குடும்பம் குதூகலம் கொண்டாட்டம்!- துபாயில் ஏழு மணி நேர கலைநிகழ்ச்சி. நிறைந்த அரங்கு, நிறைந்த மனது | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

குடும்பம் குதூகலம் கொண்டாட்டம்!- துபாயில் ஏழு மணி நேர கலைநிகழ்ச்சி. நிறைந்த அரங்கு, நிறைந்த மனது

மார்ச் 19,2019  IST

Comments

துபாய் எமிரேட்ஸ் கலையரங்கில், “துபாய் ஃபேமிலி டேலண்ட்ஸ்” - டி.எஃப்.டி- யின் “குடும்பம் குதூகலம் கொண்டாட்டம்!”- கலை நிகழ்ச்சி நடை பெற்றது. கலர்ஸ் ஈவென்ட்ஸ் மற்றும் ரெட்ஸ்டார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு மாலை நான்கு மணி முதல் இரவு பதினோரு மணி வரை தொடர்ந்தது. கரோக்கி இசைப்பாடல்கள், பட்டிமன்றம், பலகுரல் நிகழ்ச்சி, நாடகம், “சமர்” தெருக்கூத்தின் நவீன வடிவம், வில்லுப்பாட்டு, வாத்திய இசை என ஏழு மணி நேரம் தொடர்ந்த கலைநிகழ்ச்சிகளை நிறைந்த அரங்கில் 600க்கும் அதிகமான மக்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.

பெரும் கலையனுபவத்தில் திளைத்து இருந்த மக்களின் தொடர் கரவொலியால், அரங்கம் அவ்வப்போது அதிர்ந்து அடங்கியது.

அமீரக பேச்சாளர்களைக்கொண்ட பட்டிமன்றம் சசிகுமார் தலைமையில் நடந்தது. நாட்டிய நிகழ்ச்சிகளுக்கான பயிற்சி, ஏற்பாடுகளை மோகன்ராஜ், வந்தனா விக்ரம் கவனித்துக் கொண்டனர். சமர் - தெருக்கூத்தின் நவீன வடிவம், “ஏ” மாத்தாலஜி நகைச்சுவை நாடகம் ஆகியன உள்ளிட்ட விழா ஏற்பாடுகள் கணேசன் ராமமூர்த்தி,பி.சி. மோகன், ராம், கண்ணன், பிரகாஷ், தாஜிதீன்,வெங்கட், ஆனந்த்குமார், விக்ரம் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடந்தன.”லைகர்” மற்றும் “லீப் ஸ்போர்ட்ஸ்” உட்பட சில நிறுவனங்கள் விழாவுக்கான அனுசரனை வழங்கியிருந்தன. 89.4 தமிழ் பண்பலை மற்றும் அமீரக வலை ஒளி ஊடக அனுசரனை வழங்கியிருந்தனர்.


இந்த விழா,ஒரு மழைநாளின் குளிர் மாலை நேரத்தில், மக்கள் மனங்களை முத்தமிழால் நிரப்பிய இதமான விழா.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

ஏப்ரல் 28ல் நிழல்- நடன அரங்கம்

ஏப்ரல் 28ல் நிழல்- நடன அரங்கம்...

ஏப்ரல் 20, 21ல் திருமுறை இசை

ஏப்ரல் 20, 21ல் திருமுறை இசை...

ஏப்ரல் 21ல் சுழலும் சொற்போர் இலக்கிய விழா

ஏப்ரல் 21ல் சுழலும் சொற்போர் இலக்கிய விழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)