார்ச் 23 முதல் ஏப்ரல் 28 வரைதமிழ் மொழி விழா

மார்ச் 23 முதல் ஏப்ரல் 28 வரைதமிழ் மொழி விழா...

மார்ச் 23ம் திருக்குறள் விழா

மார்ச் 23ம் திருக்குறள் விழா...

ஏப்ரல் 27ல் ஆல்பனி தமிழ் சங்கத்தின் சித்திரைத் திருநாள் கொண்டாட்டம்

ஏப்ரல் 27ல் ஆல்பனி தமிழ் சங்கத்தின் சித்திரைத் திருநாள் கொண்டாட்டம்...

Advertisement
Advertisement

எம்எல்ஏக்கள் பதவி பறிபோகும்: ஸ்டாலின்

தர்மபுரி : தர்மபுரியில் திமுக வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார்.தர்மபுரி லோக்சபா தொகுதி வேட்பாளர் செந்தில் குமார், அரூரில் சட்டசபை தொகுதி ...

மார்ச் 22,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us