மினசோட்டாத் தமிழ்ச்சங்க பொங்கல் விழா, தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மினசோட்டாத் தமிழ்ச்சங்க பொங்கல் விழா, தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம்

மார்ச் 18,2019  IST

Comments

சங்கமம் - வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில், மினசோட்டாத் தமிழ்ச்சங்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா மற்றும் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம் சங்கமம் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு தமிழ்ச் சங்கத்தின் 11 ஆவது சங்கமம் விழாவாக கடந்த பிப்ரவரி 9 ஆம் நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் தனிச்சிறப்புடன் கொண்டாடப்படும் சங்கமம் விழா, இம்முறை தமிழகத்தில் இருந்து அழைக்கப்பட்டிருந்த “தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையம், மதுரை' கிராமியக்கலைகளில் சிறந்த 11 கலைஞர்களின் கலை நிகழ்ச்சியும், மினசோட்டாவில் உள்ளவர்களின் திறமையையும் மேடையேற்றினர். மலரும் மொட்டும் நிகழ்வில், குழந்தைகள் தங்களின் மழலை மொழியால் பேசி, பார்த்தோர் மனத்தைக் கொள்ளைக் கொண்டனர்.

சு.வெங்கடேசனின் 'வேள்பாரி' நாடகம், முதன் முறையாக மினசோட்டாத் தமிழ்ப்பள்ளி மாணாக்கர்கள் நடிப்பில் மேடையேறியது அனைவரது பாராட்டையும் பெற்றது. மினசோட்டாவில் உள்ள சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு குழுக்களாக அமைத்து வண்ண உடையில் ஆடியதும், பாடியதும் அனைவரையும் கவர்ந்தது. பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து சிறப்புடன் விளங்கும் நமது பாரம்பரிய தமிழர் மரபுக்கலைகளை அமெரிக்காவில் மினசோட்டாவில் மேடையேற்றியதும், நேரில் கண்ட சுமார் 800 பார்வையாளர்களுக்கும் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது என்றால் மிகையில்லை.

உலகத்தாய் மொழி தினம் - ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 21 ஆம் திகதி உலகெங்கும் கொண்டாடப்படும் உலகத்தாய் மொழிதினம், மினசோட்டாவில் பிப்ரவரி 23 ஆம் திகதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மினசோட்டத்தமிழ்ச்சங்கம் இதனை தொடர்ந்து 7 ஆண்டுகளாகக் கொண்டாடி வருகிறது. குழந்தைகளுக்குப் பேச்சுப் போட்டியும், பெரியர்வர்களுக்குக் கவிதை மற்றும் கட்டுரைப் போட்டியும் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்பித்தது.

தமிழ்த் திருவிழா - பிப்ரவரி மாதம் 21 ஆம் திகதி அன்று மினசோட்டத்தமிழ்ப் பள்ளியில் படிக்கும் சுமார் 320 மாணவர்களுக்காக முதல் முறையாக தமிழ்த் திருவிழா நடத்தப்பட்டது. இதில் தமிழ்ச்சார்ந்த போட்டிகள் குழந்தைகளுக்காகவும், குழந்தைகள் செய்து கொண்டுவந்த விளக்கப்படங்கள் மற்றும் காட்சி அமைப்புகளை பார்வையாளர்களுக்கு அவை குறித்த விளக்கமும் அளித்தனர். பரிசுகளையும் பெற்றனர். குழந்தை மற்றும் பெற்றோர்களின் முகத்தில் அளவிடமுடியா மகிழ்ச்சியைக் காண முடிந்தது.

- தினமலர் வாசகர் சுந்தரமூர்த்தி

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

ஏப்ரல் 28ல் நிழல்- நடன அரங்கம்

ஏப்ரல் 28ல் நிழல்- நடன அரங்கம்...

ஏப்ரல் 20, 21ல் திருமுறை இசை

ஏப்ரல் 20, 21ல் திருமுறை இசை...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)