பிரான்சில் பங்குனி உத்திரம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரான்சில் பங்குனி உத்திரம்

மார்ச் 24,2019  IST

Comments

 

பிரான்சில் பங்குனி உத்திரம் அருள் மிகுமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மற்றும் கைவல்ய கற்பாகவிநாயகர் ஆலயத்தில் பாரிஸுக்கு அருகில் உள்ள கிரிங்கி நகரில் சனாதன தர்ம பக்த பரிபாலான சங்கததாரால் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. மார்ச் மாதம் 21 ம் தேதி காலையில் பக்தர்கள் யாவரும் ஆச்சார சீலர்களாக கோவிலுக்கு வந்து காவடி மற்றும் பால் குடம் இவைகளுக்கு பூஜை செய்து காவடி ஆட்டம் துவங்கியது. தொடர்ந்து பெண்கள் யாவரும் பால் குடம் ஏந்தி கோவிலை சுற்றி வந்து பால், பன்னீர், புஷ்ப காவடிகள் இறக்கி அவற்றால் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கும், பால முருகனுக்கும் வெற்றி வேலுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.

இந்த தருணத்தில் பக்தர்கள் இணைந்து விநாயகர் அகவல் கந்த சஷ்டி கவசம் முருகர் மற்றும் பல பக்திப்பாடல்கள் பாடினர். பக்தர்களின் அரோகரா கோஷம் மண்டபம் அதிர, ஆராதனை காட்டப்பட்டது. யாவருக்கும் விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம், குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம் பக்தர்கள் அன்னைவருக்கும் அன்னதானம்அளிக்கப்பட்டது. மாலை5மணிக்கு வள்ளி தேவானை சமேதராக முருகப்பெருமான் பொன்னூஞ்சல் விழா சிறுமிகள் வெண்சாமரம் வீச சிவாசாரியார்கள் ஊ ஞ்சல்பாடல்களுடன் ஊ ஞ்சல்ஆட்டி மிக சிறப்பாக நடைபெற்றது. யாவருக்கும் இரவு விருந்துடன் உணவு வழங்கப்பட்டது. முருகப்பெருமானின் அருள்கடலில் மூழ்கிய பக்தர்கள் மனம் குளிர வீடு திரும்பினார்கள்.

- நமது செய்தியாளர் முத்துக்குமரன்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு...

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

ஏப்ரல் 28ல் நிழல்- நடன அரங்கம்

ஏப்ரல் 28ல் நிழல்- நடன அரங்கம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us