1990 ம் ஆண்டு திரு.சுகுமாரன் முருகையனால் தோற்றுவிக்கப்பட்டது இந்தோ-பிரென்ச் கலை மற்றும் கலாச்சர பண்பாட்டு சங்கம். (பிரான்ஸ் நாட்டின் 1901 ம் ஆண்டு சட்ட விதிகளின் படி ) சவிக்கினி லே டெம்பிள் எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊர் பாரிஸ் மாநகரத்திற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 33 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. விலாசம் நெம்பர் 72 rue de provence 77176 savigny-le- temple.சென்ற செயற்குழு அங்கத்தினர்கள் தேர்தலில் 107 (நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் அனுதாபிகள் உள்ளார்கள்) அங்கத்தினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்: துணைத்தலைவர்கள்: கேசவன், பவனி கீர்த்தியாள் ராமு, கண்ணன் நந்தா; செயலர்கள்: தாமோதரன் நந்தா, லொலி, முத்துக்குமரன்; பொருளாளர்: நந்தா கண்ணன், அருள் மொழி; மக்கள் தொடர்பாளர்கள்: கணபதிசுந்திரமூர்த்தி, இளந்தோவன் சுந்திரமூர்த்தி, சிவா ஞானமகேஸ்வரன், ஜெயபால் ராமு. இது இரண்டு பிரிவாக செயல்படுகிறது.
பிரான்ஸ் அருள்மிகு மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் ஆலயம்ஒன்று பிரான்ஸ் அருள்மிகு மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் ஆலயம் மற்றொன்று இந்திய கலை மற்றும் கலாச்சர பண்பாடு சங்கம். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் மீனாட்சி, சுந்தரேஸ்வரர், விநாயகப்பெருமான், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், ஸ்ரீ லஷிமி சமேத நாராயணன் ஆஞ்சிநேயர் மற்றும் நவகிரங்கங்கள்.நமது தமிழ்நாட்டில் எல்லா கோவிகளில் நடைபெறும் அனைத்து உற்சவங்களும் வருடம் முழுவதும் நடைபெறுகிறது. வருடத்திற்கு 2 அல்லது 3 விழாக்களின்போது (பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு ) அரங்கமே நிறைந்துவழியும்(300 முதல் 400 பேர் நாள் முழுவதும் வந்து செல்வார்கள்) விழாக்களாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாக்களில் நமது கலாச்சார கலைகளான பரதநாட்டியம், காவடி, கரகம், மயிலாட்டம் போன்றவைகளுடன் திரைப்படயிசை நடனக்களும்,பட்டிமன்றம், கருத்தரங்கம், பேச்சுப்போட்டி, பிள்ளைகளின் பக்திப்பாடல்கள் போன்றவை இடம்பெறும். மேலும் பிள்ளைகளுக்கு தமிழ், நாட்டியம்,நடனம் போன்றவைகளின் வகுப்புகள் நடத்தப்படுகிறது.இச்சங்கம் நமது கலாச்சரத்தையும் கலைகளையும், மொழியையும் பக்திமூலமாகவும் நமது வருக்கால சந்ததியர்க்கு தெரியப்படுத்துகிறது. இக்கோவிலுக்கென்று 1428 சதுரமீட்டர் நிலம் சங்கத்தின் பெயரில் வாங்கப்பட்டுவிட்டது. பிரான்ஸ் நாட்டில் சொந்த நிலத்துடன்கூடிய கோயில் இது ஒன்றுதான்.- நமது செய்தியாளர் முத்துக்குமரன்
ஜெர்மனி பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை : ஐரோப்பிய தமிழர்கள் வேண்டுகோள்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.