தமிழ் மொழி விழா தொடக்க நிலை மாணவர்களுக்கான போட்டிகள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தமிழ் மொழி விழா தொடக்க நிலை மாணவர்களுக்கான போட்டிகள்

மார்ச் 23,2019  IST

Comments

சிங்கப்பூர் தமிழர் இயக்கம் இவ்வாண்டு தமிழ் மொழி விழாவை முன்னிட்டு தொடக்க நிலை மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகளை மார்ச் 17 ஞாயிறு அன்று சிங்கப்பூர் தமிழர் இயக்க இரு அரங்கிலும் நடத்தியது . பல்வேறு பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவிகள் சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தின் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தின் மூலமாக போட்டிகளுக்கு பதிவு செய்தனர் . மொத்தம் 195 மாணவிகள் கலந்து கொண்ட போட்டிகள் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெற்றது . மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் உட்பட கிட்டத்தட்ட 400 க்கு மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர் .

கட்டுரை போட்டி , பேச்சு போட்டி, மாறுவேட போட்டி , கதை சொல்லுதல் போட்டி , பாரதியார் பாடல்கள் போட்டி போன்ற போட்டிகள் ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியாக நடத்தப்பட்டது .கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது . போட்டியில் பங்குபெற்ற போட்டியாளர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு ஏப்ரல் 14 மாலை 6 மணியளவில் உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தின் ஏற்பாட்டில் வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நடைபெறும் தமிழ் மொழி விழா நிகழ்ச்சியில் வழங்கப்படும் என இயக்கத்தின் தலைவர் ரெ .செல்வராஜ் மற்றும் இயக்கத்தின் பொதுச்செயலாளர் நாராயணசாமி ஆகியோர் தெரிவித்தனர் .

- தினமலர் வாசகர் ராஜேந்திரன் விவேக்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஏப்ரல் 28 ல் மார்க்க தரிசனம்-ஒரு கண்ணோட்டம்

ஏப்ரல் 28 ல் மார்க்க தரிசனம்-ஒரு கண்ணோட்டம்...

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு...

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

Advertisement
Advertisement

பி.எப்., நிதிக்கு 8 சதவீத வட்டி

சென்னை, 'பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8 சதவீதமாக தொடரும்' என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பொது வருங்கால வைப்பு நிதிக்கு ஏப்.1 ...

ஏப்ரல் 26,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us